/* ]]> */
Sep 152011
 

 அர்ஜுனனின் மனக்குழப்பம் – இன்றைய பகவத்கீதை – சவாலை சமாளி

பகவத் கீதை
 

ஆஷ்சர்யவத்பஷ்யதி கஷ்சிதேநம்
ஆஷ்சர்யவத்வததி ததைவ சாந்ய:।
ஆஷ்சர்யவச்சைநமந்ய: ஷ்ருணோதி
ஷ்ருத்வா அப்யேநம் வேத ந சைவ கஷ்சித்॥ 2.29 ॥

சில பேர் ஆத்மாவை அதிசயமா பாக்குறாங்க. சில ஒலகத்துலயே அதிசயம் ஆத்மான்னுதான் சொல்றாங்க. சில பேர் ஆத்மா பத்தி அதிசயமா கேக்குறவங்களாவும் கேட்ட அப்புறம் கூட ஆத்மாவப் பத்தி ஒண்ணும் தெரியாதவங்களாயும் இருக்காங்க.

தேஹீ நித்யமவத்யோ அயம் தேஹே ஸர்வஸ்ய பாரத।
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.30 ॥

பார்த்தா ! உடல்ல தங்கியிருக்குற ஆத்மா அழிவே இல்லாத நித்யமாயிருக்குறான். அதனால மத்தவங்களோட ஆத்மாவுக்காக நீ மனசு வருத்தப்பட வேணாம் !

 

ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி।
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே॥ 2.31 ॥

நீ சத்ரியன் ! நீதியை நிலை நாட்ட போர் செய்யறது உன்னோட கடமை.அதனால உன் கடமையை நீ செய்ய நீ தயக்கம் காட்ட வேண்டாம் !

யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்।
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஷம்॥ 2.32 ॥

பார்த்தா ! உன்னைத் தேடி உன் கடமையை செய்ய வர்ர வாய்ப்பு சொர்கத்துக்கு உன்னோட கதவு! அதனாலதான் போரை ஒரு தவமா மன்னர்கள் செய்றாங்க !

 

அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி।
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥

ஆனா நீ நீதிக்கான இந்த போர் செய்யாம பின் வாங்குனேன்னா க்டமை தவறியதால ஏற்படுற தீய விளைவுகளை சந்திக்கறதோட ஒரு சிறந்த வீரன் அப்படின்னு இப்ப இருக்குற நல்ல பேரும் போயிடும் !

 

அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே அவ்யயாம்।
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே॥ 2.34 ॥

 

சமுதாயம் உன்னைப் பத்தி தப்பா பேசும். நல்லா மதிப்பா வாழுறவனுக்கு அவமானம் சாவ விட பெரிய கொடுமை !

 

பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:।
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்॥ 2.35 ॥

 

உன்னோட பெயரையும் புகழையும் பத்தி கேள்விப்பட்டு உன் மேல ரொம்ப மதிப்பு வச்சருக்குறவங்க கூட, பயந்து போய் இந்த சவால்லேயிருந்து நீ பின் வாங்கிட்டேன்னு நினைப்பாங்க !

 

அவாச்யவாதாம்ஷ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:।
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்॥ 2.36 ॥

 

எதிரிகளோ இதுதான் சமயமுன்னு உன்னப்பத்தி ரொம்ப கேவலமா பேசுவாங்க !

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்।
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஷ்சய:॥ 2.37 ॥

நீ குந்தியோட மகன் ! இந்த சவால்ல நீ செத்துப் போனா சொர்க்கம் கிடைக்கும். ஜெயிச்சா நீ தான் இந்த நாட்டுக்கு ராஜா ! ஆக , கவலைப்பட ஏதும் இல்லை ! தைரியமா இந்த சவாலை சந்திக்கப் போ !

 

ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ।
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி॥ 2.38 ॥

சந்தோஷம், துக்கம், லாபம் , நஷ்டம், வெற்றி, தோல்வி இதைப் பத்தியெல்லாம் கவலைப் படாம இந்த சவாலை சந்தி ! அப்படி செஞ்சா , உனக்கு எந்த கெட்ட பேரும் வராது ! கெட்டதும் நடக்காது!

Tags : bhagawat geetha, bagawat geetha, பகவத் கீதை, கீதை, கிருஷ்ணன், அர்ஜுனன், சவாலை சமாளி, கீதை உரை, எளிய உரை, simple meaning of bhagwat geetha, geetha, krishana geetha to Arjun in tamil

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>