/* ]]> */
Jan 092012
 

 3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

தனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா நேற்று சன் டிவியில் காண்பிக்கப்பட்டது.

3 பட பாடல் வெளியீட்டு விழா

3 பட பாடல் வெளியீட்டு விழா

ஆரம்பத்தில் அனிருத்தை  நிக்ழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலாய்ப்பதுடன் கலக்கலாய் தொடங்கியது. மனுஷன் நிஜமாகவே ஸ்கூல் பையன் மாதிரி தான் இருக்கிறார். அதிலும் அவர் வேட்டி சட்டை கட்டி வந்தபோது விஜய் டிவி புகழ் சிவா அவரைப் பார்த்து “நான் சட்டை காயப் போட்டிருக்காங்கன்னு நினைச்சேம்பா” என சொன்னது அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்தியது.

தனுஷ் டிஷர்ட் ஜீன்ஸ், லெதர் ஜாக்கெட், வேஷ்டி சட்டை என ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து அசத்தினார். ஷ்ருதி ஒரு அழகான வெள்ளை கவுனில் வந்து எல்லாரையும் கவர்ந்தார். அவர் குரலும் அவ்வளவு அழகு, பேசும்போது. ஆனால் பாடுகையில் ஏனோ அவ்வளவாக கவரவில்லை. தனுஷும் ஸ்ருதியும் சேர்ந்து பாடும் டூயட்டில் தனுஷ் மெல்ல மெல்ல பிட்சை குறைத்து,

“அவங்க ப்ரொஃபஷனல் சிங்கர் ஆனா என்னால பாட முடியாது என சொல்ல”

ஷ்ருதி பதிலுக்கு

” சார், இதுக்கும் கீழ கம்மி பண்ணா அப்புரம் அவங்களுக்கு கேக்காது என சொல்ல, களை கட்டியது ஆடியோ லான்ச்!

ஷ்ருதி தனுஷ் 3 பட பாடல் வெளியீட்டு விழா

ஷ்ருதி தனுஷ் 3 பட பாடல் வெளியீட்டு விழா 3

ஸ்ருதியும் தனுஷும் சேர்ந்து பாடிக்கொண்டே ஆட, ஐஷ்வர்யா இடையில் வந்து “உங்களை பாடத்தானே சொன்னோம்… எதுக்கு சேர்ந்து ஆடறீங்க?”

என கலாய்க்க , செம ரகளையாய் முன்னேறியது ப்ரோக்ராம்.

இடையில் காட்டிய ட்ரெய்லர் நம்மை ஆச்சர்யப்படுத்தியது. தனுஷும் ஷ்ருதியும் பள்ளிப் பாலகர்களாய் தோன்றும் காட்சியும் காட்டினார்கள். அநேகமாக 3 ஒரு எமோஷனல் லவ் ஸ்டோரியாக இருக்கும்  என ட்ரெய்லர் பார்க்கும்போது தோன்றியது.

தனுஷ் ஸ்ருதி ஹாசன் 3 பட பாடல் வெளியீட்டு விழா

தனுஷ் ஸ்ருதி ஹாசன் 3 பட பாடல் வெளியீட்டு விழா

தனுஷ், ஐஷ்வர்யா டைரக்டர் ஆனதால் அங்க வா, இங்க போ என படப்பிடிப்பு டைமில் தன்னை டார்ச்சர் செய்ததாய் சொன்னார். அப்படியே, ஐஷ்வர்யாவையும் கம்பல் செய்து ஒரு பாடலை விஜய் ஏசுதாசுடன் சேர்ந்து பாட வைத்தார். ஆனால் தனுஷும் சரி, ஐஷ்வர்யாவும் சரி, ஷ்ருதியும் சரி ஆரம்ப பாடல்கள எல்லாவற்றையும் கொலை செய்தார்கள். விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சத்யபிரகாஷும் அஜீஷும் பாடிய சோலோ பாடல்கள் அருமை.

அனிருத் தானே இசையமைத்து பாடிய பாடல் ஓகே ரகம்.

நடுவில் சிவா செய்து காட்டிய தனுஷ் காதல் கொண்டேன் மிமிக்ரியும், மற்றொரு தொகுப்பாளர், ஒவ்வொரு நடிகரும் கொய் திஸ் கொலவெறி பாடினால் எப்படி இருக்கும் என செய்த மிமிக்ரியும் கைதட்டல் பெற்றன. அதிலும் விஜய்காந்த் சொல்வது போல் “மொதல்ல ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ” என சொல்ல அரங்கமே அதிர்ந்தது !

கடைசியாய் கிளைமேக்சில் தனுஷ் வொய் திஸ் கொல்வெறி பாடலை ஜாஸ் பாக்க்ரௌண்டில் ஆரம்பிக்க , லோக்கல் பாட்டுத்தான லோக்கலா பாடுங்க என ஷ்ருதி கலாய்க்க, தனுஷ் ஃபார்முக்கு வந்தவராய் வொய் திஸ் கொல்வெறி டெம்போவை ஏத்த, மெய்மறந்த ஆடியன்ஸ் ஒன்ஸ்மோர் கேட்க,

ரசிகர்களுக்காக மீண்டும் பாடினார் தனுஷ்.

ஆக மொத்தம், 3 பட ஆல்பம், கட்டாயம் பாப்புலர் ஆகும், அனிருத்துக்கு பெரும் பேர் வாங்கித் தரும் எனபதற்கு எந்த சந்தெகமும் இல்லாமல் முடிந்தது நிகழ்ச்சி.

3  movie songs audio launch

3 movie songs audio launch

tags : தனுஷ், 3, 3 பட பாடல் வெளியீட்டு, 3 பட பாடல்,  3 film review, 3 film songs, dhanush, 3 movie songs, 3 movie audio release function, 3 movie audio release, aishvarya, sruthi hasan, shruti hasan,

dhanush and shruti hasan with director aishwarya at the audio launch function of 3 movie songs including the famous hit why this kolaveri di .

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>