காலை வணக்கம்
இன்றைய பாடல்: மேகம் கருக்குது
படம்: ஆனந்த ராகம் (1980)
பாடியது: எஸ்.ஜானகி, யேசுதாஸ்
படத்தின் பெயருக்கு ஏற்றார் போல் பாடல்கள் அத்தனையும் அருமை..மிக இனிமையான இசையும், வரிகளும். எப்போதும் போல் காதல் காட்சிகளில் அவஸ்தைப்படும் சிவகுமாரை ரொம்ப கவனிக்க விட்டுவிடாமல் பின்னி எடுக்கிறார் ராதா…அழகிலும் சரி முக பாவங்களிலும் சரி. இவரைப்போல் குறையில்லாத அழகும் பிரமாதமான நடிப்புத்திறனும் ஒரு சேரப் பார்ப்பது கடினம்.
ஒரு மாதிரி ஃபோக் ஸ்டைல் பாடல், சொக்க வைக்கும் லொகேஷன், வரிகளில் கொப்பளிக்கும் காதல், தேன் தடவிக்கொண்டதோ என்று நினைக்க வைக்கும் யேசுதாஸின் குரல்…மயக்கும் பாடல்கள் வரிசையில் என்றும் இடம் உண்டு “மேகம் கருக்குது”.
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்கிது காத்து காத்து மழக்காத்து(2)
ஒயிலாக மயிலாடும் அல போல மனம் பாடும்
மேகம்….
தொட்டு தொட்டு பேசும் சிட்டு துள்ளி துள்ளி ஓடுவதென்ன(2)
தென்றல் பட்டு ஆடும் மொட்டு அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆச வந்து..
ஏதோ நெஞ்சில் ஆச வந்து என்னென்னமோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது வாடக் குளிரில் வாடுது மனசு
மேகம் கருக்குது….
பூவுக்குள்ள வாசம் வச்சான் பாலுக்குள்ள நெய்ய வச்சான்
கண்ணுக்குள்ள என்ன வச்சான் பொங்குதடி என் மனசு
கண்ணுக்குள்ள என்ன வச்சான் பொங்குதடி என் மனசு
பாத்த கண்ணு சொக்கி சொக்கி பைத்தியந்தான் ஆகிப்போச்சு…நீ..
நீராடி நீ வாடி ஆச மயக்கம் கூடுர வயசு
மேகம் கருக்குது..
தொகுப்பு
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments