/* ]]> */
Dec 102020
 

2021 புத்தாண்டு பலன்

new year 2021web

மீன  ராசி:

meenam-rasi

    தற்போது குருபகவான்   2021 நவம்பர்   மாதம் வரை, லாப ஸ்தானமான 11-ம் இடத்த்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு சாதகமான சஞ்சாரம் என்பதால், நற்பலன்களாக நிகழ்ந்து வரும்.  நவம்பர் மாதத்துக்குப் பிறகு குரு உங்கள் ராசியில் விரய குருவாக சஞ்சரித்து அசுப பலன்களைத் தருகிறார்.   சனி ராசிக்கு 11ல் சஞ்சரிக்கிறார்.  நற்பலனாகத் தருவார்.  இனி பலன்களை ப் பார்க்கலாம்.

2021 நவம்பர்  மாதம் வரை , குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள்,  நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.
குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், நிறைவேற்றுவீர்கள். சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.
. எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன்  காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள்   குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.
காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள்.  தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும்.

2021  நவம்பர் மாதத்துக்குப் பின்  நிகழும் ஜென்ம குருவின் சஞ்சாரம்  சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்., சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும்.

வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலருக்கு ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.
தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சர்வ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல்நோய்கள் தோன்றும்.    தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும்.
தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்ம் முயர்ச்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.
மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 27ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளதாகவும்  குறிப்பிடப்படுகின்றது.

சனி பகவான் காலபுருஷ லக்கினமான தனுசு ராசியிலிருந்து  மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.   சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இந்த கிரக சஞ்சாரம் 2 1/2 வருஷங்கள் நீடித்து உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். உங்களுக்கு பல வகையிலும் நன்மை செய்யும். பல வழிகளிலும் பணம் சேரும். நோய்கள் நீங்கி தேக பலமும் புதுப் பொலிவும் ஏற்படும். புதுத் தெம்பும் உற்சாகமும் கூடும். உயர்ந்த அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கௌரவமும் அந்தஸ்தும் ஏற்படும். கட்டளை இடும் பெரும் பதவிகள் வந்தடையும். பெரிய மனிதர் என்று பெயரெடுப்பர். இல்லற வாழ்வில் பெரும் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தவறான உறவுகளிலும் சிலர் மனம் செல்லலாம். ஆனால் எதிலும் வெற்றியே உண்டாகும்.
அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் உண்டாகும். மாற்றான் பணமும் வந்து சேரும். பல நண்பர்கள் கிடைப்பார்கள். உதவுவார்கள். எல்லாக் காரியங்களாலும் லாபம் உண்டாகும். வீட்டில் தேவையான அனைத்து உணவுப் பொருட்கள்,மற்றும் வசதியான வாழ்க்கைத் தேவைகள் நிரம்பி வழியும். எல்லா விதத்திலும் இந்த 2 1/2 வருடம் பூராவும் ராஜயோகம் நிறைந்த சுபயோக சந்தோஷ வாழ்க்கையே இருக்கும். எல்லா வகையிலும் சனி 11-ல் நல்லதையே செய்வார்.
பெண்களுக்கு:
குடும்ப ஒற்றுமை ஓங்குவதோடு, உங்களின் சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும் மரியாதையும் ஏற்படுவது உறுதி. புகுந்த வீட்டிற்கு நீங்கள் செய்யும் உதவிகள் சிறியதே ஆயினும் உங்களை மிகவும் புகழ்ந்து தள்ளுவார்கள். கணவரும் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார். உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளித்து மறுப்பேதும் கூறாமல் சம்மதம் தெரிவிப்பார். உங்கள் முந்நிலையில் நல்ல காரியம் அல்லது சுப காரியம் இனிதே நடந்தேறும்.அது பெரும்பாலும், உறவினர் திருமணமாகவோ சகோதர சகோதரிகளின் திருமணமாகவோ அல்லது புகுந்த வீட்டாரின் திருமணமாகவோ எப்படி இருந்தாலும் அனைவரும் உங்களையே முன்னிறுத்தி கௌரவிப்பர். இந்த வகையில் உங்களின் செயலுக்கு பாராட்டுகள் குவியும். சனிபகவானின் முந்தைய சஞ்சாரத்தில், அவர் 10-மிடத்தில் சஞ்சரிக்கும்போது தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இப்போது சனியின் 11-மிட சஞ்சாரத்தின்போது அடியோடு மாறிவிடும். திறமையிருந்தும் அதற்கேற்ற உத்தியோக உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ இதுநாள் வரை உங்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். அத்தகைய நிலை மாறி உங்களைத் தேடி பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வந்தடையும். குழந்தையில்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாத சிலருக்கு தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். சிலருக்கு மூத்த சகோதர சகோதரிகளின் பொருளாதார உதவிகள் கிடைக்கும். அதன்மூலம் நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு இரண்டாம் திருமணம் அல்லது மறுமணம் நடக்கும் யோகம் உண்டு. மற்றபடி குருவானவர்  கன்னிராசியில செப்டம்பர் வரை  சஞ்சரிக்கும்  காலம் மட்டும் எச்சரிக்கையோடிருப்பது நல்லது.
மாணவர்களுக்கு சென்ற முறை நீங்கள் முயன்று படித்தும் நல்ல மதிப்பெண்களோ அல்லது பாராட்டோ கிட்டாததற்கு இதுநாள்வரை நடைபெற்ற சனியின் 10-மிட சஞ்சாரமே காரணம்ஏனெனில் சனியின் 7-ம் பாரவை உனக்ள் வித்யா ஸ்தானமான 4-மிடத்திலும், அவரின் 3-ம் பார்வை உங்களின் விரய ஸ்தானமான 12-ம் வீட்டையும் பார்ப்பதால், உங்கள் ஆற்றல், உழைப்பு மற்றும் நினைவாற்றல் போன்றவை பாதிகக்ப்பட்டதோடு, உங்களுக்கு வரவேண்டிய பலன்கள் சிதறடிக்கப்பட்டன. அந்த நிலை  இப்போது சனியின் 11-மிட சஞ்சாரத்தின்போது அடியோடு மாறுகிறது. உங்கள் உழைப்புக்கேற்ற பலன் உங்களைத் தேடிவர சனியின் 11-மிட சஞ்சாரம் பெரிதும் துணை புரியும், வீட்டிலும் வெளியிலும் உங்களைச் சேர்ந்தவர்களிடத்திலும் பாராட்டுக்குப் பஞ்சமே இருக்காது. சிறிதளவே நீங்கள் சிரமப்பட்டு படித்தாலும், அது பன்மடங்காக பலன் தர சனியின் இந்த சஞ்சாரம் துணைபுரியும். நீங்கள் விரும்பும் அல்லது உங்கள் தகுதிக்கேற்ற விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க ஏற்ற காலம் இதுவே ஆகும். மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி மூலையில் முடங்கிக் கிடந்த உங்களை உச்சாணிக் கொம்புக்கே ஏற்றிக் கொண்டு போகும். குருவின் கன்னி ராசி சஞ்சாரத்தின் போது மட்டும் எச்சரிக்கை அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு தேவையில்லாத சில வதந்திகளாலும், வேண்டாதவர்களின் போதனைகளாலும், உங்களின் உழைப்பிற்கேற்ற பாராட்டோ அல்லது உங்கள் தரமோ உயராமல் போயிருக்கலாம். இந்த அவல நிலை இப்போது அடியோடு மாறி உங்களின் உழைப்பிற்கேற்ற புகழும் உயர்வும் நீங்கள் நினத்துப் பார்க்காத அளவிற்கப் பெருக, இந்த சனிபகவானின் சாதகமான 11-மிட மாற்றம் பெரிதும் துணை நிற்கும். மேலும் செப்டம்பர் மாதம் நிகழப்போகும் குருவின் 9-மிட சஞ்சாரம் இதற்கு வலு சேர்க்கும். உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். உங்களின் நீண்ட நாளைய நியாயமான கோரிக்கைகளும் ஆசைகள் மற்றும் கனவுகளும் இந்தகாலக் கட்டத்தில் எளிதில் நிறைவேறும். பொருளாதாரத் துறையிலும் கணிசமான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். சொத்து சேர்க்கை மற்றும் வாகன யோகம் போன்றவை உங்களின் உண்மையான உழைப்பைப் பார்த்து உங்களுக்கு மேல் உள்ள கட்சிப் பிரமுகர்கள் தாமாகவே முன்வந்து கொடுப்பார்கள். நீங்கள்

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை  மஞ்சள் மலர்களாலும், கொண்டக்கடலை மாலை சாத்தியும் வழிபடுங்கள். சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள் தீபம் ஏற்றி வழிபடவும். வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.வெள்ளிக் கிழமைகளில் சிவப்பு மலர் கொண்டு மகாலஷ்மியை வணங்கவும்.வினாயகரை வணங்கி, அவரது கோவிலைச் சுத்தம் செய்யவும்.

[ உங்களுடைய ஜாதகப்படியான விரிவான பலன்களை ரூ. 950/= செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர்,'www.moonramkonam.com@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்].
****************************

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>