/* ]]> */
Dec 252011
 

2012 ராசி பலன் – மீன ராசி 2012 ஆண்டு பலன் – Meena rasi palan

மீனம் ராசி

மீனம் ராசி

 

மீனம்:

பூரட்டாதி(4);உத்திரட்டாதி; ரேவதி ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

இந்த 2012-ம் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ராகு 9-ம் இடத்திலும், கேது 3-ம் இடத்திலும் சனி உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும், குரு மே மாதம் 16-ம் தேதிவரை 2-ம் இடத்திலும்  மே மாதம் 17-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.

ராகு, கேது மற்றும் குருவின் சஞ்சாரம் மே மாதம் 16-ம் தேதிவரையிலும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நற்பலன்கள் நடக்க வாய்ப்புண்டு. தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தை மற்றும் தாய்வழி உறவுகள் சிறக்கும். அவர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பிரயாணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் வர்த்தகம் மேம்பட்டு சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் வரும். சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த சமயத்தில் வேற்று இன மத மக்கள் அந்நிய மொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவியாகவும் நட்பாகவும் இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்கம் நூதனமான பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள் மேன்மையான நிலையினை அடைவார்கள். ஏற்றுமதி –இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு தற்போது ஏற்ற காலமாகும். இந்த காலத்தில் இவர்கள் ஒரு கணிசமான தொகையை சம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். சிலருக்கு கோவில், மடாலயம் [போன்ற  இடங்களில் கௌரவப் பட்டங்களும் பதவி, பொறுப்புகளும் கிடைக்கும். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் ஆசியும் கிடைக்கும்.சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்ளுதல் போன்ற வாய்ப்பினைப் பெருவார்கள். பூர்வீகச் சொத்து மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் மேன்மையும் கிடைக்கும். சிலர் இந்த சமயத்தில் தர்ம நியாயங்களுக்கு உட்படாத தவறான  வழிகளில் பணம் தேடுவார்கள். எதிர்பாராத வருமானம் ஈட்டுவார்கள். அதன் காரணமாக தன்னுடைய பரம்பரை குலதர்மம் ஆகியவற்றை விட்டுவிட்டு கேவலமான நிலையில் பணமே பிரதானமாக அலையும் வாய்ப்புண்டு. அரசாங்கம் ,அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகளால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. உங்களுடைய எதிரிகளும்கூட இப்போது உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துள்ளவர்கள்கூட உங்களை எதிகொள்ளத் துணிய மாட்டார்கள்.  . அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும். இந்த சமயம் ஊதிய உயர்வு, பணிஉயர்வு கிடைக்கும். சொந்த ஊரை விட்டு வேற்றூரில் வேலைபார்த்துக்கொண்டு, குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றி உத்தரவு வரும். மேலதிகாரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் பாத்திரமாவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான நிலை ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். செய்யும் தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக  லாபம் வரும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். எடுத்த காரியங்களை உங்களுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி திறமையாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மனைவி வழி உறவினரால் நன்மை கிடைக்கும். இதுவரை குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு கூட்டுத்தொழில் வாய்ப்பு கிடைக்கும். நல்ல கூட்டாளி கிடைப்பார். சிலர் ரிப்பேர் செலவு கொடுத்துவந்த வன்டியை விற்றுவிட்டு புதிய வண்டி வாங்குவார்கள். புதிய வீடுகட்டி கியரகப்பிரவேசம் செய்வார்கள். புதிய ஆடை ஆபரணம் வாங்குவார்கள். மாணவர்கள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். மாமன் வழி உறவினர்களால் தற்போது உதவிகள் கிடைக்கும். தொழிலாளி, வேலைக்காரர்களால் நன்மை கிடைக்கும்.மாற்று மத நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றும். உங்கள் முகத்தில் உள்ள பொலிவு அனைவரையும் கவர்ந்திழுக்கும். தொழிலில் மேன்மை ஏற்படும். புத்திர- புத்திரிகள் மேன்மை அடைவார்கள். புத்திர- புத்திரிகள் கல்வியில் ஏற்றம் அடைவார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பெரியோர்கள் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் இப்போது திருமணம் ஆகும். மாணவராக இருந்தால் தற்போது உன்னதமான நிலையை அடைவீர்கள். மனதில் தைரியமும் செயலில் சுறுசுறுப்பும் ஏற்படும். கல்வி, வங்கி,பத்திரிக்கை, எழுத்துத்துறை,ஆசிரியர் பணியில் உள்ளோர் மேன்மை அடைவார்கள். உங்களுடன் பழகும் நண்பர்களுக்கு தக்க சமயத்தில் உதவிகள் பல் செய்வீர்கள். நண்பர்களின் துயரங்களைப் போக்குவீர்கள். நல்ல வருமானம் கிடைப்பதுடன், பல பொறுப்புகளும் உங்களுக்கு ஏற்படும். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வாங்குவீர்கள். உங்களுக்கு அதிகாரமான பதவி ஒன்று கிடைக்கும்.சிலருக்கு விதவைப் பெண்களுடன் பழக்கவழக்கங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அந்தப் பெண்களுக்கு துன்பங்களைக் கொடுப்பார். உங்களுடைய பராக்கிரமும் வீரதீரச் செயல்களும் மற்றவர்களால் பாராட்டப்படும். உங்களுடைய முயற்சி இல்லாமலே வருமானம் உங்களைத் தேடி வரும். ஆகவே இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும்.

சிலர் மத விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி அதன்மூலம் நல்ல புகழை அடைவார்கள். சிலர் அதைப் பயன்படுத்திக்கொண்டு தீய வழிகளில் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். அதனால், எதிர்காலத்தில் இவர்களுடைய கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படும். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் வெற்றிபெற்று சாதனை வீரராக வலம் வருவார்கள். குடும்பத்தாரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேண்டியதையெல்லாம் வாங்கித் தருவீர்கள். அதனால் குடும்பத்தினர் உங்கள்மீது அன்பைப் பொழிவார்கள்.

கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தந்தை உடல்நலம் பெறுவார். மருத்துவச் செலவுகள் குறையும். மாமன் மற்றும் மாமன் வழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். அரசு வங்கியில் கடன்பெற்று தொழில் தொடங்கவும் இது நல்ல நேரம். இதுவரை அனுபவித்து வந்த துன்பம் தொல்லை வறுமை அனைத்தும் நீங்கி வளம் பெறுவீர்கள். இதுவரை குடத்துக்குள் இட்ட விளக்காக உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த நிலை மாறி இனிமேல் உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரிய வரும். சொன்னது சொன்னவாறு நடந்துகொண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்வீர்கள். அதனால் நாணயம் மிக்கவர் என்று பெயரெடுப்பீர்கள். இதுவரை வராமல் இருந்த கடன்கள் இப்போது வசூலாகும். தற்போது உங்களுக்கு எதிராக உங்கள் எதிரிகளால் செய்யப்படும் காரியங்கள் கூட சாதகமாக மாறி உங்களை மேம்படுத்தும்.

இனி மே மாதம் 17-ம் தேதியன்று குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்துக்கு மாறப்போகிறார். அந்த சஞ்சாரம் நல்லது என்று சொல்ல முடியாது. அதோடு சனியின் 8-ம் இடத்து சஞ்சாரமும் அவ்வளவு சுகமில்லை. இந்தசஞ்சார பலன்களைப் பார்ப்போம்.

நீங்கள் செய்யும்  செயல்கள், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் தங்கள் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலை செய்வதற்காக வெளியூருக்கு சென்றுவிடுவார்கள். உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சகோதரர்கள் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். அவர்களுடன் நல்லுறவு பாதிக்கப்பட்டு கருத்து வேறுபாடுகள் ஏற்டும். கல்வி கேள்விகலில் தடை ஏற்படும். படிப்பில் கவனம் செல்லாமல் போகும். மனதில் தைரியம் இல்லாமல் எந்த வேலைக்கும் தயங்கியபடி தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பீர்கள். பேச்சில் வேகம் காணப்படும். யாரிடமும் சட்டென்று கோபித்துக்கொள்வீர்கள். அதனால், பல விரோதங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரும். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும், உங்கள் உறவினர்களுக்கும் ,உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு பாதிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் யாருக்காவது வாக்குறுதி கொடுத்துவிட்டு தவிப்பீர்கள். மேலும் நாணயம் தவறுவதற்கான வாய்ப்பு தெரிகிறது. எதிர்பாராத வருமானம் கிடைத்தால்கூட கையில் காசு இல்லாமல் போகும். ஆனால், நீங்கள் பெரும் குழப்பத்தில் தத்தளிப்பதால் கையில் காசு இல்லாத சமயத்தில் அவசியமான செலவுகளை விட்டுவிட்டு அனாவசியமான செலவுகளை செய்வீர்கள். பிறகு அவசியத்துக்கு தவிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குஏறையும். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். உங்கள் வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். தெய்வதரிசனம் குலதெய்வ வழிபாடுகள் த்ள்ளிப்போகும். சிலர் கோவில் கட்டுமானப் பணிகளிலும் தடை ஏற்பட்டு திண்டாடுவார்கள்.  சிலருக்கு தீர்த்த யாத்திரை தட்டிப்போகும். தான தரும காரியங்கள் செய்யமுடியாமல் தடை ஏற்படும். சிலருக்கு கல்வியில் தடைகள்ஏற்படும். சிலர் அவசிய செலவுகளுக்காக நகைகளையும் சொத்துக்களையும் அடகு வைப்பார்கள். ஞானிகள், சாதுக்கள், பெரியோர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாவார்கள். தொழிலில் மந்த நிலை ஏற்படும். சிலருக்கு அலுவலகத்தில் வேலைப்பளு ஏற்படும்.  சிலர் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வேண்டாத பணிமாற்றம் ஏற்படும். கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசம் ஏற்படலாம். அல்லது வேறு சிக்கல் உண்டாகலாம். சிலருக்கு புத்திரர்களின் போக்கு கவலையைக் கொடுக்கும். அவர்களது கல்வி மற்றும் முன்னேற்றம் தடைப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் தாமதமாகும். அவர்களுக்கான சுபகாரியங்கள் தடைப்படும். அவர்கள் பணிபுரியும் இடங்களில் தேவையற்ற பிரச்சினைகளும் ,மனக்கசப்பும் ஏற்படும். பிதுர் காரியங்கள் தள்ளிப்போகும். அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளால் தொல்லை ஏற்படும்.உங்கள் அந்தஸ்து குறையும்.

மூன்றாமிட குருவோடு அஷ்டமச் சனியும் சேர்ந்துகொள்வதால், கொஞ்சம் கடுமையான பல்ன்களாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. எந்த செயலைச் செய்தாலும் குறுக்கீடும் அதனால் மனம் தளர்வதுமன சூழ்நிலை ஏற்படும். பணவரவைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொது இடங்களில் அதிகம் பேசி பிரச்சினையை வரவழைத்துக்கொள்வீர்கள். சகோதரர்கள் உதவுவதாக எண்ணி சிரம நிலையை உருவாகி விடுவார்கள். எக்காரணம் கொண்டும், விலை உயர்ந்த பொருட்கள் சொத்து ஆவணங்களைபிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தின் தேவைகளை நிறவேற்ற அவ்வப்போது கடன் வாங்குவீர்கள். மாற்றுகுணம் ஊள்ளவர்களால் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அடிக்கடி கடின அலைச்சல் மிக்க பயணம் ஏற்படும். ரியல் எஸ்டேட் , நிதிநிறுவனம், கலவி நிறுவனம்,  ட்ரேவல்ஸ், லாட்ஜ், ஹோட்டல்ஸ்,டிபர்ட்மென்டல் ஸ்டோர், ஆட்டோமொபைல், மின்சார ,மின்னணு சாதனங்க்ள ஃபர்னிச்சர், தோல் பொருள் உற்பத்தி  முதலிய தொழில்களில் ஈடுபட்டவர்கள் பின்தங்கிய நிலை காண்பர். மற்ற தொழில் செய்பவர்களுக்கும் சுமாரான நிலையே இருக்கும். வாகன வகையில் அதிகம் செலவாகும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் குளறுபடிகளை எதிர்கொள்வர். பெண்களுக்கு பணியில் கவனமின்மையால் அவப்பெயர் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான விஷயங்களில் தாமதம் ஆகும். அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசி சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். உங்களின் சிரமங்களைக் கண்டு எதிரிகள் பரிகாசம் செய்வர். பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாததால், நீங்கள் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவீர்கள். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். விவசாயிகள் நிலம் சம்பந்தமான பத்திரங்களையும் அத்ற்குண்டான ஆவணங்களையும் பிறரை ந்ம்பி ஒப்படைக்கக்கூடாது. கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும்.அஷ்டமச்சனி சிலசமயம் பணவரவைக் கொடுப்பார். ஆனால், நீங்கள் ஏமாந்துவிடவேண்டாம். பின்னாலேயே அதிக செலவைக் கொடுத்து கடனாளியாக்குவார். கஷ்டத்தில் உங்களைச் சிக்க வைப்பதற்காகவெ அஷ்டமச்சனி இந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவார். கூட்டுத் தொழில் செய்வோருக்கு பார்ட்னருடன் பிரச்சினை ஏற்பட்டு கோர்ட் வழக்குவரை போகும். நல்ல செழிப்பான சூழ்நிலை இருக்கும். அது ஒரு  நிஜத் தோற்றம் இல்லை என்பதுபோல ஒரு பெரிய சரிவை சந்திக்க நேரும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன்வேலை செய்யும் பெண்ணிடம் அளவுக்கு மீறி உறவாடி பெயரைக் கெடுத்துக்கொள்ள நேரும். குடும்ப கௌரவமும் இதனால் பாழாகும்.  இந்தசனி உச்ச சனியாக இருப்பதால் ஒரேயடியாக கவிழ்த்துவிட மாட்டார்.  நிதிநிலைமை ரொம்ப மோசமாகி விடாமல் காப்பாற்றுவார். ஆனால், அஷ்டமச்சனி என்பதால், எதையும் உறுதியாக நம்பிவிட முடியாது.

இப்படியாக கிரகங்களின் பலவித சஞ்சாரங்களால், ஏற்படும் பலன்களைப் பார்த்தோம். மொத்தத்தில் ஆண்டின் பிற்பகுயில்தி மட்டுமே கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். முற்பகுதி யோகமாக இருக்கும்.  எதையும் தெய்வ வழிபாட்டின் மூலம் சரிபண்ணிக்கொள்ளலாம்.

பரிகாரம்:

மே மாதம் 17-ம் தேதி முதல் குரு 3-ம் இடத்துக்கு செல்வது நல்ல சஞ்சாரமல்ல. எனவே வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று கொண்டக்கடலை மாலையும் மஞ்சள் நிற மாலையும் சாத்தி வழிபடவும். சனீஸ்வரனின் 8-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லை. சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள்தீபம் ஏற்றவும். தினமும் காக்கைக்கு அன்னமிடவும். . கறுப்புப் பொருள்களை தானம் செய்யவும். வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யவும். ‘ஹனுமான் சலீஸா’ படிக்கவும்.

பல் வளமும் சிறப்பும் பெற்று புத்தாண்டில் புது மகிழ்ச்சி காண வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறோம்.

tags : meena rasi palan, meena rasi, meenam, rasi palan, rasi palangal, ஆண்டு பலன், ராசி பலன், ராசி பலன்கள், மீன ராசி, மீன ராசி பலன்கள், வருட பலன், வருட பலன்கள், மீனம், மீன ராசி, 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 2012  rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 மீன ராசி பலன், 2012 meena rasi palan, meena rasi palan 2012,meena rasi, meena rasi palan, meena rasi, meena rasi 2012,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>