/* ]]> */
Oct 092011
 

1.  அன்னா ஹஸாரேவின் ‘ உண்ணாவிரதம் திரைப்படம் ஆகிறதாம். ‘அந்தலானேகே தாஹா திவாஸ்( ஒரு போராட்டத்தின் பத்து நாட்கள் ) என்ற பெயரில் அன்னாவின் தாய்மொழியான மராட்டியில் தயாராகிவிட்டதாம். ஆறு தேசிய விருதுகள் பெற்ற சுமித்ராபாவே-சுனில் சுக்தாங்கர் ஆகிய இயக்குனர்கள் இரு இணைந்து எடுத்திருக்கிறார்களாம்.

பிபாஷா பாசு ராணா

2. ராணா டகுபதி நடிகர் தெலுங்கானா பந்த் பற்றியெல்லாம் கவலைப்படாமல்,  மும்பையில் பிபாஷாபாஷுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார். வயதில் மூத்த அந்த நடிகையின் பின்புலம் சரியில்லை என்று நடிகரின் உறவுக்காரர் , நடிகருக்கு அட்வைஸ்  பண்ணினார், ஆனால், ராணா  அவரை எதிர்த்துப் போட்ட போடில்  பொறிகலங்கிப் போனாராம் , உறவுக்கார நடிகர். அத்தோடு விடாமல், ‘ தெலுங்கானாவுக்கு  தேவுடு நடிகரின் பிள்ளை எதிர்ப்பு என்பதாக நியூஸ்  போட வைத்துவிடுவேன் என்று மிரட்டினாரானாம், ராணா. அடங்கிப்போனாராம், உறவுக்காரர்.

3. மணியான டைரக்டரும், ராஜவீதிக்காரரும், பாலா டைரக்டர் படம் பண்ணவேண்டும் என்பதிலும், அந்தக் கதைதான் வேண்டும் என்பதிலும் பிடிவாதமாக இருக்கிறார்களாம். ராவணன் நம்மாளு என்று சொல்கிற பாலா டைரக்டர் ஆந்திர தயாரிப்பாளருக்கு ஓ.கே. சொல்லமாட்டார் என்கிறார்கள். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் ஹீரோ அதிர்ஷ்டசாலி .’ பாணா காத்தாடி உயர உயரப் பறக்குமே ‘

காட்ரினா

4. ஒரு டி.வி. நிகழ்ச்சிக்காக தன்னுடைய ரசிகையை பைக்கில் ஏற்றிக்கொண்டு  மும்பை வீதிகளில் சுற்றினாராம்,  கேத்ரினா கைப். சமீபத்தில் தனது படத்துக்காக புல்லட் ஓட்டியதிலிருந்து இரு சக்கர வண்டிகளின் ரசிகையாகி விட்டார். பூஜா அகர்வால் என்ற அந்த ரசிகையின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனதாம்.

ஜெனிலியா தாவணி

5. ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ என்ற படம் இந்தியில் ரீமேக் ஆனபோது அதில் நடித்தாராம், ஜெனிலியா. இப்போது வெளியான ‘போர்ஸ்’ படமும் ஒரு ரீமேக் படம்தான். ‘காக்க காக்க’ விலும், இந்தியில் ஜெனிதான் நடிப்பாராம். அதனால் இவரை ‘ ரீமேக் டார்லிங்’ என்கிறார்கள்.

ரம்யா கிருஷ்ணா

6. நடுவர்களாக இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான் போலிருக்கிறது.  ஒரு டான்ஸ் போட்டிக்கு நடுவர்களாக  டான்ஸ் மாஸ்டரும்  ரம்ய நடிகையும் இருந்தபோது நடிகையை  லாயக்கில்லை  என்கிற பாணியில் ‘ ஒரு மூவ்மென்ட்டுக்கு அத்தனை டேக் வாங்கும் இவருக்கு என்ன தகுதி இருக்கிறது ,நடுவராக அமர்வதற்கு?’ என்று டான்ஸ் மாஸ்டர் அடித்த கமெண்ட் ரம்ய நடிகைக்கு கோபமூட்டி விட்டதால், இருவருக்குமிடையில் தகறாறு வந்துவிட்டது.

 

Tags : Tamil cinema bollywood cinema hot news on tamil actress and bolly actress and latest cinema news and movies

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>