ஆனித் திருமஞ்சனம்:
இந்த ஆனித் திருமஞ்சன திருவிழாஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவத் தலங்களில் அதிலும் குறிப்பாக தில்லையம்பதி எனப்படும் சிதம்பரத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. இந்த திருவிழா சிதம்பரத்தில் 10 நாட்கள் நடக்கும். இறுதிநாளான ஜூன் மாதம் 26-ம் தேதியன்று அதிகாலையில் சுவாமி நடராஜரும் அம்பிகை சிவ்காமியும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வர். அபிஷேகத்துக்குப் பின் ஆபரணம் சாத்தப்பட்டு, தீபாராதனை செய்யப்படும். பகல் 1 மணிக்கு நடராஜரும் சிவகாமியும் ஆனந்த தாண்டவமாடியபடியே சித்சபைக்கு செல்வர். இத்தகு விமரிசையான் அத் திருவிழாவை சிதம்பரத்தில் பக்த கோடிகள் திரளாகச் சென்று கண்டு களிக்கலாம்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments














Please comment with your real name using good manners.