/* ]]> */
Mar 312012
 

3 விமர்சனம் – 3 திரை விமர்சனம் – 3 சினிமா விமர்சனம் – 3  movie review

 3 விமர்சனம்

சூப்பர் ஸ்டார் மகளின் இயக்கத்தில் அவரின் மருமகன் ஹீரோ – சூப்பர் ஆக்டரின் மகள் ஹீரோயின் என்ற எதிர்பார்ப்பான காம்பினேஷன் , தனுஷை ஒரே நாளில் ஒபாமாவாக்கிய ” வை திஸ் கொலவெறி டி ” பாடல் , அதை அருமையாக மார்கெட்டிங் செய்த விதம் , அட்ராக்டிவான ஸ்டில்கள் இவையெல்லாம் படத்திற்கு பெரிய ஓபனிங் கொடுத்திருந்தாலும் ,  ஐஸ்வர்யா தனுஷை  பார்த்து  ” வை திஸ் கொலவெறி ” என்று கேட்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது படம் …

முதல் சீனிலேயே தனுஷ் இறந்து கிடக்க அவரின் மீதான ஸ்ருதியின் நினைவலைகளில் தொடங்குகிறது கதை … பணக்கார தொழிலதிபரின் மகன் ராம் ( தனுஷ் ) , தன் மகளை மேற்படிப்புக்கு அமெரிக்கா அனுப்ப வேண்டுமென்ற முயற்சியில் இருக்கும் ஒரு தாயின் மகள் ஜனனி ( ஸ்ருதி ) இருவருமே +2 வில் இருந்து காதலித்து , பெற்றோர்களின் ஆதரவும் இல்லாமல் , பெரிய எதிர்ப்புமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்… இரண்டாவது பாதியில் தனுஷ் பயோ போலர் டிஸார்டர் என்ற மனவியாதியில் அவதிப்பட்டதும் , அதன் முடிவில் என்ன ஆனார் என்பதும் நண்பன் செந்தில்
( சுந்தர் ) பாயிண்ட் ஆப் வியுவில் இருந்து விளக்கப்படுகிறது …

தனுஷ் பள்ளி மாணவன் , குடும்பஸ்தன் என்ற இரு வேடங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டியிருக்கிறார் … குறிப்பாக கத்தியை கையில் வைத்துக்கொண்டு அழும் காட்சி அற்புதம் … அதே சமயம் நன்றாக நடிக்கிறார் என்பதற்காக ஒரே மாதிரியான மாதிரியான பாத்திர தேர்வுக்குள் சிக்கிக்கொள்கிறார் என்றே சொல்ல வேண்டும் … இதே தவறை தான் தனுஷ் தன்னை ஆக்சன் ஹீரோவாக முன்னிறுத்த சுள்ளான், புதுகோட்டையிலிருந்து சரவணன் போன்ற படங்களில் நடித்த போதும் செய்தார் … ஷோ சேஞ்ச் த கியர் மாமு !

உண்மையிலேயே அவர் கொடுத்து வைத்தவர் … அவர் பெற்ற தேசிய விருதுக்காகவோ , சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்பதற்காகவோ இதை சொல்லவில்லை , அப்பா – அண்ணனை தொடர்ந்து மனைவியும் அழகான ஹீரோயினுடன் நெருக்கமாக நடிக்க வைத்திருக்கும் கொடுப்பினையை தான் சொல்கிறேன் …

ஸ்ருதிக்கு நடிப்பு இயற்கையாகவே வருகிறது … பள்ளி பருவங்களில் தனுஷை விட நம்மை அதிகம் கவர்வது இவரே … ஐ லவ் யு சொல்லும் காட்சிகளில் க்யுட் … நிறைய இடங்களில் இவரை அழ விட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம் … தனுஷின் பள்ளி தோழனாக வரும் சிவகார்த்திகேயன் அடிக்கும் கமன்ட்ஷ்களுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் … மற்றொரு நண்பன் சுந்தரை பள்ளி மாணவனாக ஏற்க முடியாவிட்டாலும் இரண்டாவது பாதியில் நடிப்பை பாராட்டலாம் …

பிரபு , பானுப்ரியா , ரோகினி இவர்களெல்லாம் சரியான பாத்திர தேர்வுகள் … இளையராஜா , ரஹ்மானுக்கு பிறகு முதல் படத்திலேயே இவ்வளவு புகழ் அடைந்தது அனிருத் ஆகத்தான் இருக்க முடியும் … எல்லா பாடல்களுமே அருமை , ஆனால் பின்னணி இசையில் கவனம் தேவை … ” கொலவெறி ” பாடல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு காட்சியமைப்பில் இல்லை.. ஒளிப்பதிவு பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை … எடிட்டர் இரவில் வேலை பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன் , அவர் தூங்கி வழிந்திருப்பது குழப்பமான எடிட்டிங்கில் நன்றாகவே தெரிகிறது … எக்கச்சக்க ஜம்ப் …


இளமை துள்ளலான காதல் கதையுடன் , சுஜாதாவின் ” ” நாவலில் வருவது போல ஹளுஷினேஷனால் பாதிக்கப்பட்ட ஹீரோவின் கதையையும் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா … தனுஷ் – ஸ்ருதி இடையேயான பள்ளி பருவ காதல் காட்சிகள் நம்மை படத்தோடு ஒன்ற வைத்தாலும் , பிற்பாதியில் சொல்லப்படும் தனுஷின் மனோவியாதி  நம் மனதை கவரவில்லை …

எந்நேரமும் பென்சிலால் எதையாவது எழுதிக்கொண்டிருந்தாலும் அழகான பிளாட் வாங்கி கொடுக்க மறக்காத அப்பா , கணவனின் நண்பன் இருக்கிறான் என்ற விவஸ்தையே இல்லாமல் கணவன் மடியில் உட்காரும் அன்பு மனைவி இவர்களிடம் கூட தன் வியாதியை தனுஷ் சொல்லாமல் விடுவது , அவரின்  மனோவியாதிக்கான எந்த பின்னணியையும் விவரிக்காதது , உற்றார் – உறவினர் முன்னிலையில் பல சடங்கு , சம்பிரதாயங்களுடன் கட்டப்படும் தாலியை குடிகார கும்பலுடன் தனுஷ் பப்பில் வைத்து கட்டுவது , ( ஐஸ்வர்யா தாலி கட்டும் சடங்கையே தவிர்த்திருந்தால் கூட முற்போக்காக சிந்தித்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டிருக்கலாம் , அதை விடுத்து இதை போன்ற  சீன் வைத்தது கழிவறையில் வைத்து விருந்து சாப்பிடுவது போல இருக்கிறது ) ,

” மயக்கம் என்ன ” மயக்கத்தில் காட்சிகள் நகர்வது , நிறைய இடங்களில் பின்னணி இசையே இல்லாமல் ஏதோ டாக்குமென்டரி பார்ப்பது போன்ற உணர்வை கொடுப்பது , பெற்றோர்கள் எதிலுமே தலையிடாமல் தேமே என்றிருப்பது இவையெல்லாம் த்ரீயை பார்க்கும் ரசிகர்களுக்கு  கொலவெறியை கொடுக்கின்றன … ஐஸ்வர்யா தனுஷ் பாடல்களுக்கும் , அதை பிரபலப்படுத்தியதற்க்கும் கொடுத்த முக்கியத்துவத்தை கொஞ்சம் கதைக்கும் கொடுத்திருக்கலாம் … சாரி ஐஸ் பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் …

tags

3, three , tamil film, tamil film review , mayakkam enna , aishvarya, aishwarya , aishwarya dhanush, dhanush, 3 film review, 3 film, movie review, three tamil movie , three tamil movie review,anirudh, prabhu, siva karthikeyan, rohini , kolaveri

3, த்ரீ , திரைப்பட விமர்சனம், த்ரீ திரைப்பட விமர்சனம், ஐஷ்வர்யா தனுஷ் , ஐஷ்வர்யா , பானுப்ரியா , இளையராஜா , சிவ கார்த்திகேயன் , பிரபு, ரோகினி , ரோஹினி , அனிருத், கொல வெறி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>