/* ]]> */
Dec 092020
 

2021- புத்தாண்டு பலன்கள்:

2021 puththANtu palan

மகரம்:

மகர ராசி

மகர ராசி

இந்த 2021 ம் ஆண்டின் துவக்கத்தில் நவம்பர்  மாதம் வரை   , குரு உங்கள் ஜென்ம  ராசியிலும்  அதன் பின்பு உங்கள் வாக்கு ஸ்தானமான 2-மிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.  ஜென்ம குரு அனுகூலமான பலன்களைத் தரமாட்டார். ஆனால்,குருவின் 2-மிட சஞ்சாரம் நற்பலன்களைத் தரும்.  சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். சனியின் இந்த சஞ்சாரமும் நற்பலன்களை   வழங்காது..

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

இந்த ஆண்டு நிகழும்  குருவின் ஜென்ம சஞ்சாரம். நடை,உடை, பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். விரக்தியும் சோர்வும் சலிப்பும் உங்களிடம் சொந்தம் கொண்டாடும். அடிக்கடி உங்கள் மனம் துவண்டுபோகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. ஒருமாதிரியாயிருக்கு அசத்துது; கிறுகிறுப்பாயிருக்கு என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பீர்கள். பித்தமயக்கம், தலைச் சுற்றல், சர்க்கரை, கொலாஸ்ட்ரல் ஈரல் கோளாறு, செரிமானப் பிரச்சினை என்றபடி அசௌகரியங்கள் மேலோங்கியிருக்கும்.

[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

ஜென்ம குரு பொருளாதார வசதியைக் கொடுப்பார் என்று சொல்லமுடியாது. வரவேண்டிய பணம் தடைப்படும். வந்து சேர்வதும் அரையும் குறையுமாக வரும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி, தவணை என்று வருமானத்தில் பெரும்பகுதி கடனுக்கே போய்விடும். பற்றாக்குறைப் பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதும் சமாளித்து சரிக்கட்டுவதும், வழக்கமான பிரச்சினையாகிவிடும். இதுமட்டுமல்லாமல் பணத்தை முன்னிட்ட கருத்துவேற்பாடுகள், மனஸ்தாபங்கள் என்று ஒன்று மாற்றி ஒன்று குடும்ப அமைதியை சீர்குலைக்கும். வீண்தகறாறும் அவப்பெயரும் ஏற்படும்.

ஜென்ம குரு சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப் பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலர் ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர். தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சரவ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நல்த்தில் கவன்ம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல் நோய்கள் தோன்றும்.

மனதைப் பக்குவப்படுத்தி தியானம் , இறைவழிபாடு என்ற பாதையில் சென்றால், ஆன்மீக குருமார்களின் தரிசனம், சாதுக்களின் நட்பு, பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவற்றில் ஈடுபட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.  மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது.  இனி இத்தனை கஷ்டங்களுக்கும் மருந்தாக,  குரு பார்வைகளும் , சனியின் பார்வைகளும் மிகவும் ஆறுதலான விஷயமாக இருக்கும். குருவின் சாதகமற்ற நிலை சனி பார்வையினால் மாறும். குருவின்  அசுப குணம் மர்றுபட்டு  சில சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். நீங்கள் தொழில் தொடங்குவதற்கு நண்பர்கள் கை கொடுத்து உதவுவார்கள். ஆரோக்கியம் சிறப்படையும். பாயில் படுத்திருந்தவர்கள் பமபரமாக சுழல்வார்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெறும் வழியை சனி காட்டுவார்.                         .

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்கு வழங்குவது moonramkonamkonam.com].

இந்தஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின்  நிகழும்  குருப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்புள்ளது. குரு,  குடும்ப வாக்கு ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து, 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்யவுள்ளார். எனவே உங்கள் ராசிக்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போகும்.  பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வந்து மகிழ்ச்சியளிக்கும். பிரிந்த உறவினர்களும் ஓடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாகும் அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும்  திருமண யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிட்டும். தொழில்- வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வீடு,மனை என்று சொத்து வாங்கும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். ரிப்பேர் செலவு வைத்துக்கொண்டிருந்த வாகனங்களை மாற்றி புதிய வண்டி வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகள் வெற்றி பெற்று, தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும்.  திரைப்படத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் உண்டாகும். விவசாயிகள் நல்ல லாபம் காண்பார்கள்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி  2020 ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி  2020 டிசம்பர் 27 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சனி பகவான் காலபுருஷ லக்கினமான தனுசு ராசியிலிருந்து  மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். சனி உங்கள் ராசிக்கு ஜென்ம சனியாக  திருக் கணிதப்பஞ்சாங்கப்படி ராசியிலேயே 2 1/2 வருட காலம் பிரவேசிக்கப் போகிறார். இந்த சஞ்சாரம் ‘ஜென்ம சனி’ என்று கூறப்படும். சனி ஜென்ம சனியாகப் பிரவேசிக்கும்போது எல்லாவற்றையும் விட அதிகமாகக் கொடிய பலனைத் தருகின்றான்.

உயிருக்குக் கண்டம், நோய்கள், பிறருடன் விரோதம், தன விரயம் , சிறைப் பயம், மான கௌரவ பங்கம் மாரக பயம் எல்லாம் உண்டாகும். தலை நோய், வைசூரி, பேதி போன்றவை தோன்றும். ஜல கண்டம் ஏற்படும். பித்த வாத நோய்கள் ஏற்படும். யாருக்காவது இவர் கர்மம் செய்ய வேண்டியது வரும். உணவின் நச்சுத் தன்மையால் தீரா நோய் ஏற்படும். தீ விபத்துகள் ஏற்படும்.
இவரே தம் உறவினர் ஒருவர் மரணத்துக்குக் காரணம் ஆகிறார். உடல் ஒளி கெட்டு தோற்றப் பொலிவு அழிகிறது. உடல் கருத்துத் தோன்றும். உறவினர்களும் நண்பர்களும் பிரிவர்.குழந்தைகளுக்கு நோய் காணும். வீண் அலைச்சல் அதிகமாகும். சிறைப் பயம் அல்லது சிறைவாசம் உண்டாகும்.
தொங்கிய முகத்துடன் பிறரிடம் சென்று கையேந்தி நிற்க வேண்டியது வரும். ஏதாவது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பர். கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்படும் ஆபத்தும் உண்டு. மனக் கிலேசமும் , உடலில் அளவுக்கு மீறிய உழைப்பால் சோர்வு முதலியவையும் உண்டாகும். இது 7 1/2 ச் சனியில் மிகவும் கொடுமை செய்யும் ஜென்ம சனிக்காலமாகும். நடு 21/2 வருஷமாகும். ஆயுர்த்தாயம் நிறைவும், சமீபத்து 7 1/2ச் சனியும் ஜென்ம சனியாய் அமைந்துவிட்டால், மரணமும் சம்பவிக்கலாம்.
பெண்களுக்கு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானின் ஏழாம் பார்வை களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் விழுவதால், கணவர் உங்கள் பேச்சை மீறியோ அல்லது உங்கள் கருத்துக்கு மாறாகவோ செயல்படுவார். இருவரிடமும் நெருக்கம் குறைவதோடு தேவையற்ற சணடை சச்சரவுகளும் ஏற்படும். உங்களுக்கு புகுந்த வீட்டாரிடமிருந்து தொல்லைகள் உண்டாகும். அவர்களின் கருத்துகளுக்கு ஏற்றவாறு உங்கள் கணவர் செயல்படுவார். உங்களுக்கு கவலைகள் அதிகரிக்கும். உங்களின் உழைப்பு மற்றும் குடும்பப் பற்றை உங்கள் கணவரும் உங்கள் புகுந்த வீட்டாரும் அலட்சியம் செய்வதோடு, வீண் பழிக்கும் நீங்கள் ஆளாக நேரும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற நற்பெயரோ அல்லது பாராட்டோ கிடைக்காது. உங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கூட கிடைக்காது. உங்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களால் கௌரவ பாதிப்போ அல்லது ஆண் ஊழியர்களால், சில வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளும் தொந்தரவுகளும்கூட ஏற்படும். எனவே அவர்களுடன் எச்சரிக்கையோடு பழகுவது நல்லது. இததகைய பாதிப்புகள் பயண காலமாகிய    ஓராண்டுக்கு  குரு 12-மிடம் செல்லும்போது ஏற்படும்..
மாணவர்களுக்கு சனியின் மாற்றத்தினால், சனியின் பாதிப்பு அதிகமாகும். உடன் படிக்கும் சக மாணவர்கள் உங்களின் முயற்சிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கோடு உங்களின் கவனத்தைப் பல வழிகளிலும் திசை திருப்புவார்கள். அதைப்போல ஜெனம் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்களுக்கு உடல் அசதியையும் மன அழுத்தத்தையும் உற்சாகமின்மையையும் ஏற்படுத்துவார். மேலும் குடும்பச் சூழலும் உங்கள் கவனத்தைப் பலவழிகளிலும் சிதறடிக்கும்.  நல்ல மதிப்பெண் பெறுவதோ அல்லது விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுப்பதோ அரிதாகிவிடும்.
அரசியல்வாதிகளுக்கு இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளைச் சேர்க்காது. இருப்பினும் சென்ற முறை இருந்துவந்த வீண் அலைச்சலும் மற்றும் அவப் பெயர்களும் மெள்ள மெள்ள மறையத் தொடங்கும். மேலும் இந்தத் துறையில் நீங்கள் சாதிக்க நினைத்த சில அரிய விஷயங்கள் எளிதில் நிறைவேற  குரு வின் அனுகூலமான சஞ்சாரம் செப்டம்பர் 2017க்குமேல்  ஓரளவு பயன் தரும். இச்சமயத்தில் பொருளாதாரத் துறையில் நீங்கள் திருப்தியோடு செயலாற்றலாம். சிலருக்கு ஆண்டு இறுதிவரை திருப்திகரமான நிலை தொடரலாம். மேலும் உங்களுக்கு கீழுள்ள அல்லது உங்களையே நம்பியுள்ள உங்களைச் சார்ந்தவருக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக பொருளாதார உதவி செய்ய இந்த கிரக நிலையானது சாதகமாக உள்ளது. உங்களின் நியாயமான கோரிக்கை அல்லது விருப்பங்கள் பூர்த்தியாகும். அதன் பின்னரே  இந்த சனியின் சஞ்சாரம் முடிவுறும் வரை சிற்சில பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்புள்ளது7.பரிகாரம் :

பிரதோஷ காலங்களில் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபடுவது துன்பங்களை விரட்டும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை  மஞ்சள் மலர்களாலும், கொண்டக்கடலை மாலை சாத்தியும் வழிபடுங்கள்.வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனை சிவப்பு மலர்கொண்டு வணங்கவும். வினாயகரை வழிபடவும். வினாயகர் கோவிலை சுத்தம் செய்யவும்.சனிக் கிழமைகளில், சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
*****************************************************

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>