/* ]]> */
Jan 052019
 

2019- புத்தாண்டு பலன்கள்:

2019

விருச்சிகம்:

 

விருச்சிக ராசி

விருச்சிக ராசி

விருச்சிக ராசி:

இந்த 2019-ம் ஆண்டின் துவக்கத்தில்  செப்டம்பர்  மாதம் வரை   , குரு உங்கள் ஜென்ம  ராசியிலும்  அதன் பின்பு உங்கள் வாக்கு ஸ்தானமான 2-மிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.  ஜென்ம குரு அனுகூலமான பலன்களைத் தரமாட்டார். ஆனால்,குருவின் 2-மிட சஞ்சாரம் நற்பலன்களைத் தரும்.  சனி பகவான் 2-மிடத்தில் சஞ்சரிக்கிறார். சனியின் 2-மிட சஞ்சாரமும் நற்பலன்களை   வழங்காது..

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

இந்த ஆண்டு நிகழும்  குருவின் ஜென்ம சஞ்சாரம். நடை,உடை, பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். விரக்தியும் சோர்வும் சலிப்பும் உங்களிடம் சொந்தம் கொண்டாடும். அடிக்கடி உங்கள் மனம் துவண்டுபோகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. ஒருமாதிரியாயிருக்கு அசத்துது; கிறுகிறுப்பாயிருக்கு என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பீர்கள். பித்தமயக்கம், தலைச் சுற்றல், சர்க்கரை, கொலாஸ்ட்ரல் ஈரல் கோளாறு, செரிமானப் பிரச்சினை என்றபடி அசௌகரியங்கள் மேலோங்கியிருக்கும்.

[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

ஜென்ம குரு பொருளாதார வசதியைக் கொடுப்பார் என்று சொல்லமுடியாது. வரவேண்டிய பணம் தடைப்படும். வந்து சேர்வதும் அரையும் குறையுமாக வரும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி, தவணை என்று வருமானத்தில் பெரும்பகுதி கடனுக்கே போய்விடும். பற்றாக்குறைப் பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதும் சமாளித்து சரிக்கட்டுவதும், வழக்கமான பிரச்சினையாகிவிடும். இதுமட்டுமல்லாமல் பணத்தை முன்னிட்ட கருத்துவேற்பாடுகள், மனஸ்தாபங்கள் என்று ஒன்று மாற்றி ஒன்று குடும்ப அமைதியை சீர்குலைக்கும். வீண்தகறாறும் அவப்பெயரும் ஏற்படும்.

ஜென்ம குரு சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப் பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலர் ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர். தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சரவ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நல்த்தில் கவன்ம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல் நோய்கள் தோன்றும்.

மனதைப் பக்குவப்படுத்தி தியானம் , இறைவழிபாடு என்ற பாதையில் சென்றால், ஆன்மீக குருமார்களின் தரிசனம், சாதுக்களின் நட்பு, பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவற்றில் ஈடுபட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.  மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது.  இனி இத்தனை கஷ்டங்களுக்கும் மருந்தாக,  குரு பார்வைகளும் , சனியின் பார்வைகளும் மிகவும் ஆறுதலான விஷயமாக இருக்கும். குருவின் சாதகமற்ற நிலை சனி பார்வையினால் மாறும். குருவின்  அசுப குணம் மர்றுபட்டு  சில சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். நீங்கள் தொழில் தொடங்குவதற்கு நண்பர்கள் கை கொடுத்து உதவுவார்கள். ஆரோக்கியம் சிறப்படையும். பாயில் படுத்திருந்தவர்கள் பமபரமாக சுழல்வார்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெறும் வழியை சனி காட்டுவார்.                         .

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்கு வழங்குவது moonramkonamkonam.com].

இந்தஆண்டு செப்யம்பர் மாதத்துக்குப் பின்  நிகழும்  குருப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்புள்ளது. குரு,  குடும்ப வாக்கு ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து, 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்யவுள்ளார். எனவே உங்கள் ராசிக்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போகும்.  பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வந்து மகிழ்ச்சியளிக்கும். பிரிந்த உறவினர்களும் ஓடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாகும் அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும்  திருமண யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிட்டும். தொழில்- வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வீடு,மனை என்று சொத்து வாங்கும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். ரிப்பேர் செலவு வைத்துக்கொண்டிருந்த வாகனங்களை மாற்றி புதிய வண்டி வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகள் வெற்றி பெற்று, தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும்.  திரைப்படத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் உண்டாகும். விவசாயிகள் நல்ல லாபம் காண்பார்கள்.

அடுத்தபடியாக சனிபகவானின் சஞ்சாரத்தைப் பார்க்கும்போது,  நீங்கள் ஏழரைச் சனியின் பிடியில் இருந்தாலும், உங்களுக்கு ஏழரைச்சனி,  இந்த சஞ்சாரத்துடன் விலகப் போவதால், உங்களுக்கு ஒரு உன்னத வாழ்வைக் கட்டாயம் கொடுத்துவிட்டுத்தான் போவார்.  உங்களுக்கு நற்பலன்களாக நிகழும். தொழில் சிறக்கும்.  லாபம் பெருகும். நின்றுபோன திருமணங்கள் நடந்தேறும்.  பணியிடங்களில் மேலதிகாரிகளின்  பாராட்டும் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.  கணவன்-மனைவி உறவு சிறக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்கும். எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றிபெறும். வழக்குகள் சாதகமாக வெற்றியடையும். கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். இப்படியான நற்பலன்களுடன் இந்த ஆண்டு இனிதே முடியும்.

[ இந்த புத்தாண்டு  பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com].

இந்த வருடம் சனி உங்கள் ராசிக்கு 2-ம்  வீட்டில் சஞ்சரிப்பதால், பெரும் அளவில் பண விரயம் அல்லது பெரும் தொகையை மோசடியால் இழக்க நேரும். பொருளாதாரம் கெடும். தரித்திரம் தாண்டவமாடும். மனைவி மக்களுக்கு உடல்நலம் கெடும். பணியாட்கள் , வேலையாட்கள் உங்களை விட்டுப் பிரிவர். மான, கௌரவ பங்கம் வீட்டைவிட்டுக் கட்டாயமக வெளியேற வேண்டியது போன்றவை உண்டாகும். பிறரால் ஏவல், சூன்யம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். பெரியோர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும். நேத்திர ரோகம் ஏற்படும். இவருக்கு இச்சமயம் இன்னொரு மனைவியும் அமையலாம். மனைவியால் ஏமாற்றம் ஏற்படுவதும் உண்டு . சொத்தில் பெரும் பகுதியும் நஷ்டம் ஆகும். சந்ததிக்கு தொல்லையும் அவரால் இவர்களுக்கு கஷ்டமும் ஏற்படும். ஆரோக்கியம் கெடும் தோற்றப் பொலிவு மறையும். ஆண்மையும் வலிமையும் குறையும். முறை மாறின வழிகளில் பணம் சம்பாதிக்க வேண்டியது வரும். பதவி நாசம் , நிர்ப்பந்த இடமாற்றம் ஆகியவை தோன்றுகின்றது. மனக் கிலேசம், தேவையற்ற சண்டை, உறவினருடன் பகை ஆகியவை ஏற்படுகின்றது. பணப் பற்றாக்குறையால், பிறரிடம் சென்று கடன் பெற்றாலும், அதனால் பயனடைய முடியாமல் வேறு வழிகளில் அது வீண் விரயமாகி விடுகின்றது. இது 7 1/2ச் சனியின் கடைசிப் பகுதி. மூன்றாம் சுற்றாகி, மாரக தசை, ஆயுர்தாய ஆயுள் முடிவு கூடி வந்து , ஜென்ம சனியில் எதுவும் நேராவிட்டால், இப்பொழுது மாரக பயம் ஏற்படுவதுண்டு. 2-ல் சனி எவ்வகையிலும் அசுபனே.

பெண்களுக்கு உடல் நலனில் கவனம் தேவை. குடும்பப் பிரச்சினைகள் அரசியல்வாதிகள்   உங்கள் துறையில் பொறுமையும் தன்னடக்கத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். அதன்பிறகு உங்கள் காட்டில் மழைதான். காரணம் சனியின் பாதிப்பு மட்டுமே உங்களுக்கு சற்று கடினமாக இருக்குமேயன்றி குரு மற்றும் கேதுவின் சஞ்சாரம் திருப்திகரமாகவே இருக்கும். இதன்பயனாய், நீங்கள் உங்கள் வட்டாரத்தில் உங்கள் சொல்வாக்கையும் செல்வாக்கையும் எளிதில் நிலை நிறுத்த முடியும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் சொல்லுக்கு மதிப்பு ஏற்படும். உங்களின் அரசியல் பயணத்திற்கு, உங்கள் குடும்பமோ அல்லது உங்கள் வாரிசோ ஒரு குறுக்கீடாக இருக்காது. உங்களுக்கு மேல் உள்ளோரின் அனபும் அரவணைப்பும் தாமாகவே உங்களைத் தேடிவரும். பொருளாதார நிலையில் ஏற்றமும் வளர்ச்சியும் ஏற்பட சனி பகவானின் பங்கும் வரும் ஆண்டு ஜூலை மாதத்திற்கு மேல் ஒரு கருவியாகப் பயன்படும்.

பரிகாரம்:

குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். கேது பகவானின் அருளைப் பெற , வினாயகரை வழிபடவும். வினாயகர் கோவிலை சுத்தம் செய்யவும். . சனியின் சஞ்சாரம் சரியில்லாததால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை எள்தீபம் ஏற்றி வழிபடவும். காக்கைக்கு தினந்தோறும் அன்னமிடவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் உதவி செய்யவும். உங்கள் தொல்லைகள் தீர்ந்து மன அமைதி ஏற்படும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

*****************************************************

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>