/* ]]> */
Jan 042019
 

2019 .புத்தாண்டு பலன்கள்:

2019

கன்னி :

கன்னி ராசி

கன்னி ராசி

இந்த ஆண்டு முற்பகுதியில், அதாவது 2019 செப்டம்பர்  மாதம் வரை, குரு உங்கள் ராசிக்கு  3 ம் இடத்திலும் பிற்பகுதியில் , 2019  செப்டம்பர் மாதம் முதல், ராசிக்கு 4–ம் இடத்திலும்  சஞ்சரிக்கிறார்கள். சனி 4-ம் இடத்தில்   சஞ்சரிக்கிறார்.  இரண்டுமே நல்ல சஞ்சாரம்ல. இனி பலன்களைப் பார்க்கலாம்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் நல்லது என்று சொல்ல முடியாது. இனி பலன்களைப் பார்ப்போம்.
எந்த செயலைச் செய்தாலும் குறுக்கீடும் அதனால் மனம் தளர்வதுமான சூழ்நிலையும் ஏற்படும். பணவரவைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொது இடங்களில் அதிகம் பேசி பிரச்சினையை வரவழைத்துக்கொள்வீர்கள். சகோதரர்கள் உதவுவதாக எண்ணி சிரம நிலையை உருவாக்கி விடுவார்கள். எக்காரணம் கொண்டும், விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்களை  பிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தின் தேவைகளை நிறவேற்ற அவ்வப்போது கடன் வாங்குவீர்கள். மாற்றுகுணம் உள்ளவர்களால் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அடிக்கடி கடின அலைச்சல் மிக்க பயணம் ஏற்படும். ரியல் எஸ்டேட் , நிதிநிறுவனம், கல்வி நிறுவனம் ட்ரேவல்ஸ், லாட்ஜ், ஹோட்டல்ஸ்,டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆட்டோமொபைல், மின்சார-மின்னணு சாதனங்கள , ஃபர்னிச்சர், தோல் பொருள் உற்பத்தி  முதலிய தொழில்களில் ஈடுபட்டவர்கள் பின்தங்கிய நிலை காண்பர். மற்ற தொழில் செய்பவர்களுக்கும் சுமாரான நிலையே இருக்கும். வாகன வகையில் அதிகம் செலவாகும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் குளறுபடிகளை எதிர்கொள்வர். பெண்களுக்கு பணியில் கவனமின்மையால் அவப்பெயர் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான விஷ்யங்களில் தாமதம் ஆகும். அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசி சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். உங்களின் சிரமங்களைக் ககண்டு எதிரிகள் பரிகாசம் செய்வர். பொறுப்புகளை சரிவர நிறவேற்றாததால், நீங்கள் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவீர்கள். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். விவசாயிகள் நிலம் சம்பந்தமான பத்திரங்களையும் , ஆவணங்களையும்  பிறரை நம்பி ஒப்படைக்கக்கூடாது. கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்வோருக்கு பார்ட்னருடன் பிரச்சினை ஏற்பட்டு,  கோர்ட் வழக்குவரை போகும். நல்ல செழிப்பான சூழ்நிலை இருக்கும். அது ஒரு  நிஜத் தோற்றம் இல்லை என்பதுபோல ஒரு பெரிய சரிவை சந்திக்க  நேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன்வேலை செய்யும் பெண்ணிடம் அளவுக்கு மீறி உறவாடி பெயரைக் கெடுத்துக்கொள்ள நேரும். குடும்ப கௌரவமும் இதனால் கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதையும் தெய்வவழிபாட்டின் மூலம் சரிபண்ணிக்கொள்ளலாம்.
[ இந்த புத்தாண்டுப் பலன்கள் உங்களுக்கு moonramkonam.com என்ற வெப்சைட்டிலிருந்து வழங்கப்படுகின்றது]
பலவித பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரும். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு பாதிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் யாருக்காவது வாக்குறுதி கொடுத்துவிட்டு தவிப்பீர்கள். மேலும் நாணயம் தவறுவதற்கான வாய்ப்பு தெரிகிறது. எதிர்பாராத வருமானம் கிடைத்தால்கூட கையில் காசு இல்லாமல் போகும். ஆனால், நீங்கள்  பெரும் குழப்பத்தில் தத்தளிப்பதால் கையில் காசு இல்லாத சமயத்தில் அவசியமான செலவுகளை விட்டுவிட்டு அனாவசியமான செலவுகளைசெய்வீர்கள். பிறகு அவசியத்துக்கு தவிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். உங்கள்  வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். தெய்வதரிசனம், சிலர் கோவில் கட்டுமானப் பணிகளிலும் தடை ஏற்படும். சிலருக்கு குலதெய்வ வழிபாடு விட்டுப்போகும். தான தரும காரியங்கள் செய்யமுடியாமல் தடை ஏற்படும். சிலருக்கு கல்வியில் தடைகள் ஏற்படும். சிலர் அவசிய செலவுகளுக்காக நகைகளையும் சொத்துக்களையும் அடகு வைப்பார்கள். ஞானிகள், சாதுக்கள், பெரியோர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும்  ஆளாக நேரும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். சிலருக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும் . மேலதிகரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வேண்டாத பணிமாற்றம் ஏற்படும். கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படலாம். அல்லது வேறு சிக்கல் உண்டாகலாம். சிலருக்கு புத்திரர்களின் போக்கு கவலையைக் கொடுக்கும். அவர்கள்து கல்வி மற்றும் முன்னேற்றம் தடைப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் தாமதமாகும். அவர்களுக்கான சுபகாரியங்கள் தடைப்படும். அவர்கள் பணிபுரியும் இடங்களில் தேவையற்ற பிரச்சினைகளும் ,மனக்கசப்பும் ஏற்படும். பிதுர் காரியங்கள் தள்ளிப்போகும். அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளால் தொல்லை ஏற்படும்.உங்கள்  அந்தஸ்து குறைந்து பாதிப்படையும்.
[ இந்த புத்தாண்டு பலன்கள் 'moonramkonam.com' என்ற வெப்சைட்டிலிருந்து வழங்கப்படுகின்றது.]

செப்டம்பருக்குப் பிறகு வரப் போகும் குருவின் 4-மிடத்து சஞ்சாரம் உங்களுக்கு நற்பலன்களை வழங்க முடியாது. தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் சில சமயம் உங்களுக்கு சாதகமாகவும் முடியும். தந்தையின் உடல்நலம் பாதிப்படையும். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படும். சிலருக்கு பல், காது, கணுக்கால், கழுத்து, வாய், மூலம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். பயணங்களில் தொல்லைகள் ஏற்படும். உணவில் ஒவ்வாமை ஏற்படும். . குரு ஜூலை மாதம் 5-ம் தேதி முதல், 4ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வேண்டாம். அந்த வாக்கை காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் 7-ம் இடத்தில் சஞ்சரிப்பது உகந்தது அல்ல. பலன்கள் எப்படி இருக்கும்? குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை ந்ம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும் உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்படும். உடல் நலம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள்உண்டாகும். குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சிமேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.

சனி பகவான், இந்த வருடம் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது மிகவும் கெட்ட பலன் தருவதாகும். இது அர்த்தாஷ்டம சனி என வழங்கப்படும். இச்சமயம் அரசாங்கத்தால் கெடுபிடியும் பகையும் ஏற்படும். கால்நடைகள் பாழாகும். முன் சேர்த்து வைத்த பணம் அழியும். வீட்டை, நாட்டை விட்டு எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டு, வெளியூர்களுக்கு செல்லவேண்டியது வரும். மாரக தசை நடந்தால், உயிருக்கும் கண்டம் ஏற்படலாம். வீடு போன்ற சொத்துக்களும் கை நழுவும். மனைவியுடன் பகையும், பிரிவும் ஏற்படும். பந்து ஜனங்களை விரோதம் பண்ணிக்கொள்ள நேரும்.  ஏதாவது துக்கத்தால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பர். வாத நோய், கீல்வாதம் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும். கால் இழுத்துக்கொண்டு, ஒரு கால் முடமாகவும் நேரலாம். நாய்க் கடித் தொல்லை, மாடு முட்டல் போன்ற இன்னல்களும் ஏற்படும். மனைவி மற்றும் உறவுப் பெண்களுக்கு நோய் காணும். மனைவி மற்றும் உறவுப் பெண்களுக்கு நோய் காணும். இவருக்கே கண்டம் தரித்திரம் மேலிடும். சுகம், சௌக்கியம், தூக்கம் எல்லாம் கெடும்.   மனம் எப்பொழுதும் கெட்டதையே எண்ணிக் கொண்டிருக்கும். மானம், மரியாதை கௌரவம் எல்லாம் பறிபோகும். நிழலுக்கு ஒதுங்கக்கூட இடமின்றி வீடு வாசலின்றி , இவர் அலையலாம். எதிலும் பயமும் தயக்கமும்  ஏற்படும். வாழ்க்கையின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டு , அங்கேயே  தவிக்க வேண்டியது வரும்.பகைவரும் வேண்டாதவர்களாலும் மிகுதியான தொல்லை ஏற்படலாம். தனக்கு எப்பொழுதும் கெட்டதே நேரும் என்ற உள்ளுணர்வும் இருந்துகொண்டே இருக்கும். குதர்க்க புத்தியும் , கெட்ட சிந்தையும் இருந்துகொண்டே இருக்கும். ஆக, இந்த சனி, மிகுதியான கெடு பலன்களையே தரும்.  பெண்களுக்கு இதுவரை யோக பலன்களாக நடந்து வந்தது. அதற்குக் காரணம் உங்களுக்கு ந்டைபெற்று வரும் சனியின் மூன்றாமிட சஞ்சாரம்தான். ஆனால், இப்போது ஏற்படப் போகும் சனிப் பெயர்ச்சியால், சனி பகவான் உங்கள் 4-ம் வீட்டில் பிரவேசிப்பதால், உங்களுக்கு இதுவரை கிடைத்துவந்த நற்பலன்கள் யாவும் தடைப்பட்டுப் போகும். பொதுவாகவே உங்களுக்கு இத்தகைய சனியின் பாதிப்பு, சனியின் மாற்றத்தின் மூலம் ஏற்பட்டதுமே, பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்ட ஆரம்பிக்கும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

பரிகாரம்:

உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தில்  ஒரு முறை  மிருத்யஞ்ச்சய  ஹோமமோ அல்லது ஆயுஷ் ஹோமமோ செய்யுங்கள். ஆதித்ய ஹிருத்யம்  தினமும் பாராயணம் செய்யவும். கோதுமை தானம் செய்யவும்.  சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும். ஆண்டின் பிற்பகுதியில், குருவின் சஞ்சாரம் சரியில்லாததால வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்த்திக்கு மஞ்சள் மலர் மாலையும் கொண்டக்கடலை மாலையும் அணிவித்து வழிபடவும்.  உங்கள் முன்னோர்களுக்கான நியமங்களையும் காரியங்களையும் தடைப்படாமல் நிறைவேற்றவும்.

வாழ்க பல்லாண்டு!சிறக்கட்டும் புத்தாண்டு!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

***************************************************

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  One Response to “2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி”

  1. பலன் பார்க்க தெரியாம இப்படி எழுதுனா என்ன செய்றது… தெரிஞ்சா செய்யணும் இல்லைனா மூடிக்கிட்டு இருக்கணும்… நீ பலன் சொல்லுறேன்னு பல பெற இப்பவே பீதி அடைய செய்ற… நீ சொல்லுற பலனை எனக்கு 71/2 சனி இருக்கும்போது கூட நான் இதெல்லாம் அனுபவிச்சது இல்லை… உன் வாயில நல்லதே வராதா…

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>