/* ]]> */
Oct 172011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: ஓடுகிற தண்ணியில

படம்: அச்சமில்லை அச்சமில்லை(1986)

பாடலாசிரியர் : வைரமுத்து

பாடியவர்கள்: எஸ். பி.பி, பி.சுசீலா

இசை: வி.எஸ். நரசிம்மன்

கொஞ்சமே கொஞ்சம் முற்றிய முகமென்றாலும் ஃப்ரேம் அளவுக்கு விரியும் சரிதாவின் கண்களில் தான் எத்தனை குழந்தைத்தனம்! கன்னிமையின் ஏக்கம்..அழகு!சிகப்பு ரோஜாக்கள் நீட்டி ஐ லவ் யூ சொல்லும் காதல்கள் பார்த்த நமக்கு மஞ்சள் செம்பருத்தியும் சந்தனமும் நெஞ்செல்லாம் மணக்கிறதே..

ராஜேஷை செவத்த மச்சான் என்று சொல்கிறாரே சரிதா..நியாயமா என்றெல்லாம் யோசிக்கக் கூடாது..காக்கைக்கும் தன் மச்சான் பொன் மச்சான்..

ஏதாவது ஒரு வரியெடுத்து ஹைலைட் பண்ண விடாமல் ஒவ்வொரு வரியையும் ஹைலைட் பண்ணச் சொல்கிறார் வைரமுத்து. கிராமத்து வெள்ளந்திக் காதலின் சாறு நிரம்பி வழியும் மேகம் இது…மேகத்தத் தூது விட்டா….

 

மேகத்தத் தூது விட்டா தெச மாறிப்போகுமோன்னு

தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்

தண்ணிக்கு இந்தக் கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்

எண்ணிக்கக் கொறையாம

எப்ப வந்து தரப் போற (2)

ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த

சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியில

ஓல ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியில

சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் கைகளிலே

அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே

குளிரெடுக்கும் சாரலுக்கு கொட புடிக்க வா மயிலே

கொடையும் இல்ல படையும் இல்ல தூறலுக்கு ஆதரவா

தாவணிய நீ புழிய கலசம் வெட்ட நான் வரவா

நீ நனச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்

அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்

ஓடுகிற தண்ணியில …

மலர் தோட்டத்து குயிலே இது உமக்காகப் பாடுதுங்க

ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க

அருவி போல அழுகிறத அறிந்து கொண்டால் ஆகாதோ

முந்தானையின் ஓரமென்னை முடிந்து கொண்டால் ஆகாதோ ?

வக்கனையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ ?

ஒம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வெளக்கப் போறதெப்போ?

ஓடுகிற தண்ணியில..

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>