/* ]]> */
Dec 302017
 

2018 -புத்தாண்டு பலன்கள்-

puththantu 2018

கும்பம்::

கும்ப ராசி
கும்ப ராசி
              இந்த ஆண்டில் 2018 ஆகஸ்டு மாதம் வரை குரு 9-மிடத்திலும், அதன்பிறகு குரு 10-மிடத்திலும், , சனி உங்களுடைய 11-ம் இடத்தில் லாப சனியாகவும் சஞ்சரிக்கிறார்கள். இந்த ஆண்டு ,குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் பலவித யோகங்களை வழங்கும். ஆனால், ஆகஸ்டு மாதத்திலிருந்து  குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்குப் பெயர்ந்து சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கப் போகிறார்.

இனி ஒவ்வொரு சஞ்சாரங்களின் மூலம் விளையும் பலன்களைப் பார்க்கலாம்.

.                                         ஏற்கெனவே கூறியபடி 20178 ஆகஸ்டு மாதம் வரையிலும் குருபகவான் உங்களுக்கு நன்மை தரும்  ஸ்தானமான 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள் நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.

குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை, வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை செய்து மன நிறைவைப் பெறுவீர்கள்.  இந்த ஆண்டில், சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார்.  நீங்கள் எண்ணிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் ,பணி உயர்வு ,உத்தியோக உயர்வு பெறுவார்கள். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். இப்படியாக குருபகவான் தரக்கூடிய நற்பலன்கள் யாவுமே நல்லவிதமாக  நிகழும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.  பண வரவு  ஏற்படும். நிதி உதவி  பல வழிகளிலிருந்தும் கிடைக்கும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது. காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

அடுத்தபடியாக  2018 ஆகஸ்டு  மாதம்  முதல் நிகழப் போகும் குருவின் 10-மிட சஞ்சரத்தின்போது  வசதி வாய்ப்புகள் குறைய வாய்ப்புண்டு. வீடு, வாகனங்கள் மூலம்  ரிப்பேர் செலவு வரும் .  வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள் அந்த வேலையைப்  பண நெருக்கடியினாலோ, அல்லது தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மையாலோ பாதியில் நிறுத்தவேண்டி  நேரும். உடம்புக்கு அவ்வப்போது ஏதாவது படுத்தும். எதிரிகளின் ஆபத்துகளிலிருந்தும்  ஒதுங்கியிருப்பது நல்லது. உங்கள் பதவிக்கு ஏதாவது ஆபத்து நேரலாம். பணியிடங்களில் கவனம் தேவை. மனக்கவலை சிலருக்கு  அதிகமாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இல்லையென்றால், மன அழுத்தம் ஏற்படலாம்.   தொழில், வியாபாரத்தில் லாபம் இருக்காது. பூர்வீகச் சொத்தில் இழுபறி  நீடிக்கும். அரசுக் கொள்கை காரணமாகவோ, அல்லது ஏதாவது தண்டனை மூலமாகவோ உங்கள் சம்பளம் குறையலாம். கைக்கு வரும் பண வழிகள் அடைபடும். குடும்பத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள்  நிலவும். அடக்கி வாசித்தால்  மட்டுமே நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பலாம்.   குடும்பச் செலவுகளுக்குத் தேவையான வருமானமும் பற்றாக்குறையாவதால், குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய், அதன்மூலம் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. இல்லாவிட்டால், வாய்த் தகறாறு முற்றி பிரச்சினைகள் பெரிதாகலாம். உங்கள் பக்கம் இருக்கும் நியாயமும்கூட எடுபடாது. 10-மிட குரு, தொழில் பெருக்கத்துக்கு உதவ மாட்டார். தொழில் மந்தமாக இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவும் முடியாது. தொழிலாளர் ஒத்துழைப்பு கிடைக்காமல் போவதும் நடக்கும். எனவே முன்னேற்றத் திட்டங்களை அமுல்படுத்த முடியாது. வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல், வியாபாரத்தையே மூடிவிட்டு வேறு வேலை தேடலாமா என்றும் சிலருக்கு யோசனைதோன்றும்.

இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இந்த கிரக சஞ்சாரம் உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். உங்களுக்கு பல வகையிலும் நன்மை செய்யும். பல வழிகளிலும் பணம் சேரும். நோய்கள் நீங்கி தேக பலமும் புதுப் பொலிவும் ஏற்படும். புதுத் தெம்பும் உற்சாகமும் கூடும். உயர்ந்த அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கௌரவமும் அந்தஸ்தும் ஏற்படும். கட்டளை இடும் பெரும் பதவிகள் வந்தடையும். பெரிய மனிதர் என்று பெயரெடுப்பர். இல்லற வாழ்வில் பெரும் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தவறான உறவுகளிலும் சிலர் மனம் செல்லலாம். ஆனால் எதிலும் வெற்றியே உண்டாகும்.அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் உண்டாகும். மாற்றான் பணமும் வந்து சேரும். பல நண்பர்கள் கிடைப்பார்கள். உதவுவார்கள். எல்லாக் காரியங்களாலும் லாபம் உண்டாகும். வீட்டில் தேவையான அனைத்து உணவுப் பொருட்கள்,மற்றும் வசதியான வாழ்க்கைத் தேவைகள் நிரம்பி வழியும். சந்தோஷ வாழ்க்கையே இருக்கும். எல்லா வகையிலும் சனி 11-ல் நல்லதையே செய்வார்.
குடும்ப ஒற்றுமை ஓங்குவதோடு, உங்களின் சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும் மரியாதையும் ஏற்படுவது உறுதி. புகுந்த வீட்டிற்கு நீங்கள் செய்யும் உதவிகள் சிறியதே ஆயினும் உங்களை மிகவும் புகழ்ந்து தள்ளுவார்கள். கணவரும் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார். உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளித்து மறுப்பேதும் கூறாமல் சம்மதம் தெரிவிப்பார். அதாவது அனைவரும் உங்களையே முந்நிறுத்தி கௌரவிப்பர். இந்த வகையில் உங்களின் செயலுக்கு பாராட்டுகள் குவியும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வந்தடையும். குழந்தையில்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாத சிலருக்கு தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். சிலருக்கு மூத்த சகோதர சகோதரிகளின் பொருளாதார உதவிகள் கிடைக்கும். அதன்மூலம் நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு இரண்டாம் திருமணம் அல்லது மறுமணம் நடக்கும் யோகம் உண்டு. மாணவர்கள் சிறிதளவே நீங்கள் சிரமப்பட்டு படித்தாலும், அது பன்மடங்காக பலன் தர சனியின் சஞ்சாரம் துணைபுரியும். நீங்கள் விரும்பும் அல்லது உங்கள் தகுதிக்கேற்ற விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க ஏற்ற காலம் இதுவே ஆகும். மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி மூலையில் முடங்கிக் கிடந்த உங்களை உச்சாணிக் கொம்புக்கே ஏற்றிக் கொண்டு போகும்.

பரிகாரம்:

வினாயகரை வணங்கி, அவரது கோயிலை சுத்தம் செய்யவும். துர்க்கையம்மனை வழிபடுங்கள் கருப்பு உளுந்து தானம் செய்யவும். மகாலக்ஷ்மி கோவிலுக்கு செல்லவும். குரு பகவான் ஆண்டு பிற்பாதியில், சரியான சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.

இந்த 2018-ம் ஆண்டு உங்களுக்கு யோகமாக வாழ்த்துக்கள்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

********************************************************

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>