/* ]]> */
Aug 082012
 

பால்டால்

அமர்நாத்யாத்திரையின் போதுகுறிப்பிடப்படவேண்டியஅம்சங்களில் ஒன்றுஉணவு பற்றியதாகும் .”லங்காஎனப்படும் இலவச உணவு  மையங்கள் ஏராளமாக இருக்கும்.
” லங்கார்” என அழைக்கப்படும் அன்னதான மையங்கள் .
இந்தியாவின் பலமாநிலங்களிலிருந்தும், சேவை மனப்பான்மையோடு மக்கள்உணவுதயாரித்துஇலவசமாகவிருந்தளிப்பார்கள்.சூடான,ருசியான உணவுகள். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், உணவை வீணாக்கக்கூடாது . குப்பைத்தொட்டிக்குஅருகேநின்றுகொண்டிருப்பார்கள் . தேவைக்கு அதிகமாக வைத்து , உண்ண முடியாமல் குப்பைத்தொட்டியில் உணவைப் போடுபவர்களை சூழ்ந்துகொள்வார்கள் . உண்ட பிறகுதான் விடுவார்கள்.
”ஜிலு ஜிலு குளுகுளு பிள்ளையார் ”ஒவ்வொரு லங்கார் வாசலிலும் தங்கள் இஷ்டதெய்வங்களை அலங்கரித்து வைத்திருப்பார்கள்..
கர்நாடகா , ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து -’விஸ்வஹிந்துபரிக்ஷத்போன்றஅமைப்புகள் நடத்தும்லங்காக்களில் மெதுவடை, பூப்போன்ற இட்லி, முறுகலானதோசை, தேங்காய்சட்னி, கமகமசாம்பார், போன்றவைகளும் கிடைக்கும் . வடஇந்தியர்கள் நடத்தும்லங்கா‘–க்களில் , பாதாம் பால் , ஜிலேபி ,பிரிஞ்சிசாதம், சப்பாத்தி, பராத்தா, குருமா, தால்(பருப்பு) இனிப்பு வகையறாக்கள். மசால்வடை , பகோடாஇன்னும் பல்வேறு வகையான உணவுப்பொருட்களை வழங்குவார்கள். பிஸ்கெட் ,சிப்ஸ்,மிக்ஸர் போன்றவற்றை எடுத்துக் கொண்டும் வரலாம் . இரவு ஒருமணி வரைக்கும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் .
 
மின்விளக்குத்தோரணங்களாலும் ,செயற்கைப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட  ” லங்கார் ” .
வாசலில் இரவு 10மணிக்கு மேல் நடனக்கச்சேரி ஆரம்பிக்கும் . நாமும் சேர்ந்து ஆடலாம். சிவபெருமானைப் பற்றிய புராணக்கதைகளை மேடை அமைத்து ஒப்பனையோடு நடிப்பார்கள். இரவு ஒருமணிக்கு மேல்தான் பால்டால் அமைதியாகும் .  தூங்குவது மிகவும் சிரமம்தான்.
 நம் பயணத்திற்கு வருவோம் . டோலிக்கு (பல்லக்கு)  முன்பணம் கொடுத்தாயிற்று . அதிகாலை மூன்று மணிக்கே புறப்படவேண்டும் என்றார்கள் அன்று இரவு முழுவதும் உறங்கவில்லை . 2 மணிக்கு பல் துலக்கி , காலைகடன்களை முடித்து விட்டு ( அந்தக்குளிரிலும் ,அந்நேரத்திலும் வெந்நீர் கிடைக்கும் ) . குளிப்பது சிரமம்தான் . உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டோம் . பல்லக்கு  தூக்கிகள் வந்தார்கள்.
இருபுறமும் இரண்டு நீளமான கனமான மூங்கில் கழிகள் , மத்தியில் ஒரு  வலையால் பின்னப்பட்ட சிறிய நாற்காலி ,குறுக்கே நான்கு சிறிய மூங்கில் கழிகள் – இதுதான் அடியேனுக்கு ஈசனால் அனுப்பப்பட்ட பல்லக்கு (அவரை தரிசிக்க ).நல்ல இருட்டு . தேவதூதர்களின் உருவத்தைக் கூடப்பார்க்க முடியவில்லை   (பல்லக்கு தூக்கிகள் ) !ஆம் ! உண்மையில் அவர்கள் ஆண்டவனால் அனுப்பப்பட்ட தேவதூதர்கள்தான் என்பதை மலைஏறும்போது புரிந்து
கொண்டேன் . அவர்கள் நம் மீது காட்டும் அக்கறை, கவனம் , வார்த்தைகளால் கூற இயலாது .பெரும்பாலானோர் இஸ்லாமிய வகுப்பைச் சார்ந்தவர்கள்.அடியேனைப்பொறுத்தவரை
உலகிலேயே மிகவும் கடினமான தொழில் அமர்நாத் டோலிவாலாக்கள் செய்வது தான் .
பல்லக்கி்ல் அமர்ந்தேன் , நான்குபேருக்கு சுமையானேன். மிகவும் சங்கடமாக இருந்தது , வேறு வழியில்லை . நடந்து செல்ல மனதில்லை. வானஊர்தியில் அனுமதி சீட்டும் கிடைக்கவில்லை .  பனி லிங்கத்தை நோக்கிப் பயணம் தொடங்கியது..
தொடரும்
.. பாபா நளினி ..
tags
amarnath , vaishnavodevi , lingam , lankar , pilgrimage
அமர்நாத் , வைஷ்ணவோதேவி , யாத்திரை , பால்டால் , பனி , பனி லிங்கம் , ஆன்மீகம் , பிள்ளையார் , லங்கார்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>