/* ]]> */
Sep 122012
 

 

சக்தி பீடம்

சக்தியின் துணை கொண்டே பிரபஞ்சம் உண்டானது.சக்தி வழிபாடு நமது பாரத தேசத்தில் பிரதானமாக உள்ளது .

சக்தி பீடம் தோன்றிய வரலாறு

( தட்சன்  தாட்சாயினி யின் தந்தை –சிவபெருமானின் மாமனார் ) தட்சன் சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு  ஒரு யாகம் நடத்தலானான்.சிவபெருமானத் தவிர  மற்ற எல்லோரையும் அழைத்தான் . (திருமால், பிரம்மா உட்பட). இதைக் கண்டு வெகுண்ட தாட்சாயினி தன் தந்தையை கேள்விகேட்கும்போருட்டு யாகத்திற்குப் புறப்பட்டாள். சிவபெருமான் செல்லக்கூடாது என்று தடுத்தார். தான் செல்வது யாகத்தில் கலந்து கொள்வதற்காக அல்ல: தந்தையைக் கேள்வி கேட்பதற்காகத்தான் என்று கூறிவிட்டு புறப்பட்டாள் . தட்சன் தன்  தவறுக்கு சிறிதும் வருந்தவில்லை .மேலும் சிவபெருமானப்பற்றி  அனைவருக்கும் கேட்குமாறு அவதூராகப் பேச ஆரம்பித்தான்.இடுகாட்டு சாம்பலைப் பூசிக்கொள்பவன் , நாகத்தை மாலையாக அணிந்து கொள்ளும் பித்தன் என்று பலவாறு நிந்தித்தான் . இதைக் கேட்டுப் பொறுக்காத தாட்சாயினி  தட்சனின் யாகத்தை அழித்தாள் .கோபம் அடங்காமல் தீயிலே விழுந்தாள். .இதைக்கண்ணுற்ற சிவபெருமான்  தாட்சாயிணியின் உடலைத் தூக்கிக்கொண்டு ருத்திர தாண்டவம் ஆட ஆரம்பித்தார் . அனைவரும் பயந்தனர். விபரீதத்தை உணர்ந்த திருமால் சுதர்சன சக்கரத்தின் உதவியால் தாட்சாயிணியின் உடலைத் துண்டுகளாக்கினார். சிவபெருமானின் உக்கிரதாண்டவத்தால் தாட்சாயிணியின் துண்டுகளாக்கப்பட்ட உடல் பாரத தேசமெங்கும் சிதறி விழுந்தது .

அவ்வாறு சிதறி விழுந்த உடல் பாகங்கள்  விழுந்த  இடங்களை  ‘’சக்தி பீடங்கள்’’ என்று அழைக்கிறோம்.

 பாரத தேசத்தில் ( இலங்கை பாகிஸ்தான், திபெத் ,பூடான் பங்களாதேஷ் உட்பட) மொத்தம் ‘’ஐம்பத்திரண்டு’’  சக்திபீடங்கள் உள்ளன.( ஐம்பத்தி ஒன்று என்றும் கூறுவர் ). அவற்றுள் மிகமிக முக்கியமானது ‘’நான்கு’’ ஆதிசக்தி பீடங்களாகும்.

அந்த நான்கு புனிதத்தலங்களும் பின்வருமாறு

முதலாவதாக ‘’ஒரிஸ்ஸா’’ மாநிலத்தில் உள்ள ‘’பூரி ஜகன்னாதர்’’ திருக்கோயிலுக்குள் வீற்றிருக்கும் ‘’விமலாதேவி’’ அம்மன் .’’பாதம்’ விழுந்த இடம் .

இரண்டாவதாக ‘’ஒரிஸ்ஸா’’ மாநிலத்தில் உள்ள ‘பெர்ஹாம்பூர்’’என்ற ஊரில் உள்ள ‘’தாராதரிணி’’ அம்மன் திருக்கோவில் ‘’ஸ்தனங்கள்’’ விழுந்த இடம் .

மூன்றாவதாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ‘’கௌஹாத்தியில்’’ வீற்றிருக்கும் ‘’காமாக்கியா’’  அம்மன் திருக்கோவில் .’யோனி ‘’பாகம் விழுந்த இடம் .

நான்காவதாக  ‘’மேற்கு வங்காளத்தில்’’ தலைநகரமான ‘’கொல்கொத்தாவில்’’ உள்ள  ‘’தட்சிணகாளி திருக்கோவில்’’  ’’முகம்  ‘’விழுந்த இடம் .

இவ்வாறாக மீதமுள்ள நாற்பது எட்டு  ஸ்தலங்களும் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலங்களாகும் .அவற்றுள் காஷ்மீரில் உள்ளது இரண்டு .ஸ்ரீநகரில் ‘’ஹரிபர்வதம் ‘’என்ற மலையின் மீது காணப்படும் ‘’சாரதா தேவி’’ சக்தி பீடமாகும் . ‘’சரிகா பீடம்’’ என்றும் ‘’சரஸ்வதி பீடம்’’ என்றும் அழைக்கப்படுகிறது . மற்றொன்று புகழ்மிக்க ‘’வைஷ்ணவோதேவி’’திருத்தலம்.

 

ஸ்ரீநகர் -ஹர்-பர்பத் -சரஸ்வதி பீடம் -வலது கை விழுந்த இடம்

அம்மனின் சிரசு விழுந்த  இடம் ஹரிபர்வதம் என்கிற மலையின் மீது சுயம்புவாகத் தோன்றியுள்ள ‘’ஜகதாம்பாள் சரிகா பகவதி’’ சக்திபீடமானது அம்மனின்  ‘’வலது திருக்கரம்’’விழுந்த இடமாகும்.

பண்டையகாலத்தில் காஷ்மீர் ‘’சாரதாதேஷ்’’ என்று அழைக்கப்பட்டதாம். (சாரதாதேவி சக்தி பீடத்தால்) ஆனால் தற்போதுள்ள நிலைமையோ (–நெஞ்சு பொறுக்குதில்லையே –இந்தத் தீவிரவாதிகளை நினைத்தால்.மூன்று சதவிகிதம் இந்துக்கள்தாம் உள்ளனர் .

‘’மஹா திரிபுர சுந்தரி’’ என்றும் அழைக்கிறார்கள் .பதினெட்டு கைகளுடனும், நடுவில் பொட்டுடனும்.

மூன்று மடிப்புகள்

இவ்வாறு காணப்படும் மஹாமஹாஸ்ரீசக்ரத்தில்  முதல் மடிப்பு தேவியின் முகமாகவும் ,அடுத்த இரண்டு மடிப்புகள் ஸ்தனங்களாகவும் கருதப்படுகிறது . இராஜராஜேஸ்வரி அஷ்டகம் ,அன்னபூர்ணா அஷ்டகம்.போன்ற சுலோகங்களில் இங்கு காணப்படும் அம்மனின் பெருமை சொல்லப்பட்டுள்ளது . (’’காஷ்மீர புரவாசினி’’ என்று .)’’காஷ்மீர பலம்’’ என்று ஆப்பிள் பழத்தை பூஜையின்போது நைவேத்தியம் செய்வார்கள். காஷ்மீர சூரணம் என்று குங்குமத்தைக் குறிப்பிடுவார்கள். காஷ்மீர் பண்டிதர்கள் என்றால் பெரும் மரியாதை.

ஒரு  தகவல் :

இராமானுஜர்  பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுத வேண்டி கூரத்தாழ்வாருடன் காஷ்மீருக்கு நடந்தே சென்றாராம். பிரக்ம்மசூத்திரத்தின் மூலநூல் காஷ்மீரில் இருந்ததாம் . (இந்து மதத்தின் பல முக்கிய புத்தகங்கள் காஷ்மீரில்தான் இருந்தனவாம் .) காஷ்மீரி பண்டிதரான மண்டலமிச்ரர் இராமனுஜருக்கு  புத்தகத்தைக் கொடுத்தாராம் .புத்தகத்தை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் புத்தகத்தை பிடுங்கி  வைத்துக் கொண்டாராம் . துணைக்குச் சென்ற கூரத்தாழ்வாருக்கு அபரிமிதமான ஞாபக சக்தி  உண்டு .எதையும் ஒரு முறை படித்தால் மனனம் ஆகிவிடும் .அதனால் புத்தகம் இல்லாமலேயே கூரத்தாழ்வார் சொல்லச்சொல்ல இராமனுஜர் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதினாராம் .

பழங்காலத்தில் இந்துக்களின் பிரதான பூமியாக இருந்த காஷ்மீர் தற்போது தீவிரவாதிகளின் கையில் சிக்கியுள்ளது .மீண்டும் இந்துக்களின் புண்ணிய பூமியாக காஷ்மீர்  திகழவேண்டும் என்று அனைவரும் பிரார்த்திப்போம் .

பாபா நளினி

tags

kashmir , terrorists , shakthi peedam , hindus , hinduism , pilgrimage , ramanujam , pandits

கஷ்மீர் , காஷ்மீர் , தீவிரவாதிகள் , ஷக்தி பீடம் , ஹிந்துக்கள் , புண்ணியதலம் , ராமானுஜர் , ஆன்மீகம் , ஷக்தி

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>