/* ]]> */
Mar 012013
 

                                                                                                                                     21 அண்டு ஓவர்
 

21  ஆங்கில பட விமர்சனம் ஆஸ்கா

21 ஆங்கில பட விமர்சனம் ஆஸ்கா

 
                                                                                                                                    ஹாலிவுட் படம்

ஒருவன் தன் வீட்டைவிட்டு விலகி வெகு தொலைவில் செல்லச் செல்ல ஆபத்தின் அருகில் செல்கிறான் என்பது வெளிநாட்டுப் பழமொழி.

வீட்டைவிட்டு வெளியே அதுவும் இரவில் செல்வது அதிக ஆபத்து அதிலும் ஒத்த வயதுள்ள பதின்பருவக் கூட்டாளிகளுடன் போவதும் இரவை வெளியில் கழிப்பதும் கூடுதல் அபாயம் அதே இரவில் மது அருந்துவதும் கேலிக்கையில் ஈடுபடுவதும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அபாயத்துக்குள் கொண்டு செல்லும்.

ஒரு கதை சொல்லப்படுவதுண்டு எமதர்மன பாவத்துக்கும் கூலி வழங்கும்போது கொலைக்காரன்,கொள்ளைக்காரன்,திருடன்,பாலியல் குற்றம் செய்தவன் அனைவருக்கும் தனித்தனி தண்டனை வழங்குபவன். ஆனால் குடிகாரனான மது அடிமைக்கு இந்த தண்டனை எல்லாவற்றையும் சேர்த்து வழங்குவானாம். காரணம் கேட்டால் இந்த எல்லா குற்றங்களையும் இந்து மத அடிமை செய்திருப்பன் என்று கூறியதாகக் கதை உண்டு.

‘ 21 அண்டு ஓவர் ‘ ஹாலிவுட் படமும் இது பற்றியே பேசுகிறது. கருத்தாகச் சொன்னால் ஏற்க மாட்டார்கள். அதனால் காமெடியாகச் சொல்கிறது.

படத்தின் நாயகன் டீன் ஏஜ் படிக்கட்டுகள் ஏறி வயது 21 ஐத் தொட்டு இருப்பவன். அவன் ஒரு மருத்துவ கல்லூரி மாணவன். மறுநாள் அவனுக்கு முக்கியமான தேர்வு இருக்கிறது. அது வேலைக்கான நேர்கானல் போல தவிர்க்கக் கூடாதது எதிர்காலத்தை முடிவு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் கொண்டது.

இந்நிலையில் அவனுக்கு பிறந்தநாள் வருகிறது. பிறந்த நாள் கொண்டாட அவனது இரண்டு முக்கியமான நண்பர்கள் ‘ஜாலியாக போலாம் வாட வெளியே’ என்று பார்ட்டிக்கு அழைக்கிறார்கள் வீட்டு எல்லை தாண்டினாலே நெருக்கமான நண்பர்கள் இருந்தாலே டீன் ஏஜ் இளைஞர்களின் மனதில் சாத்தான் குடி புகுந்து விடுவானே.

ஜாலி பார்ட்டியில் மது அருந்துகிறார்கள். மது உள்ளே போனதும். கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு,கௌரவம் எல்லாமே காற்றில் பறக்கின்றன. சொல்லக் கூடாதவை எல்லாவற்றையும் பட்டியலிடாத குறையாகச் செய்கிறார்கள். அடிதடி,அவமானப் பலாத்காரம்,சாபம் எல்லாவற்றையும் சந்திக்கிறான் நம் நாயகன் ‘மெய்’ மறந்த நிலையில் அவன் அடிக்கும் லூட்டிகள் சந்திக்கும் ஆபத்துக்கள் கலகலப்பும் விறுவிறுப்பும் கலந்தவை இறுதியில் அவன் என்னவாகிறான் என்பதே கதை.

ஓர் இரவு மூன்று நண்பர்கள் பல தப்புகள் இதை வைத்துக் கொண்டு படு ஜாலியாகச் சொல்லப்பட்டிருக்கும் கதைதான் ’21 அண்டு ஓவர்’.

இப்படி ஒரு சிறிய நூலிழையை எடுத்து வைத்துக் கொண்டு அழகான நகைச்சுவை புடவையே நெய்து இருக்கிறார்கள். ஜான் லூகாஸ் மற்றும் ஸ்காட் மூர். இவர்கள் இணைந்து சிரிக்கச் சிரிக்க திரைக்கதை நெசவு செய்திருப்பது இவர்களது திறமையை வெளிப்படுத்துவதும்.

இயக்கம் – ஜான் லூகாஸ், ஸ்காட் மூர்,ஜான் லூகாஸ் ஏற்கனவே ‘தி ஹேங் ஓவர்’ படம் மூலம் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர்.

மைல்ஸ் டேலர்,ஜஸ்டின் சென் ஜோனதான் கெஸ்ட்ஜ்,ஸ்கைலர் ஆஸ்டின்,சாரா ரைட் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படக்கதை கலிபோர்னியாவிலுள்ள சான்டா கிளாரிடாவில் மையம் கொண்டுள்ளது. படக்கதை பாத்திரங்களின் குறைச் சித்திரங்கள் இவற்றின் செய்கைகள் பற்றி சுவாரஸ்யமாக சொல்வதால் அனாவசியமான பிரம்மாண்ட அலங்காரங்கள் செய்யப்படவில்லை. கதைக் கருவும் காட்சிகளும் மனித உணர்வுகளுமே வெற்றிக்கு உத்திரவாதம் தருபவை என்பதே இயக்குநர் நம்பி இப்படத்தை எடுத்திருக்கிறார்.

இப்படத்தை தமிழகம்,பெங்களூரில் ப்ளு மேட் பிக்சர்ஸ் ரமேஷ், சக்தி இணைந்து வெளியிடுகிறார்கள். மார்ச் 8 ல் வெளியாக இருக்கும் இப்படம் நம்மூர் திரையரங்குகளிலும் சிரிப்பொலி எழுப்ப வருகிறது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.