/* ]]> */
Dec 282016
 

புத்தாண்டு பலன் 2017:

%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81

கடகம்:

கடகம் ராசி

கடகம் ராசி

 இந்த 2017ம் புத்தாண்டில்  சனி உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திலும், குரு  ஆகஸ்டு மாதம் வரை உங்கள் ராசிக்கு 3–ம் இடத்திலும் 2016 ஆகஸ்டு  மாதம்  முதல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.

[ இந்த புத்தாண்டு பலன்கள் உங்களுக்கு moonramkonam.com என்ற வெப்சைட்டிலிருந்து வழங்கப்படுகின்றது]

தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ராசிக்கு 5-ல் சனி வரும்போது, சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படுகின்றது. புத்தி சரியாகச் செயல்படாமல், தகுந்த முடிவு எதுவும் எடுக்க முடியாமல், சில முக்கிய திட்டங்கள் நிறைவேறாமல் பாழாகும். ஏதாவது விபத்து முதலியவற்றால், அங்கஹீனம் ஏற்படும். பணம் கரையும். வறுமை மேலிடும். ஏதாவது இழிசெயல் செய்தாவது பிழைக்க நேரிடும். மனக் கலக்கமும் ஏற்படும். நடத்தை கெட்ட பெண்களின் உறவால், பொருளும் பணமும் கெடும். பலருடன் பலவகைச் சண்டைகளில் ஈடுபட நேரிடும். அன்றாடச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் அவதிப்படலாம். எந்த ஸ்திரமான உருப்படியான காரியமும் நிறைவேறாது. குழந்தைகள் யாருக்காவது மாரகம் ஏற்படலாம். பந்து ஜனங்களைப் பகைத்துக்கொள்வர். குழந்தை குட்டிகளை விட்டுப் பிரிவார். சோகம் , புத்திரஹானி போன்றவை ஏற்படலாம். எனவே எல்லா வகையிலும் சனி அசுப பலனையே தருகிறார். அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரையில் இருந்துவந்த அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு உங்களுக்கு அடியோடு விலகுகிறது. இதுவரை உங்கள் அரசியல் வாழ்வில் பெரிய அளவில் உங்களால் சாதிக்க முடியவில்லை. மேலும் உங்களின் வெளிவட்டார உறவுகளும், இதுநாள்வரை திருப்திகரமாகவும் மதிப்புடனும் இல்லை. உறவினர்கள் மத்தியில் கூட நீங்கள் பிறருக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாலும், நல்ல பெயரோ அல்லது பாராட்டோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு இதுவரை கஷ்டப்பட்டீர்கள். இந்த அவல நிலை இப்போது அடியோடு மாறுகிறது. முன்பு உங்களை உதாசீனம் செய்தவர்கள் இப்போது உங்களை சுற்றிச் சுற்றி வந்து உங்களுக்கு புகழாரம் சூட்டுவார்கள். உங்கள் திறமையையும் ஆற்றலையும் பலவாறு புகழ்வார்கள். அதன்பிறகு ஓராண்டு காலம் சிற்சில அவலநிலைக்கு நீங்கள் ஆளாக நேரிடும். மேலும் சனியின் 10-மிட பார்வை தன ஸ்தானத்தில் விழுவதால், இந்த சனியின் 5-மிட மாற்றம் உங்களின் முன்னேற்றம் அல்லது சாதனைக்கு வழிவகுக்குமேயன்றி உங்களின் பொருளாதார மற்றும் தன நிலையில் பெரிய அளவில் மாற்றங்களையோ அல்லது ஏற்றங்களையோ ஏறப்டுத்தாது. இருப்பினும் அடுத்த ஆண்டு  (2015-ம் ஆண்டு பிற்பகுதியில்) உங்களின் தன நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என்பது உறுதி. மாணவர்களுக்கு இந்த 5-மிட சனியின் பெயர்ச்சியால், உங்களது கல்வி நிலையில் ஓரளவு மாற்றம் அல்லது ஏற்றம் ஏற்படும். இதுவரை அர்த்தாஷ்டம சனியின் சஞ்சாரம் உங்கள் கல்வியின் அதிர்ஷ்ட வாய்ப்புக்கு தடை ஏற்படுத்தி வந்தது. பெற்றோர்கள்  ஆசிரியர்கள் , மற்றும் உறவினர்களின் அவச் சொல்லுக்கும் அறிவுரைக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஆனால் அந்நிலை தற்போது அடியோடு மாறுகிறது. கல்வியில் ஓரளவு ஆர்வமும் செயல்திறனும் உங்களுக்கு அதிகரிக்கும். கல்வியில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாதிக்குமேல் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். அதற்கு 1-மிடத்தில் இருக்கும் குருபார்வை 5 -மிடத்தில் உள்ள சனியின் மீது விழுவதால், 3-மிடத்தில் இருக்கும் ராகுவின் சாதகமான சஞ்சாரமும் பெரிதும் துணை புரியும்,. அடுத்த ஆண்டு அதாவது 2015 -ம் ஆண்டு பிறப்குதியில் ஏற்படப்போகும் குருவின் 2-மிட மாற்றத்திற்குப் பின் இந்த 5-மிட சனியின் பாதிப்புகள் குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் செயல்திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும். நீங்கள் தவறாமல் தொடர்ந்து பாடுபட்டால், உங்களின் இலக்கில் வெற்றி பெறுவது உறுதி. பெண்களின் நியாயமான ஆசைகளும் கோரிக்கைகளும் இந்த 5-மிட சனியின் தடைகளை சந்தித்தபிறகே ஓரளவுக்கு வெற்றி பெறும். உங்களின் பேச்சுக்கும் சொல்லுக்கும் நாள்பட்டே மதிப்பு மரியாதை கிடைக்கும். வீடு நிலம் மற்றும் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கையும் மிகவும் தாமதமாக அடுத்த ஆண்டு பாதிக்கு மேல் கைகூடும். அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு வேண்டிய இடமாற்றம் மற்றும் சம்பள் உயர்வு போன்றவை சற்று தாமதப்பட்டு கிடைக்கப்பெறும். லாபஸ்தானமான 11-ம் இடத்துக்கு சனியின் 7ம் பார்வை ஏற்படுவதும் களத்திர ஸ்தானத்துக்கு சனியின் மூன்றாம் பார்வை ஏற்படுவதும் நல்லதல்ல. உங்களது கணவருக்கும் உங்களுக்கும் இடையேயான அந்நியோந்நியம் குறைந்து குடும்பத்தில் அமைதியைப் பறிக்கும். புகுந்த வீட்டினரின் பாராட்டைப் பெறுவது சற்று கடினம். அதேபோல அவர்கள் மூலமாக உங்களுக்கு நடக்க இருக்கும் நல்ல விஷயங்கள் தாமதப்பட அலல்து மறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் மூலமாக சொத்து சேர்க்கை, பண வரவு போன்றவை நிகழ இந்த 5-மிட சனி தடையை ஏறப்டுத்தும். மேலும் 5-மிடமான புத்திர ஸ்தானத்தில் சனி பகவான் வீற்றிருப்பது உங்கள் பிள்ளைகளின் கல்வியில் ஆர்வக் குறைவு அல்லது அவர்களின் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டு விலகும். மேலும் சனிபகவானின் 10-ம் பார்வை குடும்ப ஸ்தானமான 2-ம் இடத்தில் விழுவதால், உங்களுக்கும் கணவருக்குமிடையே சன்டை சச்சரவு ஏற்படும். மொத்தத்தில் இந்த 5-மிட சனி பாதிப்புகளையே அதிகம் கொடுக்கும்.

[ இந்த  புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

இந்த வருடம் ஆகஸ்டு  மாதம் வரை  குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அந்த சஞ்சாரம் நல்லது என்று சொல்ல முடியாது.  எந்த செயலைச் செய்தாலும் குறுக்கீடும் அதனால் மனம் தளர்வதுமான சூழ்நிலையும் ஏற்படும். பணவரவைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொது இடங்களில் அதிகம் பேசி பிரச்சினையை வரவழைத்துக்கொள்வீர்கள். சகோதரர்கள் உதவுவதாக எண்ணி சிரம நிலையை உருவாக்கி விடுவார்கள். எக்காரணம் கொண்டும், விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்களை  பிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தின் தேவைகளை நிறவேற்ற அவ்வப்போது கடன் வாங்குவீர்கள். மாற்றுகுணம் உள்ளவர்களால் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அடிக்கடி கடின அலைச்சல் மிக்க பயணம் ஏற்படும். ரியல் எஸ்டேட் , நிதிநிறுவனம், கல்வி நிறுவனம் ட்ரேவல்ஸ், லாட்ஜ், ஹோட்டல்ஸ்,டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆட்டோமொபைல், மின்சார-மின்னணு சாதனங்கள , ஃபர்னிச்சர், தோல் பொருள் உற்பத்தி  முதலிய தொழில்களில் ஈடுபட்டவர்கள் பின்தங்கிய நிலை காண்பர். மற்ற தொழில் செய்பவர்களுக்கும் சுமாரான நிலையே இருக்கும். வாகன வகையில் அதிகம் செலவாகும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் குளறுபடிகளை எதிர்கொள்வர். பெண்களுக்கு பணியில் கவனமின்மையால் அவப்பெயர் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான விஷ்யங்களில் தாமதம் ஆகும். அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசி சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். உங்களின் சிரமங்களைக் ககண்டு எதிரிகள் பரிகாசம் செய்வர். பொறுப்புகளை சரிவர நிறவேற்றாததால், நீங்கள் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவீர்கள். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். விவசாயிகள் நிலம் சம்பந்தமான பத்திரங்களையும் , ஆவணங்களையும்  பிறரை நம்பி ஒப்படைக்கக்கூடாது. கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்வோருக்கு பார்ட்னருடன் பிரச்சினை ஏற்பட்டு,  கோர்ட் வழக்குவரை போகும். நல்ல செழிப்பான சூழ்நிலை இருக்கும். அது ஒரு  நிஜத் தோற்றம் இல்லை என்பதுபோல ஒரு பெரிய சரிவை சந்திக்க  நேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன்வேலை செய்யும் பெண்ணிடம் அளவுக்கு மீறி உறவாடி பெயரைக் கெடுத்துக்கொள்ள நேரும். குடும்ப கௌரவமும் இதனால் கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதையும் தெய்வவழிபாட்டின் மூலம் சரிபண்ணிக்கொள்ளலாம்.

[ இந்த புத்தாண்டுப் பலன்கள் உங்களுக்கு moonramkonam.com என்ற வெப்சைட்டிலிருந்து வ ழங்கப்படுகின்றது]
பலவித பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரும். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு பாதிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் யாருக்காவது வாக்குறுதி கொடுத்துவிட்டு தவிப்பீர்கள். மேலும் நாணயம் தவறுவதற்கான வாய்ப்பு தெரிகிறது. எதிர்பாராத வருமானம் கிடைத்தால்கூட கையில் காசு இல்லாமல் போகும். ஆனால், நீங்கள்  பெரும் குழப்பத்தில் தத்தளிப்பதால் கையில் காசு இல்லாத சமயத்தில் அவசியமான செலவுகளை விட்டுவிட்டு அனாவசியமான செலவுகளைசெய்வீர்கள். பிறகு அவசியத்துக்கு தவிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். உங்கள்  வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். தெய்வதரிசனம், சிலர் கோவில் கட்டுமானப் பணிகளிலும் தடை ஏற்படும். சிலருக்கு குலதெய்வ வழிபாடு விட்டுப்போகும். தான தரும காரியங்கள் செய்யமுடியாமல் தடை ஏற்படும். சிலருக்கு கல்வியில் தடைகள் ஏற்படும். சிலர் அவசிய செலவுகளுக்காக நகைகளையும் சொத்துக்களையும் அடகு வைப்பார்கள். ஞானிகள், சாதுக்கள், பெரியோர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும்  ஆளாக நேரும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். சிலருக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும் . மேலதிகரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வேண்டாத பணிமாற்றம் ஏற்படும். கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படலாம். அல்லது வேறு சிக்கல் உண்டாகலாம். சிலருக்கு புத்திரர்களின் போக்கு கவலையைக் கொடுக்கும். அவர்கள்து கல்வி மற்றும் முன்னேற்றம் தடைப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் தாமதமாகும். அவர்களுக்கான சுபகாரியங்கள் தடைப்படும். அவர்கள் பணிபுரியும் இடங்களில் தேவையற்ற பிரச்சினைகளும் ,மனக்கசப்பும் ஏற்படும். பிதுர் காரியங்கள் தள்ளிப்போகும். அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளால் தொல்லை ஏற்படும்.உங்கள்  அந்தஸ்து குறைந்து பாதிப்படையும்.
2017 ஆகஸ்டு மாதத்துக்குப் பின், குருவின் 4 மிட சஞ்சாரம் சரியில்லை என்பதால், இந்த சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழிலில் பார்ட்னர் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.
[ இந்த புத்தாண்டுப் பலன்கள் உங்களுக்கு moonramkonam.com என்ற வெப்சைட்டிலிருந்து வழங்கப்படுகின்றது
பரிகாரம்:
குருவின் சஞ்சாரங்கள்  நல்ல சஞ்சாரமல்ல. எனவே வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி  கோவிலுக்குச்  சென்று கொண்டக்கடலை மாலையும் ,மஞ்சள் நிற மாலையும் சாத்தி வழிபடவும். கேது சஞ்சாரமும் சரியில்லாததால்,  வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்து ,வினாயகரை வழிபடவும். கொள்ளுதானம் செய்யவும். வெள்ளிக் கிழமைகளில், மகாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வழிபடவும். சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
*********************************************

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>