அமர்நாத்
சொர்க்கபூமியான காஷ்மீரின் கோடைக்காலத் தலைநகரமாக விளங்கும் ஸ்ரீநகரிலிருந்து கிழக்குத்திசையில் 145 கிலோமீட்டர் தொலைவில்அமர்நாத் அமைந்துள்ளது .பனிப்பள்ளத்தாக்கில், 4,175மீட்டர் ( 13,700அடி உயரத்தில் பனிலிங்கம் அமைந்துள்ள குகை காணப்படுகிறது.குகையின் உயரம் 150 அடி குகையின் நீளம் 90அடி.
அங்கு காணப்படும் பனிக்கட்டிகளின் அமைப்பு, நமது தெய்வங்களின் உருவ அமைப்பை ஒத்ததாக உள்ளது அவற்றில் ஒன்றுதான் ,மனிதர்களின் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் முற்பிறவியில் செய்த பாவங்களையும் “”அழிக்கும்“” கடவுளான பரமசிவனின் ”லிங்க வடிவம்”.இயற்கையாக பனியால் உருவானதால் ”பனிலிங்கம்‘ என்று அழைக்கின்றனர் .ஆரம்பத்தில் 22 அடி உயரத்தில் காணப்படும் பனிலிங்கத்தின் உருவ அமைப்பானது , முழு நிலவின் ( பௌர்ணமி ) பொழுது 6அடி உயரமாகக் காணப்படும் .அமாவாசை நெருங்க நெருங்க அளவில் சிறியதாகி ( உருகி ) அமாவாசையின் பொழுது லிங்கமே இருக்காது.ஆகையினால் பனிலிங்கம் தரிசனம் செய்ய விரும்பும் அன்பர்கள், பௌர்ணமியை முன்னிட்டு செல்வது நல்லது .
நமது புராணங்களில் அமர்நாத் பனி லிங்கம் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை என்பது தற்போது தெரியவரும் செய்தி .எப்பொழுதும் சிவபெருமான் பற்றிய பழைய நூல்களைப்படித்துக்கொண்டிருப்பவர்களை அணுகியும் விசாரித்தாகிவிட்டது. சமீபகாலமாகத்தான் ஒரு
20,25,வருடகாலமாகத்தான் பனிலிங்கம் பிரபலமாகியது. என்றார்கள் .
பயணத்தின் போது பேருந்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலத்து அன்பர்கள் சொன்ன அமர்நாத் கதை பின்வருமாறு :
ஒருமுறை பார்வதிதேவி சிவபெருமானிடம் அமரத்துவம் ( சாகாவரம் )பற்றிய இரகசியத்தை தான் அறிந்து கொள்ள வேண்டி கேட்டபோது ,மகாதேவன் ,உமையவளை இவ்விடத்திற்கு அழைத்துவந்தாராம். சாகாவரம் பற்றிய இரகசியத்தை ஒருவரும் அறிந்து விடக்கூடாது என்பதற்காக . பனிபடர்ந்த குகைக்கு அழைத்து வந்து இரகசியத்தைக் கூறிக்கொண்டிருக்கும் பொழுது ,அம்பிகை உறங்கஆரம்பித்துவிட்டாளாம்.( கதை கேட்டால் யாருக்குத்தான்தூக்கம் வராது) உறங்கிக்கொண்டிருக்கும் ஈஸ்வரியைக்கவனிக்காத ( இந்த ஆண்கள் எல்லோரும் இப்படித்தான்; மனைவியைப்பற்றிய கவனமே கிடையாது ) பரமேஸ்வரன், அவர்பாட்டுக்கு இரகசியத்தைக்கூறி முடித்துவிட்டாராம் .பார்த்தால் அகிலாண்டேஸ்வரி நல்ல உறக்கத்தில் உள்ளார்.ஆனால் ”உம்” கொட்டும் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்ததாம்.சப்தம் வந்த திசையை நோக்கினால், அங்கே ஒரு ஜோடிகாதல் புறாக்கள் ஐயனின் அமரத்துவக்கதையை கேட்டுக்கொண்டே ”உம்” கொட்டிக்கொண்டிருந்ததுகளாம். இன்றும் ,குகையின் மேல் உள்ள பொந்துகளில் இரண்டு சாம்பல் வண்ணங்கொண்ட புறாக்களைக்காணலாம் .இரகசியத்தைக்கேட்டதனால் ”சாகா வரம்” பெற்ற புறாக்களாயின. இதுதான் ‘அமர்னாத்” பெயர்க்காரணத்துடன் செவியில் பாயும் கதை.
மேலும், ஒருவரும் இரகசியத்தை அறிந்து விடக்கூடாது என்பதற்காக நந்தி தேவனை பஹல்காமில் தங்கும்படி ஆணையிட்டாராம் . தனது சிரசில் சூடியிருக்கும் பிறைச்சந்திரனை ‘சந்தன்வாரி’ என்னுமிடத்திலும், கழுத்தில் ஆபரணம்போல் சூடியிருக்கும் நாகத்தை ‘ ஷேஷ்நாக் ‘ என்னுமிடத்திலும் ,பஞ்சபூதங்களையும் ( நீர் ,நிலம் ,நெருப்பு ,காற்று , ஆகாயம் )பஞ்ச்தரனி என்ற இடத்திலும் விட்டு விட்டு , சக்தியுடன் பனிசூழ்ந்த குகைக்கு சென்றதாக அறியப்படுகிறது .பஞ்ச் என்றால் ஐந்து என்பது பொருள் .குகையிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது .
வாருங்கள் நமது பிரயாணத்திற்கு ….
ஸ்ரீநகரிலிருந்து”பால்டால்”என்றஅடிவாரத்தைநோக்கிப்புறப்பட்டோம்.வழியில்”சோனாமார்க்” என்றமிகவும்அழகானஇடத்தைஅடைந்தோம்.

நல்லாசிந்த் (nallahsind) நதிக்கரையோரம் அமைந்துள்ள சோனாமார்க் (meadow of gold )
மனதைக்கொள்ளைக்கொள்ளும் இயற்கைக்காட்சிகள்,ஒருவருக்கும்சோனாமார்க்கைவிட்டுநகரவேமனதில்லை.பேருந்து ஓட்டுனர் எவ்வளவோ எடுத்துச்சொன்னார் – தாமதிக்கும்ஒவ்வொரு நிமிடமும்,பால்டாலில் வாகனநெரிசல்அதிகமாகிவிடும். சீக்கிரம் புறப்படுங்கள் என்று . ஆனால்சோனாமார்க்(சோனா என்றால் தங்கம் என்று அர்த்தம் ) அனைவரையும் நகரவிடாமல் செய்தது ..கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சோனாமார் இயற்கைக்காட்சிகளை அனுபவித்தோம் .இந்த இடைப்பட்ட நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் எங்களை கடந்து சென்றன .
பால்டால் அடிவாரத்திற்கு 4 கி.மீ க்கு முன்பே வாகனநெரிசல் .. ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆயிற்று.எந்த வண்டியும் நகரவில்லை .லேசாக தூரல்ஆரம்பித்தது .குளிரவும் ஆரம்பித்தது . இருட்டிவிட்டால் நடப்பது சிரமமாக இருக்கும் .நடந்து செல்வதைத்தவிரவேறுவழியில்லை .. என்று கைடும், ஓட்டுனரும்கேட்டுக்கொண்டார்கள். 60 வயதைத் தாண்டியவர்களும் எங்கள் குழுவில் இருந்தனர். 4 கிலோமீட்டர் நடப்பது என்றால் சுலபமா? அடியேன் பிள்ளையார் சுழி போட்டேன். இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.. ஒவ்வொருவராக நடக்க ஆரம்பித்தார்கள்.

வாகன நெரிசல்—பால்டால்
சென்னை மாம்பலத்தில் தீபாவளிநேரத்தில் உஸ்மான் தெரு ( பனகல்பார்க் ) எப்படிஇருக்கும். அதுபோல இருந்தது. மனிதநடமாட்டமும்வாகனநெரிசலும்.வழி நெடுங்கிலும் இராணுவ முகாம்கள்தென்பட்டன.”உங்களுக்கு உதவ நாங்கள்காத்திருக்கிறோம்” என்ற அறிவிப்புப் பலகையோடு. ”எல்லைப்பாதுகாப்புப்படையினர்‘‘ குவிக்கப்பட்டிருந்தனர் . .யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு குறைவில்லை .கிட்டத்தட்ட ஒருமணிநேரநடைப் பயணத்திற்குப் பிறகு தங்குமிடம் வந்து சேர்ந்தோம் .
.
பஞ்சபூதங்களுக்கும் தலைவனான அந்த பரமேஸ்வரனின் படைப்பில் பாறைகூட அழகுதான்.--பால்டால்தங்குமிடத்தில்

பால்டாலில் கூடாரங்களின் அணிவகுப்பு
வரிசையாக கூடாரம் ( டெண்ட் )போடப்பட்டிருந்தது. பின்புறம் சுத்தமான ,நாற்றமில்லாத கழிப்பிடங்கள். குழாய் உண்டு. அதில்–.தண்ணீர் வரும் !!! .கூடாரத்திற்குள் மடக்கு கட்டில்,மெத்தை, கம்பளி,தலையணை,சிறிய பல்பு என்று ஏகஅமர்க்களம்.ஒருகூடாரத்திற்குள் 4 (அ) 5 நபர்கள் தங்குவது போல் இருக்கும் .

பால்டால்–கூடாரத்திற்குள்
பால்டால் இந்த இடம் அமர்நாத்துக்குச்செல்லும் குறுக்குப் பாதையாகும். பாதையின் தூரம் 16 கிலோமீட்டர். மற்றுமொரு பாதையும் உள்ளது. ”பஹல்காம்” கோலிவுட் இயக்குனர்கள் பொள்ளாச்சியை எப்படி வலம்வருவார்களோ ,அதுபோல் பாலிவுட் இயக்குனர்கள்வலம்வருவது பஹல்காம் . பஹல்காமிலிருந்து அமர்நாத் செல்ல 5 நாட்கள் ஆகும். இந்திய அரசு நடத்தும் ஹெலிகாப்டர் மையம்-’ பவன்ஹன்ஸ்” ( மிகக்குறைந்ததொகை) பஹல்காமில் தான் உள்ளது. பால்டாலில்கிடையாது. ஆனால் அரசு மேற்பார்வையில் தனியார் ஹெலிகாப்டர் மையங்கள் பால்டாலில் உள்ளன.

பால்டாலில் ஹெலிபேட்
அதே தொகைதான். ஆனால் ஏகப்பட்ட குளறுபடி. மின்னஞ்சல்-ல் (onlinebooking) பதிவு செய்தவர்களுக்கு முதலிடம் கிடையாது. கறுப்புப் பணமகொடுப்பவர்களுக்குத் தான் முதலிடம். பணம் பனிலிங்கம்( பாதாளம்) வரை பாயும். எங்கள் குழுத்தலைவர் ( guide )வந்தார். ”டோலி” க்கு முன்பதிவு செய்யவேண்டும்.என்ற முன்பணம் வாங்கிக்கொண்டார். ஒருவரின் எடை 70 கிலோவிற்கு அதிகம் என்றால் 10,000 ரூபாய். 70 கிலோவிற்குகுறைவாக உள்ளவர்கள்9,500 ரூபாய் செலுத்த வேண்டும். அரசு நிர்மாணித்ததொகை 6,500 ரூபாய் மட்டுமே. மீதமுள்ள தொகை இடைத்தரகர்களுக்கு கைடுக்கும் பங்கு உண்டாம்நம்மை 16 கிலோமீட்டர் ஏற்ற இறக்கங்களில் சுமப்பவர்களுக்கு ( கிட்டத்தட்ட 10 மணி நேரம் ) அரசு நிர்மாணித்ததொகை மட்டும்தான். கலியுகத்தில் தர்மதேவதைக்கு ஒரு கால்தான் உண்டு.
தொடரும்
.. பாபா நளினி ..
ஃபேஸ்புக் ரிப்ளை
பின்னூட்டம்
Powered by Facebook Comments