/* ]]> */
Sep 062012
 

                        தால் ஏரி

அழகு ஏரியைத் தங்கமாக்கும் கதிரவனின் கதிர்கள் –

சமஸ்கிருத மொழியில் தால் ஏரி என்றால் மகாசரித் என்று அர்த்தம் இந்துக்களின் தெய்வமான துர்காதேவியின் இருப்பிடமாக கருதப்படுகிறது .பாரதத்தாயின் காஷ்மீர் என்ற கிரீடத்தின் தங்கப்பதக்கமாக கருதப்படும் இந்த அழகுமிகு தால் ஏரியைப் பராமரிக்க இந்திய அரசு ஆயிரத்துநூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது . உலகின் மிகப்பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்று .

இயற்கையாக உருவான இந்த பெருமை மிக்க ஏரி யானது கி.பி. ஆயிரத்து இருநூறில்  மொத்தம் எழுபத்தைந்து சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகஇருந்தது . ஆனால் தற்போது பதினெட்டு சதுர கி.மீட்டராக சுருங்கியுள்ளது . ஏரியின் ஆழமும் நாற்பத்தைந்து  அடியிலிருந்து பன்னிரண்டு அடியாக மாறியுள்ளது .           

குளிர்காலத்தில் வெப்பநிலையின் அளவு –மைனஸ் பதினொன்று டிகிரிக்கு கீழே செல்லும்பொது ஏரி  உறைந்துவிடும். அப்போது தால் ஏரியில் பனிச்சறுக்கு விளையாட்டுகள் நடைபெறும் . இதுவரை குறைந்த எண்ணிக்கையில்தான் ஏரி உறைந்துள்ளது . தால் ஏரியின் முக்கிய அம்சம் அங்குள்ள ‘’ போட் ஹவுஸ் ‘’ எனப்படும்  மிதக்கும் படகு   வீடுகளும், ‘’ஷிகாரா ’’எனப்படும் படகு சவாரிகளும்தான் .

”ஷிகாரா” என்றால் படகு .தால் ஏரியில் படகு சவாரி

படகு வீடுகள் இரண்டு , முன்று படுக்கை அறைகளுடன், வரவேற்பறை ,சாப்பாட்டு அறை , முற்றம் , என்று ஐந்து நட்சத்திர அமைப்புடன் சகல வசதிகளும் கொண்டதாக இருக்கும் .(ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பத்திரண்டில் தந்தையாருடன் சென்று தங்கியது ).ஒவ்வொரு படகு வீடுக்கும் ஒரு ஷிகாரா உண்டு. (கரைக்குச் சென்று வருவதற்கு ) .சமையலும் செய்து தருவார்கள். பணம் அதிகம் செலவாகும் . மாலை நான்கு மணிக்கு மேல் தால் ஏரிக்கு மக்கள் வர ஆரம்பிப்பார்கள் .நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரிக்கும் .

சூரியன் அஸ்தமிக்கும் போது ஏரியின்  அழகு வர்ணனைக்கு அப்பாற்பட்டது . நீண்டு பரந்த ஏரி, இதமாக வீசும்  குளிர்ந்த காற்று ,ஓங்கி உயர்ந்து கம்பீரமாக செல்லும் இமயமலையின் அடிவாரம் ஒருபுறம் , இந்தியாவின் பல்வேறு மாநிலத்து மக்கள் ,அயல்நாட்டு மக்கள் ,எங்கு திரும்பினாலும் வண்ண வண்ண பூக்கள் நிறைந்த தோட்டங்கள் , வியக்க வைக்கும் மரங்கள்,

வித்தியாசமான மரம் -நேரு பார்க் -காஷ்மீர்

குல்மார்க் ,சோனமார்க். சாரதா தேவி கோவில் –என்று சொல்லி கொண்டே போகலாம். மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டேன் .காஷ்மீர் எப்போதும்  நம் வசம் இருக்கவேண்டும் என்று (நீங்களும் பிராத்தனை செய்யுங்கள் அன்பர்களே) .

தொடரும்

பாபா நளினி

tags

amarnath , vaishnavodevi , pilgrimage , kashmir , pilgrimage , dal lake , lake , gulmarg , sonamarg , sarada devi temple , boat house

 

அமர்நாத் , வைஷ்ணவோதேவி யாத்திரை , கஷ்மீர் , ஆன்மீகம் , யாத்திரை , ஷாரதா தேவி ஆலயம் , சாரதா தேவி கோவில் , சோனாமார்க் , குல்மார்க்


ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>