காலை வணக்கம்
இன்றைய பாடல் :பேசக்கூடாது
படம் :அடுத்த வாரிசு(1983)
பாடியது: எஸ்.பி.பி, சுசீலா
இசை :இளையராஜா
சில்க்ஸ்மிதா, பொதுவாக கவர்ச்சி நடிகையர் என்றாலே எரிச்சல் படும் பெண்கள் கூட்டத்திலும் ரசிகையர் அநேகம் பேரைக்கொண்டிருந்தவர் . அவர் நடித்ததில் ஓவராக கவர்ச்சி மூவ்மெண்டுகள் இல்லாததும் பார்க்கவும் கேட்கவும் இனிமையானதுமான பாடல்களில் ஒன்று ரஜினியுடன் அவர் ஆடிப்பாடிய இந்தப் பாடல்.ஒரே முறை பள்ளிச்சிறுமியாக இருந்த சமயம் ஃபாம்கோ ஆயத்த ஆடையகத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன். தெரியாத முகம் என்றில்லாமல் அவர் செய்த புன்னகை இன்றும் நினைவில் உள்ளது. தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிந்து யாரோ ரொம்பத்தெரிந்தவர் இறந்தது போல் வருந்தினேன். வாவ் எத்தனை அழகி அவர் தான். அட்டகாசமான ஃபீச்சர்ஸ், அரிதான உடற்கட்டு.
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே
ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
பேசக் கூடாது..
பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ
காலம் யாவும் நீ என் சொந்தம் காக்கும் தெய்வம் நீ
பாலில் ஆடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ
கிளையோடு கனியாட தடை போட்டால் நியாயமா
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேலும் ஏனிந்த எல்லை
ஆசை கூடாது…
காலைப் பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ
ஊஞ்சலாடும் பருவம் உண்டு உரிமை தர வேண்டும்
நூலிலாடும் இடையும் உண்டு நாளும் வரவேண்டும்
பல காலம் உனக்காக மனம் வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம் அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்
ஆசை கூடாது..
தொகுப்பு
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments