/* ]]> */
Jul 122011
 

தமிழ் இலக்கிய உலகில் அதிகமான நண்பர்களையும் அதிகமான எதிரிகளையும் கொண்டிருப்பவர் சாரு நிவேதிதா. சாருவின் கிண்டலுக்குத் தப்பியவர்கள் யாருமில்லை. இதோ ஆனந்த விகடனில் 2009 இல் வெளியான ஒரு ஜாலி கேள்வி பதில் அவருடைய “ஒழுங்கின்மையின் வெறியாட்டம்” நூலிலிருந்து…

(நெலமை புரியாம இப்ப இது தேவையா ன்னு எடிட்டரும் நீயும் பொலம்புறது காதுல கேக்குது குப்பு ! எல்லாரையும் சகட்டு மேனிக்கு கிண்டல் பண்ணினவரு இவருன்னு தான் சொல்ல வரேன்..நோ, நோ ..நோ டென்ஷன்!)

1. நடிகர்களின் சிக்ஸ் – பேக் அலட்டல்கள்?

மிருகவதைத்  தடுப்புச் சட்டம் மாதிரி இதற்கும் ஒரு தடை போட்டால் தேவலாம்!

2. நமீதாவின்’ மச்சான்ஸ் தமிழ்’ ?

இயல் இசை நாடகத் தமிழுக்கு அப்புறம் நமீதா தமிழ். முத்தமிழறிஞரின் டி. வி புண்ணியத்தால் செம்மொழிக்குக் கிடைத்தது நான்காம் தமிழ்!

3. ராமதாஸின் மது விலக்குக் கொள்கை?

டாக்டருக்கு டயாபடீஸ், அதற்காக எட்டு கோடித் தமிழர்களும்  காப்பியில் சர்க்கரை போட்டுக் குடிக்கக் கூடாது என்று கூட போராட்டம் நடத்துவார்!

4. ஈழத்தமிழர் பிரச்சினைக்காக திமு கழக எம். பிக்கள் ராஜினாமா?

கருணாநிதி அமெச்சூர் நாடகக் குழுவின் குறுகிய காலத் தயாரிப்பு!

5. நமீதா, நயன்தாராவுக்குக் கோவில் கட்டத் துடிக்கும் தமிழர்கள்?

அவர்கள் என்ன செய்வார்கள் ! பாவம், அந்த அளவுக்கு sexual poverty!

6. ரீமிக்ஸ் பாடல்கள், ரீமேக் படங்கள்?

வெரி குட் !

7. சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் ?

வெரி பேட் !

8. டி. ராஜேந்தர், பேரரசு, ஜே. கே. ரித்தீஷ் வகையறாக்கள் குறித்து?

தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாத்தணும் ! – நன்றி ரஜினிகாந்த்

9. ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கிடைத்த இறுதி மரியாதை ?

ச்சே, ஜஸ்ட் மிஸ்டு !

10. சாகித்ய  அகாடமி விருது ?

லாட்டரிச் சீட்டைத் தடை செஞ்சாச்சுன்னு சொன்னாங்களே ?

11. தீபாவளி , பொங்கல் டி.வி பட்டிமன்றங்கள் ?

எல்லை தாண்டிய பயங்கரவாதம் !

12. கருணாநிதி எழுதும் கவிதைகள்?

ஐய்யோ , மனுஷனை நி ம்மதியாத் தூங்கவிட மாட்டேங்கிறாரே !

13. டி. வி இலவசம், சிலிண்டர் இலவசம் , பொங்கலும் இலவசம்?

அப்படியே குவார்ட்டர் ஓல்டு மாங்கும் இலவசமாக் கொடுத்தா மகராசன் நல்லா இருப்பாரு !

14. கண்கள் பனித்தன , இதயம் இனித்தது ?

வயிறு வலித்தது !

15. விஜயகாந்த் , சரத்குமார் ?

தமிழ்நாட்டில் நிச்சயம் புரட்சி வரும் – ஸ்டன்ட்  நடிகர்கள் உபயத்தால்!

16. ரஜினி – ஷங்கர் – ஐஸ்வர்யா ராய் கூட்டணியில் ” எந்திரன்” ?

இமயமலை பாபாவை ஏன் ஐயா கூட்டணியில் விட்டுவிட்டீர்கள் ?

17. மு.க. அழகிரி ?

ஆளை விடுங்கள் , அடி வாங்கத் தெம்பில்லை !

18. கலைஞர் கதை வசனம் எழுதும் படத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பீர்களா?

நிச்சயம் நடிப்பேன்…வாய் பேச முடியாத கேரக்டராக இருந்தால் !ஒரு வேளை மணி ரத்னம் இயக்கினாலும் நடிக்கலாம். அவர் தான் வசனங்களை கட் பண்ணிடுவாரே !

19. விஜய் கட்சி ஆரம்பிக்கப்போறாராம். அவர் கட்சிக்கு ஒரு பேர் வைங்களேன் ?

அ. மு . க – அப்பா முன்னேற்றக் கழகம் !

20. ஸ்த்ரீலோலனை பொம்பளைப் பொறுக்கின்னு சொல்லலாமா?

எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது !

21. ராக்கி சாவந்த்மாதிரி தமிழ்நாட்டில் எந்த நடிகை சுயம்வரம் வைத்தால் நீங்கள் கலந்து கொள்வீர்கள்?

நிச்சயம் முமைத்கான் தான் !

22. தமிழில் உங்களுக்குப் பிடிக்காத வார்த்தை ?

ஒன்று இல்லை. நிறையவே இருக்கு . தணிக்கை , கலாச்சாரம் , ஒழுக்கம் , கற்பு…

23. பார்க் ஹோட்டல்ல ஒரு மரம் கூட இல்லையே ஏன்?

மைசூர் பாக்ல மைசூரைத் தேடலாமா ?

தொகுப்பு

..ஷஹி..

Tags : A humorous interview by controversial tamil writer charu nivedita

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>