/* ]]> */
Dec 302017
 

2018- புத்தாண்டு பலன்கள்:

puththantu 2018

தனுசு ராசி

தனுசு ராசி
               தற்போது குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில்  சஞ்சரித்துகொண்டிருக்கிறார். இது  2018 ஆகஸ்டு மாதம் வரை தொடரும்.உங்களுக்கு சாதகமான சஞ்சாரம் என்பதால், நற்பலன்களாக நிகழ்ந்து வரும். வருகிற ஆகஸ்டு மாதம் முதல், குரு பகவான், விரய ஸ்தானமான 12-ம் இடத்துக்குப் போவதால், நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.

[ இந்த ஆண்டு க்கான புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

தற்போது, இந்த ஆண்டின் தொடக்கம் முதல் ஆகஸ்டு மாதம்  வரை,   குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும்.  இத்தகு யோகமான குருபலன் இந்த வருடம்  ஆகஸ்டு  மாதம் வரை நீடிக்கும். குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள்,  நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், நிறைவேற்றுவீர்கள்.  சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.

[ இந்த ஆண்டுக்கான புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

.         எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன்  காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள்   குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.

[ இந்த ஆண்டுக்கான புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள்.  தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக குருபகவானின் சஞ்சாரம்  ஆகஸ்டு மாதம் தேதி வரைதான் சிறப்பாக இருக்கும்.

[இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

அதன்பிறகு ஆகஸ்டு மாதம் முதல்  குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்குப் போவதால், எதைத் தொட்டாலும் விரயமாகவே இருக்கும். இதுவரை கூறப்பட்ட பலன்களுக்கு எதிரிடையான பலன்களாகவே நடக்கும். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய ஊக்கம் குறையும். அலுப்பும் சலிப்புமே அதிகரிக்கும். ஊட்டம் குறைந்து உடல் பலவீனமாகும். உடல்நலத்தில் சின்ன சின்னக் குறைகள் தோன்றும். ஈரல் கோளாறுகளும், செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். சர்க்கரை வியாதி, கொலாஸ்ட்ரல் முதலிய வியாதிகள் வரும். சிகிச்சையின்மூலம் பணம் கரையும். வேலை நெருக்கடிகளையும் அலைக்கழிப்புகளையும் சந்திப்பதால், நேரா நேரத்துக்கு சாப்பிட முடியாமல் போகும். கடினமான உழைப்பால் உடம்பில் உளைச்சல் உண்டாவது சகஜம் என்றாகிவிடும்.  பணம் ஏராளமாக செலவாகும். பணம் ஒன்றுக்கு இரண்டாக செலவழியும். வழக்கமான செலவுகளே வரம்பு மீறிவிடும். புதிய செலவினங்களும்  கிளம்பி, வாட்டி வதைக்கும். குடும்பசெலவுகள், பிள்ளைகளுக்கான பலவித செலவுகள், உறவினர் வகையில் விஷேஷங்களுக்கான செலவுகள் என்று சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வரவேண்டிய   பணம் சரியான சமயத்தில் கைக்கு வராததால், ஏகப்பட்ட நெருக்கடிகளில் சிக்கி ,அவஸ்தைக்குள்ளாவீர்கள். உங்கள் மதிப்பு  மரியாதை குறையும் அளவுக்குப்  போய்விடும். சொந்த பந்தங்களின் சுபகாரிய சீர்வரிசைக்கெல்லாம் செலவு செய்யவேண்டி நேர்வதால் திணறுவீர்கள். பொன்னாபரணங்களை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வட்டிகட்ட முடியாமல் நகைகளை விற்கும் நிலை ஏற்படும். கூடிவந்த திருமணம்கூட தடைப்படும். தம்பதியர் ஒற்றுமை குறையும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் சஞ்சலம் உண்டாகும். தூர தேசங்களில் பிள்ளைகளைப் பிரிந்திருக்க  நேரும். மனதில்  நிம்மதி இருக்காது. புகழ் மங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். திருமணத் தடை, பிள்ளைகள் பிரச்சினை, பணியிடத்தில் அவமானம் வியாபார நஷ்டம் என்று தொல்லைகள் பல இருக்கும

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

குருவின் 12-மிட  சஞ்சாரத்தால் நீங்கள் பலவிதத்தில் சிரமப்பட நேர்ந்தாலும்  சில நன்மைகளையும் அடைவீர்கள். 12-மிடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானின் அருள் நிறைந்த பார்வைர்களில் ஒரு பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் விழுகிறது. இதனால் கல்வி மேம்படும். வித்தைகள் விருத்தியாகும். தாயாருக்கு உடல்நலம் சிறக்கும். இடம்,குடியிருப்பு, மனை, வீடு, தோட்டம், இதர சொத்துக்கள் ஆகியவற்றை பெருக்கிக்கொள்ள முடியும். குருபகவானின் மற்ற பார்வைகள் 6 மற்றும் 8 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், வியாதிகள் மட்டுப்படும். கடன், நோய்கள் குறையும். வழக்கு, விவகாரங்களை எதிர்கொண்டு  வெற்றிகொள்ள முடியும். எனவே ஒரேயடியாக துவண்டுபோகவேண்டிய அவசியமில்லை. அவ்வப்போது குருவின் சுபப் பார்வை ஒளி வீசும்

. [ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

சனி  உங்கள் ராசிக்கு ஜென்ம சனியாக சஞ்சரிக்கிறார். சனி ஜென்ம சனியாகப் பிரவேசிக்கும்போது எல்லாவற்றையும் விட அதிகமாகக் கொடிய பலனைத் தருகின்றான். உயிருக்குக் கண்டம், நோய்கள், பிறருடன் விரோதம், தன விரயம் , சிறைப் பயம், மான கௌரவ பங்கம் மாரக பயம் எல்லாம் உண்டாகும். தலை நோய், வைசூரி, பேதி போன்றவை தோன்றும். ஜல கண்டம் ஏற்படும். பித்த வாத நோய்கள் ஏற்படும். யாருக்காவது இவர் கர்மம் செய்ய வேண்டியது வரும். உணவின் நச்சுத் தன்மையால் தீரா நோய் ஏற்படும். தீ விபத்துகள் ஏற்படும்.

இவரே தம் உறவினர் ஒருவர் மரணத்துக்குக் காரணம் ஆகிறார். உடல் ஒளி கெட்டு தோற்றப் பொலிவு அழிகிறது. உடல் கருத்துத் தோன்றும். உறவினர்களும் நண்பர்களும் பிரிவர்.குழந்தைகளுக்கு நோய் காணும். வீண் அலைச்சல் அதிகமாகும். சிறைப் பயம் அல்லது சிறைவாசம் உண்டாகும். தொங்கிய முகத்துடன் பிறரிடம் சென்று கையேந்தி நிற்க வேண்டியது வரும். ஏதாவது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பர். கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்படும் ஆபத்தும் உண்டு. மனக் கிலேசமும் , உடலில் அளவுக்கு மீறிய உழைப்பால் சோர்வு முதலியவையும் உண்டாகும். இது 7 1/2 ச் சனியில் மிகவும் கொடுமை செய்யும்  ஜென்ம சனிக்காலமாகும். நடு 21/2 வருஷமாகும். ஆயுர்த்தாயம் நிறைவும், சமீபத்து 7 1/2ச் சனியும் ஜென்ம சனியாய் அமைந்துவிட்டால், மரணமும் சம்பவிக்கலாம். பெண்களுக்கு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்  சனி பகவானின் ஏழாம் பார்வை களத்திர ஸ்தானமான  7-ம் வீட்டில் விழுவதால், கணவர் உங்கள் பேச்சை மீறியோ அல்லது உங்கள் கருத்துக்கு மாறாகவோ செயல்படுவார். இருவரிடமும் நெருக்கம் குறைவதோடு தேவையற்ற சணடை சச்சரவுகளும் ஏற்படும். உங்களுக்கு புகுந்த வீட்டாரிடமிருந்து தொல்லைகள் உண்டாகும். அவர்களின் கருத்துகளுக்கு ஏற்றவாறு உங்கள் கணவர் செயல்படுவார். உங்களுக்கு கவலைகள் அதிகரிக்கும். உங்களின் உழைப்பு மற்றும் குடும்பப் பற்றை உங்கள் கணவரும் உங்கள் புகுந்த வீட்டாரும் அலட்சியம் செய்வதோடு, வீண் பழிக்கும் நீங்கள் ஆளாக நேரும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற நற்பெயரோ அல்லது பாராட்டோ கிடைக்காது. உங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கூட கிடைக்காது. உங்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களால் கௌரவ பாதிப்போ அல்லது ஆண் ஊழியர்களால், சில வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளும் தொந்தரவுகளும்கூட  ஏற்படும். எனவே அவர்களுடன் எச்சரிக்கையோடு பழகுவது நல்லது.

ஜெனம் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்களுக்கு உடல் அசதியையும் மன அழுத்தத்தையும் உற்சாகமின்மையையும் ஏற்படுத்துவார். மேலும் குடும்பச் சூழலும் உங்கள் கவனத்தைப் பலவழிகளிலும் சிதறடிக்கும். எனவே முதல் ஒரு ஆண்டுக்கு நீங்க்ள் நினைத்தவற்றை சாதிக்க முடியும் .ஆனால், அத்ன்பிறகு, நல்ல மதிப்பெண் பெறுவதோ அல்லது விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுப்பதோ அரிதாகிவிடும்.

அரசியல்வாதிகளுக்கு இந்த சனிப் பெயர்ச்சி பெரிய அளவில் நன்மைகளைச் சேர்க்காது. இருப்பினும் சென்ற முறை இருந்துவந்த வீண் அலைச்சலும் மற்றும் அவப் பெயர்களும் மெள்ள மெள்ள மறையத் தொடங்கும்.

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வெள்ளிக் கிழமைகளில் மகாலஷ்மியின்  கோவிலுக்குச் சென்று சிவப்பு மலர்களால் அர்ச்சிக்கவும்.    வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்வதும் நல்லது.  கொள்ளு தானம் செய்யவும். ஏழரைச் சனியின் சஞ்சாரம்  நடைபெறுவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபட்டால், துன்பம் அகலும்.  தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். உடல் ஊனமுற்றோருக்கும் வயதானவர்களுக்கும் உதவி செய்யவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். துன்பங்கள் தீர்ந்து சுபம் பெருகும்.

புத்தாண்டில் இனிதே வாழ வாழ்த்துக்கள்!

^^^^^^^^^^^^^^^^

[உங்கள் ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள ரூ. 950 செலுத்தி, moonramkonam.com  என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>