/* ]]> */
Dec 282016
 

 

2017.புத்தாண்டு பலன்கள்:

%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81

சிம்மம்:

சிம்மம் ராசி

சிம்மம் ராசி

இந்த ஆண்டு முற்பகுதியில், அதாவது 2017 ஆகஸ்டு மாதம் வரை, குரு உங்கள் ராசிக்கு  2-ம் இடத்திலும் பிற்பகுதியில் , 2017 செப்டம்பர் மாதம் முதல், ராசிக்கு 3–ம் இடத்திலும்  சஞ்சரிக்கிறார்கள். சனி 4-ம் இடத்தில்   சஞ்சரிக்கிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

இந்த 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆகஸ்டு மாதம் வரை நிகழும் குருவின் சஞ்சாரம்,  குடும்ப வாக்கு ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து, 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்யவுள்ளார். எனவே உங்கள் ராசிக்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போகும்.  பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வந்து மகிழ்ச்சியளிக்கும். பிரிந்த உறவினர்களும் ஓடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாகும் அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும்  திருமண யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிட்டும். தொழில்- வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வீடு,மனை என்று சொத்து வாங்கும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். ரிப்பேர் செலவு வைத்துக்கொண்டிருந்த வாகனங்களை மாற்றி புதிய வண்டி வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகள் வெற்றி பெற்று, தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும்.  திரைப்படத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் உண்டாகும். விவசாயிகள் நல்ல லாபம் காண்பார்கள்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonam]

குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்துக்கு மாறப்போகிறார். அந்த சஞ்சாரம் நல்லது என்று சொல்ல முடியாது. இனி பலன்களைப் பார்ப்போம்.
எந்த செயலைச் செய்தாலும் குறுக்கீடும் அதனால் மனம் தளர்வதுமான சூழ்நிலையும் ஏற்படும். பணவரவைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொது இடங்களில் அதிகம் பேசி பிரச்சினையை வரவழைத்துக்கொள்வீர்கள். சகோதரர்கள் உதவுவதாக எண்ணி சிரம நிலையை உருவாக்கி விடுவார்கள். எக்காரணம் கொண்டும், விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்களை  பிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தின் தேவைகளை நிறவேற்ற அவ்வப்போது கடன் வாங்குவீர்கள். மாற்றுகுணம் உள்ளவர்களால் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அடிக்கடி கடின அலைச்சல் மிக்க பயணம் ஏற்படும். ரியல் எஸ்டேட் , நிதிநிறுவனம், கல்வி நிறுவனம் ட்ரேவல்ஸ், லாட்ஜ், ஹோட்டல்ஸ்,டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆட்டோமொபைல், மின்சார-மின்னணு சாதனங்கள , ஃபர்னிச்சர், தோல் பொருள் உற்பத்தி  முதலிய தொழில்களில் ஈடுபட்டவர்கள் பின்தங்கிய நிலை காண்பர். மற்ற தொழில் செய்பவர்களுக்கும் சுமாரான நிலையே இருக்கும். வாகன வகையில் அதிகம் செலவாகும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் குளறுபடிகளை எதிர்கொள்வர். பெண்களுக்கு பணியில் கவனமின்மையால் அவப்பெயர் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான விஷ்யங்களில் தாமதம் ஆகும். அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசி சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். உங்களின் சிரமங்களைக் ககண்டு எதிரிகள் பரிகாசம் செய்வர். பொறுப்புகளை சரிவர நிறவேற்றாததால், நீங்கள் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவீர்கள். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். விவசாயிகள் நிலம் சம்பந்தமான பத்திரங்களையும் , ஆவணங்களையும்  பிறரை நம்பி ஒப்படைக்கக்கூடாது. கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்வோருக்கு பார்ட்னருடன் பிரச்சினை ஏற்பட்டு,  கோர்ட் வழக்குவரை போகும். நல்ல செழிப்பான சூழ்நிலை இருக்கும். அது ஒரு  நிஜத் தோற்றம் இல்லை என்பதுபோல ஒரு பெரிய சரிவை சந்திக்க  நேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன்வேலை செய்யும் பெண்ணிடம் அளவுக்கு மீறி உறவாடி பெயரைக் கெடுத்துக்கொள்ள நேரும். குடும்ப கௌரவமும் இதனால் கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதையும் தெய்வவழிபாட்டின் மூலம் சரிபண்ணிக்கொள்ளலாம்.
[ இந்த புத்தாண்டுப் பலன்கள் உங்களுக்கு moonramkonam.com என்ற வெப்சைட்டிலிருந்து வ [ உங்கள் ழங்கப்படுகின்றது]
பலவித பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரும். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு பாதிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் யாருக்காவது வாக்குறுதி கொடுத்துவிட்டு தவிப்பீர்கள். மேலும் நாணயம் தவறுவதற்கான வாய்ப்பு தெரிகிறது. எதிர்பாராத வருமானம் கிடைத்தால்கூட கையில் காசு இல்லாமல் போகும். ஆனால், நீங்கள்  பெரும் குழப்பத்தில் தத்தளிப்பதால் கையில் காசு இல்லாத சமயத்தில் அவசியமான செலவுகளை விட்டுவிட்டு அனாவசியமான செலவுகளைசெய்வீர்கள். பிறகு அவசியத்துக்கு தவிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். உங்கள்  வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். தெய்வதரிசனம், சிலர் கோவில் கட்டுமானப் பணிகளிலும் தடை ஏற்படும். சிலருக்கு குலதெய்வ வழிபாடு விட்டுப்போகும். தான தரும காரியங்கள் செய்யமுடியாமல் தடை ஏற்படும். சிலருக்கு கல்வியில் தடைகள் ஏற்படும். சிலர் அவசிய செலவுகளுக்காக நகைகளையும் சொத்துக்களையும் அடகு வைப்பார்கள். ஞானிகள், சாதுக்கள், பெரியோர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும்  ஆளாக நேரும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். சிலருக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும் . மேலதிகரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வேண்டாத பணிமாற்றம் ஏற்படும். கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படலாம். அல்லது வேறு சிக்கல் உண்டாகலாம். சிலருக்கு புத்திரர்களின் போக்கு கவலையைக் கொடுக்கும். அவர்கள்து கல்வி மற்றும் முன்னேற்றம் தடைப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் தாமதமாகும். அவர்களுக்கான சுபகாரியங்கள் தடைப்படும். அவர்கள் பணிபுரியும் இடங்களில் தேவையற்ற பிரச்சினைகளும் ,மனக்கசப்பும் ஏற்படும். பிதுர் காரியங்கள் தள்ளிப்போகும். அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளால் தொல்லை ஏற்படும்.உங்கள்  அந்தஸ்து குறைந்து பாதிப்படையும்.
[ இந்த புத்தாண்டு பலன்கள் 'moonramkonam.com' என்ற வெப்சைட்டிலிருந்து வழங்கப்படுகின்றது.

]சனி பகவான், இந்த வருடம் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது மிகவும் கெட்ட பலன் தருவதாகும். இது அர்த்தாஷ்டம சனி என வழங்கப்படும். இச்சமயம் அரசாங்கத்தால் கெடுபிடியும் பகையும் ஏற்படும். கால்நடைகள் பாழாகும். முன் சேர்த்து வைத்த பணம் அழியும். வீட்டை, நாட்டை விட்டு எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டு, வெளியூர்களுக்கு செல்லவேண்டியது வரும். மாரக தசை நடந்தால், உயிருக்கும் கண்டம் ஏற்படலாம். வீடு போன்ற சொத்துக்களும் கை நழுவும். மனைவியுடன் பகையும், பிரிவும் ஏற்படும். பந்து ஜனங்களை விரோதம் பண்ணிக்கொள்ள நேரும்.  ஏதாவது துக்கத்தால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பர். வாத நோய், கீல்வாதம் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும். கால் இழுத்துக்கொண்டு, ஒரு கால் முடமாகவும் நேரலாம். நாய்க் கடித் தொல்லை, மாடு முட்டல் போன்ற இன்னல்களும் ஏற்படும். மனைவி மற்றும் உறவுப் பெண்களுக்கு நோய் காணும். மனைவி மற்றும் உறவுப் பெண்களுக்கு நோய் காணும். இவருக்கே கண்டம் தரித்திரம் மேலிடும். சுகம், சௌக்கியம், தூக்கம் எல்லாம் கெடும். மனம் எப்பொழுதும் கெட்டதையே எண்ணிக் கொண்டிருக்கும்.  மனம் எப்பொழுதும் கெட்டதையே எண்ணிக் கொண்டிருக்கும். மானம், மரியாதை கௌரவம் எல்லாம் பறிபோகும். நிழலுக்கு ஒதுங்கக்கூட இடமின்றி வீடு வாசலின்றி , இவர் அலையலாம். எதிலும் பயமும் தயக்கமும்  ஏற்படும். வாழ்க்கையின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டு , அங்கேயே  தவிக்க வேண்டியது வரும்.பகைவரும் வேண்டாதவர்களாலும் மிகுதியான தொல்லை ஏற்படலாம். தனக்கு எப்பொழுதும் கெட்டதே நேரும் என்ற உள்ளுணர்வும் இருந்துகொண்டே இருக்கும். குதர்க்க புத்தியும் , கெட்ட சிந்தையும் இருந்துகொண்டே இருக்கும். ஆக, இந்த சனி, மிகுதியான கெடு பலன்களையே தரும்.  பெண்களுக்கு இதுவரை யோக பலன்களாக நடந்து வந்தது. அதற்குக் காரணம் உங்களுக்கு ந்டைபெற்று வரும் சனியின் மூன்றாமிட சஞ்சாரம்தான். ஆனால், இப்போது ஏற்படப் போகும் சனிப் பெயர்ச்சியால், சனி பகவான் உங்கள் 4-ம் வீட்டில் பிரவேசிப்பதால், உங்களுக்கு இதுவரை கிடைத்துவந்த நற்பலன்கள் யாவும் தடைப்பட்டுப் போகும். பொதுவாகவே உங்களுக்கு இத்தகைய சனியின் பாதிப்பு, சனியின் மாற்றத்தின் மூலம் ஏற்பட்டதுமே, பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்ட ஆரம்பிக்கும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

பரிகாரம்:

உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தில்  ஒரு முறை  மிருத்யஞ்ச்சய  ஹோமமோ அல்லது ஆயுஷ் ஹோமமோ செய்யுங்கள். ஆதித்ய ஹிருத்யம்  தினமும் பாராயணம் செய்யவும். கோதுமை தானம் செய்யவும்.  சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும். ஆண்டின் பிற்பகுதியில், குருவின் சஞ்சாரம் சரியில்லாததால வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்த்திக்கு மஞ்சள் மலர் மாலையும் கொண்டக்கடலை மாலையும் அணிவித்து வழிபடவும்.  உங்கள் முன்னோர்களுக்கான நியமங்களையும் காரியங்களையும் தடைப்படாமல் நிறைவேற்றவும்.

வாழ்க பல்லாண்டு!சிறக்கட்டும் புத்தாண்டு!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

***************************************************

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>