காலை வணக்கம்
இன்றைய பாடல்: சாமிகிட்ட சொல்லி வச்சு
படம் : ஆவாரம்பூ
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ். பி. பி , எஸ். ஜானகி
இன்னமொரு எஸ். பி . பி ஜானகி காம்பினேஷன் . பிரமாதமான மெலடி . குறிப்பாக இந்த வரிகளில் வரும் கட்டும் உடனேயே “சாமி கிட்ட” என்று சேர்வதும் ரொம்ப அழகு..
“வந்த துணையே /வந்து அணையே /அந்தமுள்ள சந்திரனை/ சொந்தம் கொண்ட சுந்தரியே”
“வண்ண கனவே /வட்ட நிலவே /எண்ண எண்ண இன்பம் தரும் /வண்ணம் வரும் கற்பனையே…
வினீத்தும் இந்த ஹீரோயினும் நல்ல ஜோடி பாகைத்துரும்பாக நடு நடுவே வரும் கவுண்டமணியின் நரநர முகம் ..
கூவாத குயில் -ஆடாத மயில் -நானாக இருந்தேனே
காவேரி அணை -மேலேறி நதி -ஓடோடி வரும் நேரம்
இந்த வரிகள் டிமாண்ட் பண்ணும் ஒரு சின்ன தலையசைப்பும் அபார அழகு..
சாமிகிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே
இந்த பூமி உள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே (2)
முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே
சாமி கிட்ட…
கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேர தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை ..
சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை
தேர்ந்தேனே இன்று நானே
வந்த துணையே வந்து அணையே
அந்தமுள்ள சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே
சாமி கிட்ட..
காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் நேரம்
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறைவேதம்
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
வாழ்நாளில் சுகம் தானிது போலே வாழும் வழி கேட்டேன்
வண்ண கனவே வட்ட நிலவே
எண்ண எண்ண இன்பம் தரும்
வண்ணம் வரும் கற்பனையே
சாமி கிட்ட..
தொகுப்பு
..ஷஹி..
tags
aavaram poo, vineeth, sami kitta solli vachu, ilaiyaraja, s. p. b, s. p. balasubramaniam, s.janaki, sugaraagam, kaalaipaniyum konjam isaiyum, tamil duets, tamil love songs, aavaaram poo songs
ஆவாரம் பூ , வினீத் , சாமி கிட்ட சொல்லி வச்சு , இளையராஜா , எஸ். பி. பி , எஸ். பி. பாலசுப்ரமணியம், ஆவாரம் பூ பாடல்கள்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




arumayana padal eanaku mikavum pititha padal… aanal padalasiriyar yar endru thiriyavillai..
neengal adthaiyum poturukalame..
நன்றி தொல்காப்பியன் – பாடலாசிரியர் கங்கை அமரனாம் ! எனக்கு ராகவன் பின்னூட்டம் பார்த்து தான் தெரியும்..
ரொம்ப நல்ல பாட்டு ஷஹி இது… ரொம்ப இலகுவான மெட்டில் அமைந்த அழகான பாடல் இது… இதன் பாடலாசிரியர்… கங்கை அமரன்…
காபி ராகத்தின் சாயலில் அமைந்த பாடல் இது… இளையராஜா காபியை அத்தனை எளிமையாய் மாற்றியிருப்பார்…
வாழ்த்துக்கள்… ராகவன்
நன்றி ராகவன் …ரொம்ப நல்ல பாட்டு தான் காலைப்பனில போடுவோம் ! பாடலாசிரியர் பற்றின குறிப்புக்கு நன்றி ..எனக்கு தெரியாமல் தான் இருந்தது அது..