/* ]]> */
Oct 212011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: தேவனின் கோவில் மூடிய நேரம்

படம் : அறுவடை நாள்(1986)

பாடியவர் : சித்ரா

இசை :இளையராஜா

மிக மிக சுகமான சோகப்பாடல்களில் ஒன்று..அருமையான லிரிக்ஸ்..படத்தின் டைட்டில் சாங்..பாடலின் இறுதி வரை ராசியின் முகம் தெரியாமலே ஒரு சஸ்பென்ஸில் கொண்டு போகப்பட்டிருக்கும்..அப்போதைய சினிமா உலகில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்கப்பட்ட படம்..கேட்கும் போதெல்லாம் பள்ளி நாட்கள் நினைவில் வருவதைத் தவிர்க்கவே முடியாது..

பாடலின் துவக்கத்தில் இளையராஜாவின் குரல் அத்தனை அழகு..கேட்கக் கேட்க பரவசம்..சித்ரா இவ்வளவு தான் உருக முடியும்..கரைய முடியும்..

தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே

இன்று என் ஜீவன் தேயுதே என் மனம் ஏனோ சாயுதே

தேவனின் கோவில்…

நானொரு சோக சுமை தாங்கி துன்பம் தாங்கும் இடி தாங்கி

பிரிந்தே வாழும் நதிக்கரை போல தனித்தே வாழும் நாயகி

இணைவது எல்லாம் பிரிவதற்காக இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக

மறந்தால் தானே நிம்மதி

தேவனின்…

ஒரு வழிப்பாதை என் பயணம் மனதினில் ஏனோ பல சலனம்(2)

கேட்டால் தருவேன் என்றவன் நீயே கேட்டேன் ஒன்று தந்தாயா

ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்

அழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்

நானோர் கண்ணீர் காதலி..

தேவனின் கோவில்

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>