/* ]]> */
Jan 052019
 

2019- புத்தாண்டு பலன் :

2019

துலாம்  ராசி:

துலாம் ராசி

துலாம் ராசி

 

துலாம் ராசி

இந்த  2019-ம் ஆண்டு செப்டம்பர்  மாதம் வரை குரு உங்கள்  உங்கள்  ராசிக்கு 2-ம் இடத்திலும் அதன் பிறகு குரு 3-மிடத்துக்கும்  செல்கிறார்கள்.   சனியின் 3- மிட சஞ்சாரமும் நற்பலன்களைத் தரும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

இந்தஆண்டு நிகழும்  குருப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்புள்ளது. குரு,  குடும்ப வாக்கு ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து, 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்யவுள்ளார். எனவே உங்கள் ராசிக்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போகும்.  பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வந்து மகிழ்ச்சியளிக்கும். பிரிந்த உறவினர்களும் ஓடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாகும் அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும்  திருமண யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிட்டும். தொழில்- வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வீடு,மனை என்று சொத்து வாங்கும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். ரிப்பேர் செலவு வைத்துக்கொண்டிருந்த வாகனங்களை மாற்றி புதிய வண்டி வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகள் வெற்றி பெற்று, தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும்.  திரைப்படத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் உண்டாகும். விவசாயிகள் நல்ல லாபம் காண்பார்கள்.

இனி  குருவின் 3-மிட சஞ்சரத்தால் நிகழப்போகும் நிகழப்போகும் கெடு பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். இந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்படலாம். சிலர் தங்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் நிமித்தமாக் அதனது சொந்த ஊரைவிட்டு வெளியே சென்றுவிடுவார்கள். உங்கள் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. உடல்நலம்  பாதிக்கப்படலாம். இளைய சகோதரர்களின் நல்லுறவு , அவர்களுடன் சண்டைகள் ஏற்படும்.
பணமில்லாததால் கல்வியைத் தொடர முடியாமல் போகும். உங்களுடைய கல்வி கேள்விகளில்,தடைகள் ஏற்படும். படிப்பில் கவனம் இல்லாமல் போய் கல்வித் தடை ஏற்படும். மனதில் தைரியம் குறைவதால், எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள தயங்குவீர்கள். பேச்சில் உஷ்ணம் தெறிக்கும். யாரிடமும் பேசும்போது கோபத்தோடு [ப்ஏசுவதால், பல பிரச்சினைகளையும் விரோதங்களையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.
எதிரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போக வேண்டாம். உங்கள் மனதிடத்தைக் குலைக்கும் அளவுக்கு இப்போது உங்கள் எதிரிகள் தலை தூக்குவார்கள். அவர்களால், உங்களுக்கு, உங்கள் தொழிலுக்கும், உங்கள் உறவினர்களுக்கும், சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். காது, கணுக்கால் சம்பந்தமான பிரச்சிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சொல்வாக்கும், செல்வாக்கும் குறையும்.  இச்சமயம் யாருக்கும் வாக்குறுதி கொடுத்தால் அதைக் காப்பாற்ற முடியாமல் அவமானம் ஏற்படும். நாணயம் தவறும். வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் கையில் செலவுக்களுக்கு காசு தங்காது. அவசியமானதைவிட தேவையற்ற செலவுகள் உங்களை அவசரப்படுத்ட்ய்ம்
நிம்மதியின்மை உங்கள் தூக்கத்தையும் கெடுக்கும். குடும்பத்தில் அமையின்றி அல்லாடுவீர்கள். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். கோயில் கட்டுமானப் பணிகளும் தீர்த்த யாத்திரை தட்டிப்போகும். உங்களுக்கான வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். சிலர் அவசிய தேவைகளை சமாளிக்க தங்கள் கையில் உள்ள தங்க நகைகளை விற்கவோ அல்லது அடகு வைக்கவோ செய்வார்கள். குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். ஞானிகள், சாதுக்களின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படும். தொழில் மந்தமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருவ்து நல்லது. சிலருக்கு பிள்ளைகளின் போக்கு கவலையளிக்கும். அவர்களது கல்வியில் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் தடை ஏற்படக்கூடும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

இந்த வருடம் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-மிடத்தில் சஞ்சரிக்கிறார். நற்பலன்கள் மிகுந்திருக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். எல்லாக் காரியங்களும் வெற்றியடையும். உத்தியோகம், பதவி உயர்வு ஏற்படும்.எல்லாம் முழு நன்மையாகவே நடக்கும். இவரது ஊரில் இவருக்கு தலைமைப் பதவிகள் ஏற்படும். தினமும் பால் சோறும் உய்ர்தர உணவும் வேளை தவறாமல் கிடைக்கும். அஷ்ட லக்ஷ்மி கடாட்சமும் ஏற்படும். பெரிய ராஜயோகமும் , எடுத்த காரியமெல்லாம் வெற்றியடைதலும் கைகூடும். உயர்தர வாகன வகைகளும் ஏற்படும். உடன்பிறப்புக்கு ஏதாவது அதிர்ஷ்டம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆளடிமையும் பணியாட்களும் அமைவர். இருக்க வசதியான வீடும் அமையும். ஒருவர் கோழையாயினும் 3ல் சனியுள்ள இந்த சமயத்தில் வலிமையான பகைவனையும் சீறிப் பாய்ந்து வெல்லும் சிங்கமாக மாறிவிடுவர். பாக்கிய விருத்தி ஏற்படும். போக சுகம் முழுமையாகக் கிடைக்கும். யானை, குதிரை, எருமை போன்ற வாகன கால்நடைச் செல்வம் ஏற்படும். கார் போன்றவை கிட்டும். எல்லா வகையிலும் கலப்பற்ற பூரண் சுப பலன் சனி 3ல் உள்ளபோது ஒருவருக்கு ஏற்படுகின்றது. பெண்கள் இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் வகையில் இந்த சனியின் மாற்றம் உங்களுக்கு சாதகமான முறையில் செயல்படும். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விலகி உங்களுக்கும் அவருக்கும் இடையே நெருக்கமும் நல்லிணக்கமும் ஏறப்டும். பிள்ளைகளும் தங்களின் சொற்படி நடந்து உங்களுக்கு நற்பெயரையும் பாராட்டையும் வாங்கித் தருவார்கள். குடும்ப ஒற்றுமை ஓங்கும். மொத்தத்தில் உங்கள் வீடு ஒரு அமைதிப் பூங்காவாகக் காட்சியளிக்கும். சிலருக்கு அலுவலகத்தில் நற்பெயரும் பாராட்டும் கிடைக்கும். அதேபோல் ஊதிய உயர்வும் பணிமாற்றமும் கிடைக்கும். சிலர் புது அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பணிபுரியும் யோகமும் கிட்டும். நெடுனாளாக குழந்தைப்பேறு இன்றித் தவித்த உங்களில் சிலருக்கு அந்த பாக்கியம் எளிதில் கிடைக்கப் பெறும். ஏனெனில் சனிபகவான் உங்களுக்கு புத்திர ஸ்தானாதிபதியாவதால், இந்த நல்ல விஷயத்திற்கு பெரிதும் உதவுவார்

மாணவர்கள்  சோதனைகளைக் கடந்து பல சாதனைகளைப் படைக்கும் விதமாக இந்த சனியின்  3-மிட சஞ்சாரம் உங்களுக்கு துணை புரியும். தேர்வில் அமோக வெற்றி மற்றும் நீங்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து படிக்க இந்த சனியின் சாதகமான நிலை உங்களுக்கு பெரிதும் துணை நிற்கும். உங்களின் ஆர்வம் மற்றும் செயல்திறனைக் கண்டு உங்கள் பெற்றோர்கள், உங்கள் ஆசிரியர்கள் மற்றும் உங்களின் நண்பர்கள் வியந்து பாராட்டுவார்கள். இந்த திருப்திகரமான நிலை  இந்த ஆண்டின் இறுதிவரை நீடிப்பதால், கல்வித் துறையில் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க அதிக வாய்ப்புகள் கிட்டும். மேலும் உங்களுக்கென்று ஒரு தனியிடத்தை மாணவர்களாகிய நீங்கள் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும். இருப்பினும் குருவின் பனிரண்டாமிட மாற்றம் மற்றும் ராகு கேதுவின் 1 மற்றும் 7மிட சஞ்சாரமும் உங்கள் மன உறுதியை சற்று அசைத்துப் பார்க்கும் விதமாய் செயல்படும். இருப்பினும் சனியின் சாதகமான சூழல், அதற்கு இடமளிக்காமல் மேலோங்கி நிற்கும். இதனால் உங்கள் இலக்கை நீங்கள் எளிதில் அடைய முடியும். இந்த சனிப் பெயர்ச்சி சாதனைகளை நிகழ்த்த வல்லதாக நிகழும் என்பதில் சந்தேகமேயில்லை. அரசியல்வாதிகளுக்கு சனி பகவானின் மூன்றாமிட மாற்றம் உங்களின் அரசியல் துறையில் உங்களால் முடியாத அதாவது சாத்தியமற்ற பல செயற்கரிய சாதனைகளைச் செய்ய உங்களைத் தயார்படுத்துவார். இதுநாள்வரையில் உங்களுக்கு உங்கள் துறையில் இருந்துவந்த குறுக்கீடுகள் மெல்ல மெலல் மறையும். உங்களை எதிர்த்தவர்களும், உங்களை ஏளனப்படுத்தியவர்களும் உங்களிடம் மண்டியிடுவார்கள். அல்லது தங்களின் வேற்றுமையுணர்வுகளைக் களைந்துவிட்டு அவர்களும் உங்களுடன் சேர்ந்து, உங்களின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பாடுபடுவார்கள். அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கென்று தனிப் பெயரோ அல்லது அந்தஸ்தோ கிடைக்க இந்த சனிபகவான் பெரிதும் துணை புரிவார். புகழோடு, பணமும் அந்தஸ்தும் கௌரவமும் உங்களை வந்தடையும். இந்த சஞ்சரத்தின் மூலம் உங்கள் துறையில் நீங்கள் நினைத்த எல்லாவற்றையும் நடத்திக்காட்ட உங்களால் கண்டிப்பாக முடியும்

.பரிகாரம்:

குருவின் சஞ்சாரம் சரியில்லைஎன்பதால்,, வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லையாதலால், வெள்ளிக் கிழமைகளில் துர்கையம்மனை சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபடவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்து வழிபடவும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>