/* ]]> */
Dec 302017
 

2018 – புத்தாண்டு பலன்:

puththantu 2018

மகர ராசி:

மகர ராசி

மகர ராசி
        இந்த ஆண்டில் 2018 ஆகஸ்டு மாதம் வரை குரு 10-மிடத்திலும், அதன்பிறகு குரு 11-மிடத்திலும், சனி விரய  சனியாகவும் சஞ்சரிக்கிறார்கள். இந்த ஆண்டு , ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப  ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது  உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும்.

2018 ஆகஸ்டு  மாதம்  வரை நடைபெரும்  குருவின் 10-மிட சஞ்சரத்தின்போது  வசதி வாய்ப்புகள் குறைய வாய்ப்புண்டு. வீடு, வாகனங்கள் மூலம்  ரிப்பேர் செலவு வரும் .  வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள் அந்த வேலையைப்  பண நெருக்கடியினாலோ, அல்லது தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மையாலோ பாதியில் நிறுத்தவேண்டி  நேரும். உடம்புக்கு அவ்வப்போது ஏதாவது படுத்தும். எதிரிகளின் ஆபத்துகளிலிருந்தும்  ஒதுங்கியிருப்பது நல்லது. உங்கள் பதவிக்கு ஏதாவது ஆபத்து நேரலாம். பணியிடங்களில் கவனம் தேவை. மனக்கவலை சிலருக்கு  அதிகமாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இல்லையென்றால், மன அழுத்தம் ஏற்படலாம்.   தொழில், வியாபாரத்தில் லாபம் இருக்காது. பூர்வீகச் சொத்தில் இழுபறி  நீடிக்கும். அரசுக் கொள்கை காரணமாகவோ, அல்லது ஏதாவது தண்டனை மூலமாகவோ உங்கள் சம்பளம் குறையலாம். கைக்கு வரும் பண வழிகள் அடைபடும். குடும்பத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள்  நிலவும். அடக்கி வாசித்தால்  மட்டுமே நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பலாம்.   குடும்பச் செலவுகளுக்குத் தேவையான வருமானமும் பற்றாக்குறையாவதால், குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய், அதன்மூலம் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. இல்லாவிட்டால், வாய்த் தகறாறு முற்றி பிரச்சினைகள் பெரிதாகலாம். உங்கள் பக்கம் இருக்கும் நியாயமும்கூட எடுபடாது. 10-மிட குரு, தொழில் பெருக்கத்துக்கு உதவ மாட்டார். தொழில் மந்தமாக இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவும் முடியாது. தொழிலாளர் ஒத்துழைப்பு கிடைக்காமல் போவதும் நடக்கும். எனவே முன்னேற்றத் திட்டங்களை அமுல்படுத்த முடியாது. வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல், வியாபாரத்தையே மூடிவிட்டு வேறு வேலை தேடலாமா என்றும் சிலருக்கு யோசனைதோன்றும்.

இந்த வருடம் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில்  சனி பகவான் சஞ்சரிக்கிறார். இது ஏழரைச் சனியின் முதல் கட்டமாகும்.  இந்த ஏழரைச் சனிக் காலத்தில் , தரித்திரம், நஷ்டம், பயனற்ற அலைச்சல், ஆகியவை உண்டாகும். வெகு தூரப் பயணங்கள் ஏற்படும். கட்டுக்கடங்காத அளவுக்கும், தகுதிக்கு மீறியும் செலவுகள் ஏற்படும். மனதில் எப்பொழுதும் சங்கடமும் கவலையும் இருந்துகொண்டே இருக்கும். வேலை இல்லாமை, அதனால் வருவாய் இல்லாத நிலை, எந்தத் தொழிலையும் செய்ய முடியாமை , செய்ய மனமில்லாமை, என்னும் இவை உண்டாகும். உள்ள பணமெல்லாம் பல வழிகளிலும் நஷ்டமாகும். மாரக தசை நடந்து, ஆயுர்த் தாயமும் ஆயுள் முடிவும் நெருங்கியிருந்து, இது மூன்றாம் சுற்று 7 1./2ச் சனியாகவும் அமைந்தால், உயிருக்கே கண்டம் ஏற்படலாம். மான பனக்ம், கௌரவ பங்கம் போன்றவை ஏற்படும். சிந்தை தெளிவின்மையால், சரியான முடிவு செய்ய முடியாமல் எல்லாக் காரியங்களும் கெடும். மனைவி மக்களை விட்டுப் பிரிய நேரும். கால்நடை அழியும். விருப்பத்திற்கு மாறாக வெளியூர், வெளிநாடு செலல் வேண்டியிருக்கும்

இனி , 2018 ஆகஸ்டு மாதம்  முதல் குருபகவான் விருச்சிக  ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.  அதாவது உங்களுடைய லாப ஸ்தானமான 11-ம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார்.  ஏற்கெனவே சொல்லியபடி, குருபகவான் உங்களுக்கு நன்மை தரும்  ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து, அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள் நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.   குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை, வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை செய்து மன நிறைவைப் பெறுவீர்கள்.  இந்த ஆண்டில், சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் பிற்பகுதியில் நற்பலன்களாகக் கொடுப்பார்.  நீங்கள் எண்ணிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

[ இந்த   புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் ,பணி உயர்வு ,உத்தியோக உயர்வு பெறுவார்கள். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். இப்படியாக குருபகவான் தரக்கூடிய நற்பலன்கள் யாவுமே நல்லவிதமாக  நிகழும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.  பண வரவு  ஏற்பட்டு பல வழிகளிலிருந்தும் ஆதாயம் கிடைக்கும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிக் கொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது. காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

இந்த வருடம் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது ஏழரைச் சனியின்ஆரம்ப 2 1/2 வருஷமான  முதல் பகுதியாகும் இதன் விளைவாக   துயரங்களும் வேதனைகளும் சூழ்ந்தபடிதான் இருக்கும். பெண்களுக்கு இது ஏழரைச் சனியின் ஆரம்ப கட்டம். முதல் இரண்டரை வருடத்தில் இருக்கிறீர்கள். இதனை விரய சனி என்பார்கள். உங்களுக்கு உடல் மற்றும் மனம் ரீதியான  பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும்.. மாணவர்களுக்கு சனி பகவானின் ஆரம்பகால மாற்றம், சிற்சில சங்கடங்களையும் தடைகளையும்  கல்வி அடிப்படையில் ஏற்படுத்தும்.  நீங்கள் கரடுமுரடான பாதையைக் கடக்க வேண்டிவரும். இதனால்,குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் அதிருப்திக்கு ஆளாக நேரும். எவ்வளவுதான் முயற்சி செய்து படித்தாலும், பாதியளவே உங்களுக்கு வெற்றி கிட்டும். நீங்கள் விரும்பும் அல்லது தேர்ந்தெடுத்து படிக்க நினைக்கும் விருப்பப் படம் கிட்டாமல் போக இந்த ஏழரைச் சனியின் விரய சனியானது சதி செய்யும். சிலருக்கு உடல்நலக் கோளாறு, அல்லது ஞாபக மறதி மற்றும் கல்வியில் ஆர்வமின்மை போன்றவை வழக்கம் போல ஏற்படவே செய்யும். நீங்கள் உங்கள் பங்கிற்கு அலுப்புடனும் உற்சாகமற்றும் கல்வியில் ஈடுபடுவதால், வெற்றி கனவாகி விடும். எதிர்பார்த்த மதிப்பெண் கிட்டாமல் போகும். அரசியல்வாதிகளுக்கு  சில தேவையற்ற பிரச்சினைகள் அது பொருளாதார ரீதியாகவோ அல்லது அரசியல் வட்டாரத்திலோ ஏற்பட்டு உங்களின் அமைதிக்கு ஊறு செய்யும் புதிதாக வரும் நபர்களிடம் எதையும் மனம் விட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையேல் அவர்களால் உங்களுக்கு சில சிக்கல்கள் உருவாகககூடும். உங்களுக்கு சில சங்கடங்களையும் மனக் கவலையையும் ஏற்படுத்தும். மேலும் வெளிவட்டாரத்திலும் வீட்டிலும் உங்களுக்கு கெட்ட பெயர்கள் வர இந்த காலக் கட்டத்தில் வாய்ப்புள்ளது.  எனவே  மிகவும் கவனத்துடன் செயலாற்றவேண்டும்.

இந்த ஆண்டுகான புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வெள்ளிக் கிழமைகளில் மகாலஷ்மியின்  கோவிலுக்குச் சென்று சிவப்பு மலர்களால் ஏச்சிக்கவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்,வினாயகரை வழிபடவும்.   வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்வதும் நல்லது.  கொள்ளு தானம் செய்யவும். ஏழரைச் சனியின் சஞ்சாரம்  நடைபெறுவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபட்டால், துன்பம் அகலும்.  தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். உடல் ஊனமுற்றோருக்கும் வயதானவர்களுக்கும் உதவி செய்யவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். துன்பங்கள் தீர்ந்து சுபம் பெருகும்.

புத்தாண்டில் இனிதே வாழ வாழ்த்துக்கள்!

^^^^^^^^^^^^^^^^^

[உங்கள் ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள ரூ. 950 செலுத்தி, moonramkonam.com  என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>