/* ]]> */
Jan 052019
 

2019- புத்தாண்டு பலன்கள்:

2019

தனுசு:

thanusu-rasiதனுசு ராசி:

 

இந்த 2018-ம் ஆண்டின் துவக்கத்தில்  ஆகஸ்டு மாதம் வரை   குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திலும், அதன் பிறகு, குரு உங்கள் ஜென்ம  ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். இரண்டு சஞ்சாரங்களுமே நன்மை தராது. சனியின் 2-மிட சஞ்சாரமும் நற்பலன்களை   வழங்காது..

இந்த ஆண்டு துவக்கம் முதல்  குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், எதைத் தொட்டாலும் விரயமாகவே இருக்கும். இதுவரை கூறப்பட்ட பலன்களுக்கு எதிரிடையான பலன்களாகவே நடக்கும். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய ஊக்கம் குறையும். அலுப்பும் சலிப்புமே அதிகரிக்கும். ஊட்டம் குறைந்து உடல் பலவீனமாகும். உடல்நலத்தில் சின்ன சின்னக் குறைகள் தோன்றும். ஈரல் கோளாறுகளும், செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். சர்க்கரை வியாதி, கொலாஸ்ட்ரல் முதலிய வியாதிகள் வரும். சிகிச்சையின்மூலம் பணம் கரையும். வேலை நெருக்கடிகளையும் அலைக்கழிப்புகளையும் சந்திப்பதால், நேரா நேரத்துக்கு சாப்பிட முடியாமல் போகும். கடினமான உழைப்பால் உடம்பில் உளைச்சல் உண்டாவது சகஜம் என்றாகிவிடும்.  பணம் ஏராளமாக செலவாகும். பணம் ஒன்றுக்கு இரண்டாக செலவழியும். வழக்கமான செலவுகளே வரம்பு மீறிவிடும். புதிய செலவினங்களும்  கிளம்பி, வாட்டி வதைக்கும். குடும்பசெலவுகள், பிள்ளைகளுக்கான பலவித செலவுகள், உறவினர் வகையில் விஷேஷங்களுக்கான செலவுகள் என்று சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வரவேண்டிய   பணம் சரியான சமயத்தில் கைக்கு வராததால், ஏகப்பட்ட நெருக்கடிகளில் சிக்கி ,அவஸ்தைக்குள்ளாவீர்கள். உங்கள் மதிப்பு  மரியாதை குறையும் அளவுக்குப்  போய்விடும். சொந்த பந்தங்களின் சுபகாரிய சீர்வரிசைக்கெல்லாம் செலவு செய்யவேண்டி நேர்வதால் திணறுவீர்கள். பொன்னாபரணங்களை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வட்டிகட்ட முடியாமல் நகைகளை விற்கும் நிலை ஏற்படும். கூடிவந்த திருமணம்கூட தடைப்படும். தம்பதியர் ஒற்றுமை குறையும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் சஞ்சலம் உண்டாகும். தூர தேசங்களில் பிள்ளைகளைப் பிரிந்திருக்க  நேரும். மனதில்  நிம்மதி இருக்காது. புகழ் மங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். திருமணத் தடை, பிள்ளைகள் பிரச்சினை, பணியிடத்தில் அவமானம் வியாபார நஷ்டம் என்று தொல்லைகள் பல இருக்கும

[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

தற்போது    செப்டம்பர் மாதத்துக்குப் பின்  நிகழும் ஜென்ம குருவின் சஞ்சாரம்  சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்., சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலருக்கு ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.
தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சர்வ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல்நோய்கள் தோன்றும்.    தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும்.
தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்ம் முயர்ச்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.
மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு உடல் நலனில் கவனம் தேவை. குடும்பப் பிரச்சினைகள் அவ்வப்போது  தலை தூக்கும்.

சனி  உங்கள் ராசிக்கு ஜென்ம சனியாக சஞ்சரிக்கிறார். சனி ஜென்ம சனியாகப் பிரவேசிக்கும்போது எல்லாவற்றையும் விட அதிகமாகக் கொடிய பலனைத் தருகின்றான். உயிருக்குக் கண்டம், நோய்கள், பிறருடன் விரோதம், தன விரயம் , சிறைப் பயம், மான கௌரவ பங்கம் மாரக பயம் எல்லாம் உண்டாகும். தலை நோய், வைசூரி, பேதி போன்றவை தோன்றும். ஜல கண்டம் ஏற்படும். பித்த வாத நோய்கள் ஏற்படும். யாருக்காவது இவர் கர்மம் செய்ய வேண்டியது வரும். உணவின் நச்சுத் தன்மையால் தீரா நோய் ஏற்படும். தீ விபத்துகள் ஏற்படும்.

இவரே  தம் உறவினர் ஒருவர் மரணத்துக்குக் காரணம் ஆகிறார். உடல் ஒளி கெட்டு தோற்றப் பொலிவு அழிகிறது. உடல் கருத்துத் தோன்றும். உறவினர்களும் நண்பர்களும் பிரிவர்.குழந்தைகளுக்கு நோய் காணும். வீண் அலைச்சல் அதிகமாகும். சிறைப் பயம் அல்லது சிறைவாசம் உண்டாகும். தொங்கிய முகத்துடன் பிறரிடம் சென்று கையேந்தி நிற்க வேண்டியது வரும். ஏதாவது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பர். கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்படும் ஆபத்தும் உண்டு. மனக் கிலேசமும் , உடலில் அளவுக்கு மீறிய உழைப்பால் சோர்வு முதலியவையும் உண்டாகும். இது 7 1/2 ச் சனியில் மிகவும் கொடுமை செய்யும்  ஜென்ம சனிக்காலமாகும். நடு 21/2 வருஷமாகும். ஆயுர்த்தாயம் நிறைவும், சமீபத்து 7 1/2ச் சனியும் ஜென்ம சனியாய் அமைந்துவிட்டால், மரணமும் சம்பவிக்கலாம். பெண்களுக்கு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்  சனி பகவானின் ஏழாம் பார்வை களத்திர ஸ்தானமான  7-ம் வீட்டில் விழுவதால், கணவர் உங்கள் பேச்சை மீறியோ அல்லது உங்கள் கருத்துக்கு மாறாகவோ செயல்படுவார். இருவரிடமும் நெருக்கம் குறைவதோடு தேவையற்ற சணடை சச்சரவுகளும் ஏற்படும். உங்களுக்கு புகுந்த வீட்டாரிடமிருந்து தொல்லைகள் உண்டாகும். அவர்களின் கருத்துகளுக்கு ஏற்றவாறு உங்கள் கணவர் செயல்படுவார். உங்களுக்கு கவலைகள் அதிகரிக்கும். உங்களின் உழைப்பு மற்றும் குடும்பப் பற்றை உங்கள் கணவரும் உங்கள் புகுந்த வீட்டாரும் அலட்சியம் செய்வதோடு, வீண் பழிக்கும் நீங்கள் ஆளாக நேரும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற நற்பெயரோ அல்லது பாராட்டோ கிடைக்காது. உங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கூட கிடைக்காது. உங்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களால் கௌரவ பாதிப்போ அல்லது ஆண் ஊழியர்களால், சில வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளும் தொந்தரவுகளும்கூட  ஏற்படும். எனவே அவர்களுடன் எச்சரிக்கையோடு பழகுவது நல்லது.

ஜெனம் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்களுக்கு உடல் அசதியையும் மன அழுத்தத்தையும் உற்சாகமின்மையையும் ஏற்படுத்துவார். மேலும் குடும்பச் சூழலும் உங்கள் கவனத்தைப் பலவழிகளிலும் சிதறடிக்கும். எனவே முதல் ஒரு ஆண்டுக்கு நீங்க்ள் நினைத்தவற்றை சாதிக்க முடியும் .ஆனால், அத்ன்பிறகு, நல்ல மதிப்பெண் பெறுவதோ அல்லது விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுப்பதோ அரிதாகிவிடும்.

அரசியல்வாதிகளுக்கு இந்த சனிப் பெயர்ச்சி பெரிய அளவில் நன்மைகளைச் சேர்க்காது. இருப்பினும் சென்ற முறை இருந்துவந்த வீண் அலைச்சலும் மற்றும் அவப் பெயர்களும் மெள்ள மெள்ள மறையத் தொடங்கும்.

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வெள்ளிக் கிழமைகளில் மகாலஷ்மியின்  கோவிலுக்குச் சென்று சிவப்பு மலர்களால் அர்ச்சிக்கவும்.    வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்வதும் நல்லது.  கொள்ளு தானம் செய்யவும். ஏழரைச் சனியின் சஞ்சாரம்  நடைபெறுவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபட்டால், துன்பம் அகலும்.  தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். உடல் ஊனமுற்றோருக்கும் வயதானவர்களுக்கும் உதவி செய்யவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். துன்பங்கள் தீர்ந்து சுபம் பெருகும்.

புத்தாண்டில் இனிதே வாழ வாழ்த்துக்கள்!

^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>