/* ]]> */
Mar 212014
 

 

கடல் பாசியை அகர் அகர் , சைனா க்ராஸ் என்றும் சொல்வார்கள். உலக அளவிலும் நிறைய டெஸர்ட்களில் உபயோகப்படுத்தப்படுகின்றது  இந்த ஜெலடின் மாதிரியான , வெஜிடேரியன் , செட்டிங் ஏஜண்ட் .

நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களுக்கு இதில்லாமல் முடியாது . மிகுந்த சுவையாகவும் நிறைய மினரல்ஸும் இருக்கிறதால் கண்டிப்பாக நோன்பு துறக்கும் மெனுவில் கடல்பாசி புட்டிங் இருக்கும் . நோன்பினால் காய்ந்து போயிருக்கும் வாய்க்கும் வயிற்றுக்கும் பெரிய ஒரு ஆறுதல் இது ..

 இந்த படத்தில் இருப்பது .. மாம்பழத்துண்டங்களும் ஏலக்காய் பொடியும் சேர்த்து செய்தது … ( இந்த வருட ரமலான் நோன்பில் செய்தது )

 கடல் பாசி இனிப்பு செய்முறை :

தேவையான பொருட்கள்

அரை லிட்டர் பால் ,
ஒரு பெரிய கைப்பிடி அளவு நொறுக்கின கடல் பாசி ,
ரெண்டு பெரிய குழம்புக் கரண்டி அளவு சீனி .

பாலைக் காய்ச்சி அதில் கடல் பாசியைப் போட்டு கரைய விட வேண்டும் . முழுக்க கரைந்ததும் சீனியைப் போட்டு துளி உப்பு போட்டுக்கொள்ள வேண்டும்  . இது தான் அடிப்படை .

பிறகு அதில் ஃபுட்கலர் , எஸ்ஸென்ஸ் , ஏலக்காய் பொடி , நறுக்கின பழங்கள் , ட்ரை ஃப்ரூட்ஸ் , நட்ஸ் இப்டி எது வேண்டுமானாலும் அவரவர் விருப்பப்படி  சேர்த்துக்கொள்ளலாம் . என்ன மாதிரியான கன்ஸிஸ்டென்ஸியில் அது செட் ஆக வேண்டும் என்பதும் அவரவர் விருப்பம் . உதாரணத்துக்கு எங்கள் வீட்டில அது இளநீர் வழுக்கை போல இருக்க வேண்டும் , அதனால் அதற்கு ஏற்றார் மாதிரி கொஞ்சமாக கடல் பாசி சேர்ப்போம் . சிலருக்கு  பர்ஃபி போல இறுகி இருக்க வேண்டும் ..அவர்கள்  நிறைய கடல் பாசி சேர்ப்பார்கள் ..

சின்ன சின்ன கிண்ணங்களில ஊற்றி , வேண்டிய ஃப்ளேவர் , பழங்கள் சேர்த்து உறைய விட்டால் ரூம் டெம்பரேச்சரிலேயே செட் ஆகிவிடும் … ஃப்ரிஜ்ஜில் வைத்தால் இன்னமும் சீக்கிரமாக செட் ஆகி  , ஜில்லென்றும் இருக்கும் . ஒரு பாக்கெட் பாலுக்கு இரண்டு அல்லது மூன்று , நான்கு பிடி கடல் பாசி போட்டால் , தட்டில் ஊற்றி உறைய விட்டு அல்வா அல்லது பர்ஃபி மாதிரியாக துண்டங்கள் போட்டு எடுக்கலாம் .

..ஷஹி ..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>