/* ]]> */
Oct 202012
 

 பனிலிங்க தரிசனம் , வைஷ்ணவோதேவி

தரிசனம் , சிவகோரி தரிசனம் —–

ஆண்டவனின் அருளால் அடியேனுக்கு கிடைத்த பாக்கியத்தால் மனமகிழ்ந்து நிம்மதியாக உறங்கினேன் .அடுத்தநாள் அதிகாலை ஐந்து மணிக்கு “அமிர்தசரசை ” நோக்கி புறப்பட்டோம் .ஏழு மணிநேரப்பயணம் .270 கிலோமீட்டர்.

ஏப்ரல் 13-ம் தேதி 1919–ம் வருடம் –E.H.Dyer என்ற ஆங்கில அரக்கன் தன்னிச்சையாக முடிவெடுத்து நடத்திய படுகொலை நடந்த இடம்

முதலில் “ஜாலியன் வாலாபாக் ” சென்றோம் துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து, செய்வதறியாது தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளமக்கள் குதித்த கிணற்றைப் பார்த்த போது அனைவரும் மௌனமாகிப் போனோம் . சில ” ஏன் “-களுக்கு பதில் கிடையாது ஒற்றுமையின்மையும் தேசத் துரோகிகளும் , “எட்டப்பர் “களும் , தான் நம்மை வெள்ளைக் காரனுக்கு அடிமைப்படுத்தியது . 1913-ஏப்ரல்மாதம்13-ம் தேதி . இந்தியா முழுவதும் எந்த விதமான கூட்டமும், மாநாடும் நடைபெறக் கூடாது என்று ஆங்கில அரக்கர்கள் தடைஉத்தரவுபோட்டிருந்தனர் . அமிர்தசரசில் ,பொற்கோவிலுக்கு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் ,ஆங்கில அரசை எதிர்த்து கூட்டம் ஒன்றுக்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கிட்டத்தட்ட 15,000, த்திலிருந்து 20,000 வரை –ஆண்களும், பெண்களும் ,வயதானவர்களும்குழந்தைகளுமாக மக்கள் கூட்டம் திரண்டது. தடை உத்தரவை மீறி மாநாடு நடப்பதைக் கேள்விப்பட்ட ( E.H.DYER ) இ .ச் .டயர் என்னும்ஆங்கிலேய அரக்கன் கோபமுற்று கூட்டம் நடந்த இடத்திற்கு ஐம்பது அரக்கர்களுடன் ( கையில் துப்பாக்கியுடன் ) வந்தான் .

மாநாடு நடந்ததோட்டமானதுஒருவழிப்பாதையாகவும் ,மூன்று புறம் உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டதாகவும் இருந்தது . எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி கூட்டத்தை நோக்கி சுடுமாறு கட்டளையிட்டான் .மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.பெரும்பாலானோர் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியாயினர் .மிதிபட்டு பலர் இறந்தனர் .

 

மக்கள் செய்வதறியாது திகைத்து அருகே இருந்த கிணற்றில் குதித்து மாண்டு போயினர் .

துப்பாக்கி சூட்டிற்கு பயந்து அப்பாவி மக்கள் குதித்து உயிர் விட்ட கிணறு

தொடர்ந்து பத்து நிமிடங்கள் நடைபெற்ற , ( 1650 rounds ) துப்பாக்கிச்சூட்டில் 379 பேர் மாண்டனர். 11,000 பேர் ,படுகாயமடைந்தனர் . டயர் என்னும் அந்த மனித மிருகத்தால் பாரத தேசமே கதிகலங்கி போயிற்று . இந்தப் படுகொலையால்,பிரிட்டீஷ் இராணுவத்தின் போக்கு மாற்றியமைக்கப்பட்டது . டயர் நிரந்தரமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டு,சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டார்.இந்நிகழ்ச்சி நமது தாய்நாட்டின் சுதந்திரத்துக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது .

ஜாலியன் வாலாபாகிற்கு வெகு அருகிலேயே சீக்கியர்களின் ” பொற்கோவில் ” கோவிலுக்கு வரும் ஆண்களுக்கு கைக்குட்டை போல் ஒரு துணியைக் கொடுத்து தலையில் கட்டிக்கொள்ள சொன்னார்கள் .பெண்களும் தலையை மூடவேண்டும் . பக்தர்களுக்கு வெய்யிலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிவப்பு கம்பளம் விரித்து அதில் குளத்து நீரை ஊற்றிக்கொண்டிருந்தார்கள். ஓரளவுக்கு சுடாமல் இருந்தது . கூட்டம்தான் பொற்கோவில் அழகுதான்.

பொற்கோவில் – அமிர்தசரஸ்

பஞ்சாப்இரவில் மின் விளக்கு அலங்காரத்தில் அருமையாக காட்சியளித்தது .பிறகு பொற் கோவிலிலிருந்து மதிய உணவுக்கு தங்குமிடம் வந்து சேர்ந்தோம் . உணவுக்குப்பின் “வாகா” பார்டர் புறப்பட்டோம் .

“வாகா”பார்டரில் அடியேனுக்கு கிடைத்த பாக்கியம் –தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டு எல்லைக் கதவுவரை (border-gate) சென்றுவரலாம்

வெய்யில் சுட்டெரித்தது அன்பர்களே வாகாபார்டருக்கு செவதானால் தயவுசெய்து கோடை விடுமுறை நாட்களில் செல்லாதீர்கள். கூட்ட நெரிசலும் ,கடும் வெய்யிலும் ,கொடுமையாக இருக்கும் .

வாகா பார்டரில் கூட்டத்தைப் பாருங்கள்

பிறகு தங்குமிடம் வந்து சேர்ந்தோம் . அடுத்தநாள் டெல்லி நோக்கிப்பயணம் .

 

பின்னால் தெரியும் பாலத்திற்கு மறுபுறம் சென்று மெல்லிய குரலில் பாடினாலோ (அ) பேசினாலோ ,அடியேன் அமர்ந்து இருக்கும் இடத்தில் தெளிவாக கணீரென்று கேட்கும் .ஆச்சரியம்தான்.—-குருஷேத்ரம்.– ஜ்யோதிசர் தீர்த்தம்

முடிவுரை

வழியில் குருஷேத்ர தரிசனம் .மகாபாரதப்போர் நடந்த இடம் .அமைதியாக இருந்தது. மிகவும் அழகாகவும் இருந்தது . மனித நடமாட்டமே இல்லை.

S.H. Ram sutar–என்பவரால் உருவாக்கப்பட்ட –இந்தியாவிலேயே,– வெங்கலத்தினால் செய்யப்பட்ட மிகப்பெரிய இரதம் .50x25x26-நீள,அகல,உயரம் .பிரம்மாண்டம்

காற்று பலமாக வீசியது. பிரயாணத்தின் இறுதிநாள் .குருஷேத்திரத்தில் சிலைகள் மிகவும் அழகாக வடிக்கப்பட்டிருந்தன .

 அம்பு படுக்கையில் பிதா மகன் பீஷ்மர்

பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட இடம்

பிறகு அங்கிருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர்ந்தோம் .மனம் இலேசாகவும் அமைதியாகவும் இருந்தது.

இரவு தங்கிவிட்டு அடுத்தநாள் விமானத்தில் சென்னை நோக்கிப் பயணம் .

சுபம்….

மீண்டும் சந்திப்போம்.

( 2011-ல் தரிசித்த பத்ரிநாத் ,கேதார்நாத்,கங்கோத்ரி, யமுனோத்ரி தொடரில் )

tags,

பனிலிங்கம் , வைஷ்ணவோதேவி , பகவத் கீதை , டெல்லி , புனிதப் பயணம் , விமானம் , பொற்கோவில் , ஜாலியன்வாலாபாக் , ஜெனரல் டயர்

jalianwala bagh , general diar , golden temple , delhi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>