/* ]]> */
Dec 092020
 

2021 புத்தாண்டு பலன்கள் :

2021 puththANtu palan

தனுசு ராசி:

தனுசு ராசி

தனுசு ராசி

வருகிற  2021 நவம்பர்   மாதம் வரை  குரு ராசிக்கு 2-மிடத்திலும்  அதன் பிறகு  வருகிற  குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான்  உங்கள் ராசிக்கு   3-ம்  இடத்தில்  சஞ்சரிக்கிறார். சனி  ராசிக்கு  2 -ம் இடத்தில்  சஞ்சரிக்கிறார்.

தற்போது உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில்  சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு நற்பலன்களை அள்ளித் தருகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான  5-ம் பார்வையால்,  உங்கள்  ராசிக்கு 6-ம் இடத்தையும்,   7-ம் பார்வையால் உங்களுடைய ராசிக்கு 8-ம் இடத்தையும் , தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய   ராசிக்கு 10-மிடத்தையும்   பார்வையிடுகிறார். இதன் காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.
இந்தக் குருப் பெயர்ச்சியினால் உங்களுக்கு சகல  சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு  உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை  காலம் அறிந்து நிறைவேற்றி  வைப்பீர்கள்.  இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.  மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும்.  அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள்.  புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.  சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும்  பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர்  மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும்.  தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள்  உங்களுக்கு எதிராக  செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய  மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன்   எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள்.

இனி  குருவின் 3-மிட சஞ்சரத்தால் நிகழப்போகும் நிகழப்போகும் கெடு பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். இந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்படலாம். சிலர் தங்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் நிமித்தமாக் அதனது சொந்த ஊரைவிட்டு வெளியே சென்றுவிடுவார்கள். உங்கள் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. உடல்நலம்  பாதிக்கப்படலாம். இளைய சகோதரர்களின் நல்லுறவு , அவர்களுடன் சண்டைகள் ஏற்படும்.
பணமில்லாததால் கல்வியைத் தொடர முடியாமல் போகும். உங்களுடைய கல்வி கேள்விகளில்,தடைகள் ஏற்படும். படிப்பில் கவனம் இல்லாமல் போய் கல்வித் தடை ஏற்படும். மனதில் தைரியம் குறைவதால், எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள தயங்குவீர்கள். பேச்சில் உஷ்ணம் தெறிக்கும். யாரிடமும் பேசும்போது கோபத்தோடு [ப்ஏசுவதால், பல பிரச்சினைகளையும் விரோதங்களையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.
எதிரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போக வேண்டாம். உங்கள் மனதிடத்தைக் குலைக்கும் அளவுக்கு இப்போது உங்கள் எதிரிகள் தலை தூக்குவார்கள். அவர்களால், உங்களுக்கு, உங்கள் தொழிலுக்கும், உங்கள் உறவினர்களுக்கும், சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். காது, கணுக்கால் சம்பந்தமான பிரச்சிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சொல்வாக்கும், செல்வாக்கும் குறையும்.  இச்சமயம் யாருக்கும் வாக்குறுதி கொடுத்தால் அதைக் காப்பாற்ற முடியாமல் அவமானம் ஏற்படும். நாணயம் தவறும். வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் கையில் செலவுக்களுக்கு காசு தங்காது. அவசியமானதைவிட தேவையற்ற செலவுகள் உங்களை அவசரப்படுத்தும்
நிம்மதியின்மை உங்கள் தூக்கத்தையும் கெடுக்கும். குடும்பத்தில் அமையின்றி அல்லாடுவீர்கள். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். கோயில் கட்டுமானப் பணிகளும் தீர்த்த யாத்திரை தட்டிப்போகும். உங்களுக்கான வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். சிலர் அவசிய தேவைகளை சமாளிக்க தங்கள் கையில் உள்ள தங்க நகைகளை விற்கவோ அல்லது அடகு வைக்கவோ செய்வார்கள். குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். ஞானிகள், சாதுக்களின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படும். தொழில் மந்தமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருவ்து நல்லது. சிலருக்கு பிள்ளைகளின் போக்கு கவலையளிக்கும். அவர்களது கல்வியில் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் தடை ஏற்படக்கூடும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020  ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி 2020  டிசம்பர் 27ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது 7 1/2 ச் சனியின் கடைசி 2 1/2 வருஷமாகும். பெரும் அளவில் பண விரயம் அல்லது பெரும் தொகையை மோசடியால் இழக்க நேரும். பொருளாதாரம் கெடும். தரித்திரம் தாண்டவமாடும். மனைவி மக்களுக்கு உடல்நலம் கெடும். பணியாட்கள் , வேலையாட்கள் உங்களை விட்டுப் பிரிவர். மான, கௌரவ பங்கம் வீட்டைவிட்டுக் கட்டாயமக வெளியேற வேண்டியது போன்றவை உண்டாகும். பிறரால் ஏவல், சூன்யம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். பெரியோர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும். நேத்திர ரோகம் ஏற்படும். இவருக்கு இச்சமயம் இன்னொரு மனைவியும் அமையலாம். மனைவியால் ஏமாற்றம் ஏற்படுவதும் உண்டு . சொத்தில் பெரும் பகுதியும் நஷ்டம் ஆகும். சந்ததிக்கு தொல்லையும் அவரால் இவர்களுக்கு கஷ்டமும் ஏற்படும். ஆரோக்கியம் கெடும் தோற்றப் பொலிவு மறையும். ஆண்மையும் வலிமையும் குறையும். முறை மாறின வழிகளில் பணம் சம்பாதிக்க வேண்டியது வரும். பதவி நாசம் , நிர்ப்பந்த இடமாற்றம் ஆகியவை தோன்றுகின்றது. மனக் கிலேசம், தேவையற்ற சண்டை, உறவினருடன் பகை ஆகியவை ஏற்படுகின்றது.

பணப் பற்றாக்குறையால், பிறரிடம் சென்று கடன் பெற்றாலும், அதனால் பயனடைய முடியாமல் வேறு வழிகளில் அது வீண் விரயமாகி விடுகின்றது. இது 7 1/2ச் சனியின் கடைசிப் பகுதி. மூன்றாம் சுற்றாகி, மாரக தசை, ஆயுர்தாய ஆயுள் முடிவு கூடி வந்து , ஜென்ம சனியில் எதுவும் நேராவிட்டால், இப்பொழுது மாரக பயம் ஏற்படுவதுண்டு. 2-ல் சனி எவ்வகையிலும் அசுபனே.
பெண்களுக்கு உடல் நலனில் கவனம் தேவை. குடும்பப் பிரச்சினைகள் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டேதான் இருக்கும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அவரது மேல் அதிகாரிகளின் தொந்தரவுகள் அல்லது தவறான அணுகுமுறையால், தேவையற்ற பயமும், வெளியில் சொல்லமுடியாத சில பிரச்சினைகளும் அடிக்கடி வந்தவண்ணம் இருக்கும். எனவே ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவதே சாலச் சிறந்தது. மேலும் யாரிடமும் எதையும் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் கூறும் எதார்த்தமான கருத்தை அல்லது வார்த்தையை பிறர் தவறாக எடுத்துக்கொள்வதோடு உங்களுக்கே அது வினையாகிவிடும். எனவே எவரிடமும் எச்சரிக்கையாகவே பழகுங்கள். கணவன்-மனைவி ஒற்றுமை சற்று குறைவுபடும். எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், மிகவும் பாதிப்படையும். வீட்டு சுமையோடு அலுவலகச் சுமையும் சற்று அதிகரிக்கவே செய்யும்.

மாணவர்களுக்கு சனி பகவான்  இதுவரை  கொடுத்த தொல்லைகளைவிட இப்போது தொல்லைகள் குறைவதோடு, எல்லாவகையிலும் ஏற்றம் உண்டாகும்.சென்ற முறை அவர் ஜென்ம ராசியில் சஞ்சரித்தபோது உங்களின் கல்வி சம்பந்தப்பட்ட கற்பனைக்கோட்டையைத் தகர்த்தெரிந்தார். ஏனெனில் அவரது மூன்றாம் பார்வை காரிய ஸ்தானமான முன்றாமிடத்திற்கும் தொழில் ஸ்தானமான 10மிடத்திற்கும் ஏற்பட்டதால், உங்களின் முயற்சி மற்றும் ஆர்வம் போன்றவை விழலுக்கு இறைத்த நீராய் போய்விட்டது . ஆனால் சனியின் மாற்றம் உங்களின் திறமை மற்றும் ஆர்வத்தை நல்லவிதமாகப் பிரதிபலிக்கும். நீங்கள் 70 %க்கு முயற்சி எடுத்தால் 80% கிடைக்கும் அளவுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும். இத்தகைய நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு வருப்போகும் ஆண்டு களில் உங்களது பெற்றோர் ஆசிரியர்களின் நம்பிக்கையைக் குலைக்காவண்ணம் நீங்களாகவே கருத்துடனும் ஆர்வத்துடனும் படித்து அவர்கள் வியக்கும் வண்ணம் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள் .

தற்போது    நடப்பது 7 1/2 ச் சனியின் கடைசி 2 1/2 வருஷமாகும். பெரும் அளவில் பண விரயம் அல்லது பெரும் தொகையை மோசடியால் இழக்க நேரும். பொருளாதாரம் கெடும். தரித்திரம் தாண்டவமாடும். மனைவி மக்களுக்கு உடல்நலம் கெடும். பணியாட்கள் , வேலையாட்கள் உங்களை விட்டுப் பிரிவர். மான, கௌரவ பங்கம் வீட்டைவிட்டுக் கட்டாயமக வெளியேற வேண்டியது போன்றவை உண்டாகும். பிறரால் ஏவல், சூன்யம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். பெரியோர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும். நேத்திர ரோகம் ஏற்படும். இவருக்கு இச்சமயம் இன்னொரு மனைவியும் அமையலாம். மனைவியால் ஏமாற்றம் ஏற்படுவதும் உண்டு . சொத்தில் பெரும் பகுதியும் நஷ்டம் ஆகும். சந்ததிக்கு தொல்லையும் அவரால் இவர்களுக்கு கஷ்டமும் ஏற்படும். ஆரோக்கியம் கெடும் தோற்றப் பொலிவு மறையும். ஆண்மையும் வலிமையும் குறையும். முறை மாறின வழிகளில் பணம் சம்பாதிக்க வேண்டியது வரும். பதவி நாசம் , நிர்ப்பந்த இடமாற்றம் ஆகியவை தோன்றுகின்றது. மனக் கிலேசம், தேவையற்ற சண்டை, உறவினருடன் பகை ஆகியவை ஏற்படுகின்றது.

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்திக்கு கொணடக்கடலை மாலை  அணிவித்து வழிபடவும்.  சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று, எள்தீபம் ஏற்றி வழிப டவும். ராகு  பரிகாரமாக துர்கையம்மனை சிவப்பு மலர்கொண்டு வணங்கவும். கேது பரிகாரமாக வினாயகரை வணங்கி, கோவிலை சுத்தம் செய்யவும்.

[ உங்கள் சொந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் ரூ. 950/- செலுத்தி, www.moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>