2021 புத்தாண்டு பலன்கள்
கும்ப ராசி
இந்த வருடம் 2021 நவம்பர் மாதம் வரை குரு உங்கள் ராசிக்கு 12-லும், அதன் பிறகு ஜென்ம ராசியிலும் சனி விரய சனியாக உங்கள் ராசிக்கு 12 லும் , சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.
இந்த வருடம் 2021 நவம்பர் மாதம் வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடமான ‘விரய ஸ்தான’த்தில் சஞ்சரிப்பதால், குரு ‘விரய குரு’வாகிறார் என்பதோடு இன்னும் சம்பந்தப்பட்ட பலவிதமான தொல்லைகளையும் கொடுப்பார். . அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும், மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.
பணம் என்ற ஒன்றை யாரிடமிருந்தும் இலவசமாகவோ அல்லது கைமாற்றாகவோ பெற்றுவிட முடியாது. எனவே பணத்தைத் தேடி அலைவதிலேயே உங்கள் மன அமைதி கெடும். உங்களுக்கு பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்கலளிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம். மருத்துவச் செலவுகளும் உங்களை விட்டு வைக்காது. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது.
தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் ,பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நிங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். .
மாதச் சம்பளம் வாங்குவோரும்கூட நிம்மதி காண முடியாமல் போகலாம். ஏதாவது பிரச்சினையில் சிக்கிக்கொண்டு, சம்பளப் பிடித்தத்தில் சிலர் மாட்டிக்கொள்ள நேரலாம். அதனால், கையில் கணிசமான தொகை வராது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறையக்கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.
மருத்துவச் செலவோடு , பிள்ளைகளின் கல்விச் செலவும் கண் முன்னாடி விஸ்வரூபம் எடுக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலக்கட்டத்தை நீங்கள் கடந்தபிறகுதான், அந்த தடைகள் நீங்கும். அதன்பிறகுதான் தொல்லைகள் நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும்.
தற்போது 2021 நவம்பர் மாதத்துக்குப் பின் நிகழும் ஜென்ம குருவின் சஞ்சாரம் சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்., சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலருக்கு ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.
தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சர்வ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல்நோய்கள் தோன்றும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும்.
தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்ம் முயர்ச்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.
மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது.
சனி பகவான் காலபுருஷ லக்கினமான தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
திருக்கணிதப் பஞ்சாங்கப் பிரகாரம் 24.1.20 முதல் ஏழரைச் சனியின் முதல் கட்டமாகும் இந்த 12-ம் இடத்தில், சனிபகவான், 2 1/2 வருடம் இருப்பார். இதனை ஏழரைச் சனி என்று கூறுவார்கள். இந்த ஏழரைச் சனிக் காலத்தில் , தரித்திரம், நஷ்டம், பயனற்ற அலைச்சல், ஆகியவை உண்டாகும். வெகு தூரப் பயணங்கள் ஏற்படும். கட்டுக்கடங்காத அளவுக்கும், தகுதிக்கு மீறியும் செலவுகள் ஏற்படும். மனதில் எப்பொழுதும் சங்கடமும் கவலையும் இருந்துகொண்டே இருக்கும்.
வேலை இல்லாமை, அதனால் வருவாய் இல்லாத நிலை, எந்தத் தொழிலையும் செய்ய முடியாமை , செய்ய மனமில்லாமை, என்னும் இவை உண்டாகும். உள்ள பணமெல்லாம் பல வழிகளிலும் நஷ்டமாகும். மாரக தசை நடந்து, ஆயுர்த் தாயமும் ஆயுள் முடிவும் நெருங்கியிருந்து, இது மூன்றாம் சுற்று 7 1./2ச் சனியாகவும் அமைந்தால், உயிருக்கே கண்டம் ஏற்படலாம்.
மான பங்கம், கௌரவ பங்கம் போன்றவை ஏற்படும். சிந்தை தெளிவின்மையால், சரியான முடிவு செய்ய முடியாமல் எல்லாக் காரியங்களும் கெடும். மனைவி மக்களை விட்டுப் பிரிய நேரும். கால்நடை அழியும். விருப்பத்திற்கு மாறாக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும்
இது முதல் ஏழரை வருடங்களுக்கு துயரங்களும் வேதனைகளும் சூழ்ந்தபடிதான் இருக்கும்.
பெண்களுக்கு இது ஏழரைச் சனியின் ஆரம்ப கட்டம். முதல் இரண்டரை வருடத்தில் இருக்கிறீர்கள். இதனை விரயசனி என்பார்கள். முதல் ஆறு மாதம் உங்களுக்கு உடல் மற்றும் மனம் ரீதியான பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும்.
மாணவர்களுக்கு சனி பகவானின் ஆரம்பகால மாற்றம், சிற்சில சங்கடங்களையும் தடைகளையும் கல்வி அடிப்படையில் ஏற்படுத்தும். 2020 செப்டம்பர் மாதம் முதல் ஓராண்டு காலம் குருவின் அனுகூலமன சஞ்சாரத்தின்போது , உங்களின் கல்விக்காலத்தில் நீங்கள் கரடுமுரடான பாதையைக் கடக்க வேண்டிவரும். இதனால்,குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் அதிருப்திக்கு ஆளாக நேரும். எவ்வள்வுதான் முயற்சி செய்து படித்தாலும், பாதியளவே உங்களுக்கு வெற்றி கிட்டும். நீங்கள் விரும்பும் அல்லது தேர்ந்தெடுத்து படிக்க நினைக்கும் விருப்பப் படம் கிட்டாமல் போக இந்த ஏழரைச் சனியின் பாத சனியானது சதி செய்யும். சிலருக்கு உடல்நலக் கோளாறு, அல்லது ஞாபக மறதி மற்றும் கல்வியில் ஆர்வமின்மை போன்றவை வழக்கம் போல ஏற்படவே செய்யும். நீங்கள் உங்கள் பங்கிற்கு அலுப்புடனும் உற்சாகமற்றும் கல்வியில் ஈடுபடுவதால், வெற்றி கனவாகி விடும். எதிர்பார்த்த மதிப்பெண் கிட்டாமல் போகும்.
அரசியல்வாதிகளுக்கு சனியின் மாற்றத்தில் ஆரம்ப காலத்தில் சில தேவையற்ற பிரச்சினைகள் அது பொருளாதார ரீதியாகவோ அல்லது அரசியல் வட்டாரத்திலோ ஏற்பட்டு உங்களின் அமைதிக்கு ஊறு செய்யும். குருவின் 9-மிட சஞ்சாரம் அனுகூலமாய் செயல்படுவதால், உங்கள் முயற்சி நல்ல வெற்றியையும். உங்கள் நிலையும் நல்ல வளர்ச்சி காணும். இருப்பினும் புதிதாக வரும் நபர்களிடம் எதையும் மனம் விட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையேல் அவர்களால் உங்களுக்கு சில சிக்கல்கள் உருவாகககூடும்
பரிகாரம் :
பிரதோஷ காலங்களில் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபடுவது துன்பங்களை விரட்டும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் மலர்களாலும், கொண்டக்கடலை மாலை சாத்தியும் வழிபடுங்கள்.வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனை சிவப்பு மலர்கொண்டு வணங்கவும். வினாயகரை வழிபடவும். வினாயகர் கோவிலை சுத்தம் செய்யவும்.சனிக் கிழமைகளில், சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
*****************************************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments