குறும்படம் எடுப்பவர்களை இணையதளங்கள் தவிர தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன . ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை ஒளிபரப்பாகும் ” மாற்றுத்திரை ” நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது .
ஏற்கனவே யுடியுப் , பேஸ்புக் , நம் மூன்றாம்கோணம் போன்ற இணைய தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அனந்துவின் ” நல்லதோர் வீணை ” குறும்படம் இந்த வாரம் ” மாற்றுத்திரை ” நிகழ்ச்சியில் சனிக்கிழமை ( நாளை ) காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
மிகச்சிறப்பாக இயக்கி சமூக அக்கறையுடனான ஒரு தீமுடன் நல்லதோர் வீணையைப் படமாக்கிய அனந்துவை மூன்றாம்கோணம் மறுபடியும் பாராட்டுகிறது . இத்தனை பெரிய ரீச்சை அனந்துவுக்குக் கொடுத்திருக்கும் ஜெயா தொலைக்காட்சிக்கும் நன்றி .
நல்லதோர் வீணை குறும்படம் பற்றி மூன்றாம்கோணத்தில் முன்பே வெளியான விமர்சனங்களைப் படிக்க இங்கேயும்
இங்கும் சொடுக்கவும் ..
மேலும் பட சிறப்பான குறும்படங்களையும் திரைப்படங்களையும் இயக்கி அனந்து இன்னமும் புகழ் பெற வாழ்த்துக்கள் !
..மூன்றாம்கோணம் குழு ..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments