/* ]]> */
Dec 282016
 

2017-புத்தாண்டு பலன்கள்:

%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81
மிதுனம்:

மிதுன ராசி

மிதுன ராசி

 இந்த ஆண்டு2017 ஆகஸ்டு மாதம் வரை, குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும் ஆகஸ்டு மாதம் முதல் குரு 5-மிடத்திலும், சனி ராசிக்கு 6-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதாவது2017 ஆகஸ்டு குரு , 4ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வேண்டாம். அந்த வாக்கை காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
[இந்த க்கான புத்தாண்டு பலன்களை உங்களுக்கு வழங்குவது moonramkonam.com]

ஆண்டின் பிற்பாதியில் அதாவது 2017 ஆக்ஸ்டு மாதம் முதல் உங்கள் ராசிக்கு 5-மிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஏராளமான பலன்களை வாரி வழங்கப் போகிறார். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த  பகை, விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள்   என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை  நண்பர்கள் அணுசரணை போன்ற  சூழ்நிலைகள் ஏற்படும்.  குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதோடு ,  கேதுவும் சாதகமாக சஞ்சரிப்பதால்,  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.    ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும்.  உங்களுக்கு எதிராக இருந்துவந்த ஊழியர்கள்அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பீர்கள்.  அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.

வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏறப்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள்,  நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.   எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.    உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும்  புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
லைக்கோ செல்ல முடியும். சில மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்காக வெளியூர் சென்று தங்கிப் படிக்க வேண்டி வரும். குடும்பத்திலுள்ள வயதானவர்களுக்கு உடல்நலம் பாதிப்படையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு கேளிக்கை, விருந்துகளில் நாட்டம் அதிகரிக்கும். அதன் காரணமாக அந்த வகையில் பண விரயம் ஏற்பட்டு, அவசியத் தேவைகளுக்கு பணமில்லாமல் அல்லாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.கடன் வாங்க வேண்டி வரும்.
ல் போய் காட்டம் அதிகமாகும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகமாகும்.
எதிர்பாராத பணவரவு இருந்தாலும் கூட கையில் தங்காது.மனைவி மற்றும் சகோதரிகளால் தொல்லைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிலர் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் கூடும். பெரியோர்களின் ஆசியும் கிடைக்கும். கணவன்-மனைவி  உறவு சுமுகமாக இருக்கும்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது உங்கள்moonramkonam.com]

சனி பகவான் , உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு மிகவும் அனுகூலமான சஞ்சாரமாக இருக்கும். நீங்கள் இதுவரை அனுபவித்துவந்த வேதனைகளும் ஏமாற்றங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். தன் குடும்பத்தினரால் உதவிகள் ஏற்படும். சுகபோகம் ஏற்படும். சத்ருநாசம் ஆகும். புதுவீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாக நடக்கும். அந்தஸ்து, பதவி, கௌரவம், உத்யோகம் அல்லது அதில் உயர்வுஎல்லாமே தேடி வரும். சாதாரண உணவுக்குப் பதிலாக தினமும் உய்ர்தர உணவாகவே கிடைக்கும். இது யோக காலமாகவெ நடக்கும். நிறைய பணமும் வாகன வகைகளும் கிடைக்கும். நீடித்த நோய்கள் நீங்கும். தேகம் திடம் பெறும். புத்தொளி பெறும். அதற்கேற்ப அதிக உணவே உட்கொள்ளலும், அதை செரித்துக்கொள்ளும் சக்தியையும் பெறலாம். பகைவர்களை வென்றுவிடுவர். எல்லா விதத்திலும் சுகமும் சௌகரியமும் உண்டாகும். குழந்தைப் பிறப்பும் உண்டாகும். எனவே சனி 6-ல் எல்லா வகையிலும் நல்ல பலனே தருகிறார்.
அரசியல்வாதிகள், பெரிய அளவில் அரசியல் சாதனைகளையோ, மாற்றங்களையோ உங்களால் நிகழ்த்துவது கடினம் என்றாலும், உங்களின் சொல்லாற்றல், மற்றும் செயலாற்றலால் உங்களுக்குக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த கால கட்டத்தில் எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளின்றி உங்களின் அரசியல் பயணத்தை அமைதியாக நடத்திச் செல்ல முடியும். பணப் புழக்கம், மற்றும் சமூக அந்தஸ்து எப்போதும்போல உங்களுக்கு பக்க பலமாய்த் துணை புரியும்.
மாணவர்களுக்கு உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல பலன்களை இந்த ஆறாமிடத்து சனி தவறாமல் செய்வார். எனவே நீங்கள் கல்வியில் ஓரளவு ஆர்வம் காட்டினாலும், பாதிக்கு மேல் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். இதுநாள்வரை, பெற்றோர், ஆசிரியர் ம்ற்றும் உறவினர்களின் புத்திமதிக்கும் ஏச்சுபேச்சுக்களுக்கும் ஆளான நீங்கள் அவர்களே உங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டும் அளவுக்கு பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். மேலும் பலரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். குருவின் சாதகமான நிலையும் மற்றும் சனியின் ஆறாமிடத்து சஞ்சாரமும் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக கலவியில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். இதனால் நீங்கள் படிக்க நினைத்த அல்லது தேர்வு செய்ய நினைத்த பாடத்தை சுலபமாக படிக்கத் தக்கதொரு நேரம் சுலபமாக உருவாகியுள்ளது. மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு அதிக அளவில் நன்மை சேர்க்கும். பெண்களுக்கு சாதகமாகவே அனைத்தும் நிகழும். சிலருக்கு வெகுநாட்களாக வரவேண்டிய தாய்வழிச் சொத்து, வசூலாகமல் இருந்த கடன் ஆகியவை கைக்கு வந்து சேரும். மேலும் உங்களின் முயற்சியாலோ அல்லது கணவரின் உழைப்பாலோ உங்களுக்கு வீடு அலல்து நிலம் மற்றும் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை மற்றும் வாகன யோகம் ஆகியவை எளிதில் கிட்டும். அதிக அளவில் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த சனிப் பெயர்ச்சி நன்மை அளிக்கும்.

பரிகாரம்:

சனியின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், சனிக்கிழமைகளில், சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும்.  வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் உதவி செய்யவும். உங்களுடைய ராசிக்கு   கேதுவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், வினாயகர் கோவிலுக்குச் சென்று, சேவையாற்றவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லையாதலால், வெள்ளிக் கிழமைகளில் துர்க்கையம்மனை சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யவும்.  குரு பகவான் ஆண்டின்  முற்பகுதியில், சரியான  சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.

இந்த 2017-ம் ஆண்டு உங்களுக்கு யோகமாக அமைய வாழ்த்துக்கள்!. வாழ்க!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் ஜாதகத்துக்குரிய முழுப் பலனை ரூ. 950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்பினால், moonramkonam.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 
. .

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>