/* ]]> */
Mar 302013
 

2013 ஏப்ரல் மாத பலன் | ராசி பலன் 12 ராசிகளுக்கும் | மாத ராசி பலன்கள்

Monthly-Forecast-month-rasi-palan மாத ராசி பலன்

Monthly-Forecast-month-rasi-palan மாத ராசி பலன்

2013 ஏப்ரல் மாத ராசி பலன்:

 

மேஷம்:
இந்த மாதம் உங்கள் பிள்ளைகளினால் உங்கள் மதிப்பு உயரும். பிள்ளைகளைப் பற்றிய நலல் செய்திகள் உங்களை வந்தடையும். பிள்ளைகள் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். அவர்களினால், ஆதாயம் கிடைக்கும்.  சிலர் ஆன்மீகத் தொண்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். மனதில் குடிகொண்டிருந்த வீண் பிரச்சினைகள் அகலும். இளைய சகோதரர்களால் ஆதாயமும் அனுகூலமான பலன்களும் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் தனிக்குடித்தனம் செல்லும் அளவுக்கு பிரச்சினை உண்டாகும். விட்டுப் பிரிந்த நண்பர்கள் மீண்டும் உங்களை வந்து சேருவார்கள். கணவன்-மனைக்கிடையே அன்யோன்யம் வளரும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தொடரும். பொதுப் பிரச்சினைகலிலிருந்து சற்று விலகி இருப்பது நல்லது. தந்தையின் உடல்நலம் தேறும். தொழில், வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். அதிக பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுப விரயங்களுடன் வீண் விரயங்களும் உண்டு. குடும்பத்துக்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
பெண்கள் தாய்வழி உறவுகளால் ஆதாயம் பெறுவீர்கள். நண்பர்கன் உதவிகள் அதிகம் கிடைக்கும்.
மாணவர்கள் படிப்பில் எதிர்பார்த்த இலக்கை அடைய சற்று கூடுதல் முயற்சிகள் தேவைப்படும்.

ரிஷபம்:
இந்த மாதம் சற்று மனக் குழப்பங்கள் காணப்படுவதால், செய்யும் காரியங்களில் தடுமாற்றம் காணப்படும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். தங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். இளைய சகோதரர்களிடம் சற்று அணுசரனையாகச் செல்வது நல்லது. தாயின் பேச்சை மதித்து நடப்பீகள் பிள்ளைகள் முன்னேற்றம் பெறுவார்கள். இருப்பினும் அவர்கலின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் சற்று தாமதம் ஏற்படும். டான்ஸில் ,ஆஸ்த்துமா போன்ற நோய்கள் தொல்லைதரும். நண்பர்களிடம் அளவுக்கு மீறி நம்பிக்கை வைத்து கொஞ்சம் ஏமாற்றம் அடைய நேரும். கணவன்-மனைவியைடையே பிடிவாதங்களைத் தவிர்த்தால் அன்யோன்யம் வளரும். தந்தை வழிச் சொத்தில் இருந்த பிரச்சினை விலகி அதன்மூலம் நல்ல பலனை அடைவீர்கள்.  சிலருக்கு உடன் இருந்துவந்த மூத்தசகோதரர் பிரிந்துசெல்ல நேரும். சிலருக்கு தொழில் மாற்றங்கள் ஏற்படலாம். குடும்பத்தின் பெருமை சிறந்து விளங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.
பெண்கள் தங்களின் பேச்சுத் திறமையினால், மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவார்கள். தாய்வழி உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
         மாணவர்கள் ஞாபகமறதியினால் இலக்கை அடைய முடியாமல் தவிப்பார்கள். படிப்பில் . இன்னும் அதிகமான ஈடுபாடு காட்டவேண்டியிருக்கும்.

மிதுனம் :
உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிக சந்தோஷம் உண்டாகும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால், மற்றவர் முன்னிலையில் கம்பீரமாகவும் உற்சாகமாகவும் வலம் வருவீர்கள். ஆனால் நாவடக்கம் கட்டாயம் தேவை. பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் தலையிட்டு அதை ஒரு நல்ல முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.  பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை சாமர்த்தியமாகத் தீர்ப்பீர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி முக்கிய முடிவுகளை மேற்கொள்வீர்கள். பழைய கடன்கள் தீரும். புதிய கடன்களும் கிடைக்கப் பெறுவீகள். மறைமுக எதிரிகளின் பலம் குறையும். கணவன் மனைவி உறவு வளரும். மனைவி வழி உறவுகளால், தங்களின் தொழிலுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தையின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். சிலர் மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்குவார்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணம் மேற்கொள்வார்கள். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். குடும்பத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு இருந்துவந்த மனக் குழப்பங்கள் தீரும். பணியில் இருப்பவர்கள் நன்மதிப்பைப் பெறுவார்கள்..
     மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

கடகம்:
இந்த மாதம் வரவுகளுக்கு ஏற்ப செலவுகள் காத்துக்கொண்டிருக்கும். சற்று மனக் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது கடினம். தாயின் பேச்சுக்கு அதிக மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். அவர்களுக்கு திடீர் மருத்துவச் செலவுகள் வந்து விலகும். கடன்களை பைசல் செய்வதற்குண்டான வழிவகைகள் புலப்படாமல் தடுமாறுவீர்கள். சில சமயம் அவர்களால் உங்கல் சேமிப்பு கரையலாம். புது வாகனம் வாங்கும் முயற்சியைத் தள்ளி வைப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வீண் பேச்சுகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். தகப்பனார் மூலம் ஒரு சில பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டி வரும். கொடுத்த கடன்கள் அதிக அலைச்சலின் பேரில் வசூலாகும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். குடும்பத்தில் சுப விரயங்கள் அதிகம் உண்டு. வீண்விரயங்களும் இல்லாமல் போகாது.
பெண்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும்.
மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி தேர்வில் முன்னிலை பெறுவீர்கள்.

சிம்மம்:
இந்த மாதம் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பிறரை எதிர்பார்க்காமல் செயலில் இறங்குவீர்கள். பண வரவுகளுக்கு குறைவிருக்காது. இளைய சகோதரர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் பிள்ளைகளுக்காக மருத்துவச் செலவை மேற்கொள்ளவேண்டியிருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். கணவன்-மனைக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. தகப்பனாரின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த நினைத்தால், அனுபவப்பட்டவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் செயல்பட்டால், சிக்கல் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிலர் ஆன்மீகத் தொண்டில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் உண்டு. சுப விரயங்களும் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினர் விருந்து கேளிக்கை என்று சென்று வருவீர்கள்.
பெண்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிப்பீர்கள் . தங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்.
  மாணவர்கள் படிப்பில் அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிவரும். ஆசிரியர்களின் அறிவுரைப்படி செயல்படுவீர்கள்.

கன்னி:
விரயச் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.தைரியம் தன்னம்பிக்கை உயரும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வண்டி வாகனச் சேர்க்கை உண்டாகும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பார்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் முன்னேற்றம் பெறுவார்கள். பழைய கடன்களை தீர்த்து விடுவீர்கள். புதிய கடன்களை வளரவிடாமல் தடுக்கும் முயற்சி மேற்கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் பெருகும். நண்பர்களிடமிருந்து உதவிகளும் ஆலோசனைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு தொழில் மாற்றங்களும் தொழில் புரியும் ஸ்தாபனம் மாறவேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும். பணியாட்களிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தால், அவர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் செய்துகொண்டிருக்கும் தொழிலுடன் புதிதாக ஒரு தொழிலையும் சேர்த்துச் செய்வார்கள். இரண்டிலும் லாபம் காணும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சுபச்செலவு பெருகும் . குடும்பத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.
பெண்களின் ஆசைகள் நிறைவேறும். உங்கள் முயற்சியினால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
குடும்பச் சேமிப்பும் உயரும்.
           மாணவர்கள் நணப்ர்களின் ஒத்துழைப்பை சரியாக உபயோகித்துக்கொண்டு,படிப்பில் முதலிடம் வகிப்பார்கள்.

துலாம்:
இந்த மாதம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தங்களின் உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சைக் குறைத்து செயலில் விவேகம் காட்டுவது ந்ல்லது. பிறருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் சிரமப்படுவீர்கள். சிலர் கடன் பெற்று விருபப்பட்ட வண்டி வாகனம் வாங்குவார்கள். வீடு, மனை போன்றவற்றைப் புதுப்பித்தலில் கொஞ்சம்  கடன்பெற நேரும் . சிலருக்கு திடீர் அதிர்ஷ்டங்களும் பணவரவுகளும் கிடைக்கும். கணவன்-மனைவி அன்பு அதிகரிக்கும். சிலர் தொலை தூர புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவார்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது ஏற்ற தருணம் அல்ல. கொஞ்ச காலம் பொறுத்திருக்கலாம். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பணிமாற்றம் செய்யலாமா என்ற எண்ணங்கள் மேலோங்கும். பணியில் இருப்பவர்கள் பிரச்சினைகளுக்கிடையே பணியைத் தொடர வேண்டியது அவசியம். குடும்பத்தில் மன நிம்மதி குறையும். தங்களின் சாமர்த்தியம் கை கொடுபதால் அத்தனையும் சரியாகும்.
பெண்கள் ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது. பணியில் இருப்பவர்களுக்கு விரும்பிய  இட மாற்றம் ஏற்படும்.
மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.

விருச்சிகம்:
இந்த மாதம் வீண் அலைச்சல்களை மேற்கொண்டால்தான் காரிய வெற்றி கிடைக்கும். பண வரவுகளும் சரளமாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. சில சமயங்களில் உங்கள் பேச்சுக்களே   உங்களுக்கு பிரச்சினையைக் கொடுக்கும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.. தாயின் பேச்சுக்கு அதிக மதிப்பளிப்பீர்கள். அதனால், தாயின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். தாயின் உடல் நலனில் அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் போக்கில் சென்று அவர்களை உங்கல் வழிக்குக் கொண்டு வருவீர்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். எதிரிகளை இனம் கண்டு அவர்களை விட்டு விலகிவிடுவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். மனதில் வீண்குழப்பங்கள் உண்டாகும். கணவன்-மனைவி அன்புக்குக் குறைவிருக்காது.  தகப்பனாரின் ஒத்துழைப்பும் அன்பும் அதிகம் கிடைக்கும். சிலருக்கு தந்தையின் தொழிலையும் சேர்த்துக் கவனிக்கும் யோகம் உண்டாகும். தொழில் வழிப் பயணங்கள் செல்வீர்கள்.  வெளியூர்ப் பயணங்கள் அனுகூலமானதாக இருக்கும். .குடும்பத்தில் சுப விரயங்கள் உண்டு. குடும்ப மகிச்சி பெருகும்.
பெண்களுக்கு தாய் மாமன் வழி உறவுகளால் உதவி உண்டு. வீண் மனக் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.
மாணவர்களுக்கு படிப்பில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். கடின முயற்சி அவசியம்.

தனுசு:
இந்த மாதம் மனதில் வீண் குழப்பங்கள் வந்து அகலும். கொடுக்கல் வாங்கலில் இருந்த மந்தநிலை மாறி, பண வரவுகள் தாராளமாக இருக்கும். தீர்க்க முடியாத பிரச்சினைகளைக்கூட உங்கள் பேச்சு சாதுர்யத்தால் முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். இளைய சகோதரர்களால் சில பிரச்சினைகள் வரலாம். அதனால், அவர்களிடம் அணுசரனையாக நடந்துகொள்வது நல்லது. தாயின் உடல் நலனில் அக்கறை அவசியம். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை இனிதே நிறைவேற்றி வைப்பீர்கள். பிள்ளைகளினால் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிதாக விலை உயர்ந்த வாகனம் வாங்குவீர்கள். கடன்களைக் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். சிலர் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்ய முனைவீர்கள். கணவன்-மனைவியிடையே அன்பும் அன்யோன்யமும் வளரும். நண்பர்களின் வட்டம் பெருகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தந்தை மூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு கடல் கடந்து சென்று வரும் யோகம் உண்டு. வெளியூர்ப் பயணம் இனிய செய்திகளைக் கொண்டு வரும். குடும்பத்தின் மதிப்பும் மரியாதையும் உயரும். நண்பர்களின் வருகையால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
பெண்களின் ஆசைகள் நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு  நல்ல வரன் கிடைத்து  திருமணம் நடக்கும்.
மாணவர்கள் படிப்பில் சற்று தடுமாற்றங்கள் ஏற்பட்டு விலகும்.

மகரம்:
இந்த மாதம் நீங்கள் பணிபுரியும் இடங்களில் வீண் பேச்சுக்களினால் ஒரு சில பிரச்சினைகள் தோன்றும். இருந்தாலும் பிரச்சினைகளை எளிதாக சமாளித்து விடுவீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். இளைய சகோதரர்களின் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். சிலர் புதிய வண்டி, நிலம், வீடு வாங்கும் முயற்சியில் கடன்பட நேரும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன் எளிதாகக் கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் தெரியும். பிள்ளைகள் மேற்கொள்ளும் சில முடிவுகளினால், நீங்கள் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். கணவன்-மனைக்கிடையே வீண் விவாதங்களினால், மனக்கசப்பு ஏற்படும். தகப்பனாரின் ஆலோசனைகளும் ஆதரவும் இருக்கும். பணியில் இருப்பவர்கள் அலுவலகப் பணியில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டால்தான், மேலதிகாரிகளின் கடுஞ்சொற்களிலிருந்து தப்பிக்கலாம். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப் பளுவும் பொறுப்புகளும் அதிகரிக்கும். ஓய்வு கிடைப்பதே அரிதாக இருக்கும். மிகவும் பொறுமையுடன் செயல்படவேண்டும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தினருடன் உல்லாச சுற்றுலா சென்று வருவீர்கள்.
பெண்கள் தங்கள் முயற்சியினால், குடும்பத்தின் சேமிப்பை உயர்த்துவார்கள். பெரியவர்களின் மனமறிந்து செயல்பட்டு அவர்களின் நன்மதிப்பைப் பெறுவார்கள்.
மாணவர்கள் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே தேர்வுகளைச் சந்திக்க இயலும்.

கும்பம்:
இந்த மாதம் உங்கள் தொழில் வளர்ச்சியில் முழுக் கவனத்தைச் செலுத்துவீர்கள். வருமானங்கள் அதிகரித்தாலும், அதற்கேற்ப செலவுகளும் காத்துக்கொண்டிருக்கும். பிறருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அதிக கஷ்டப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் இளைய சகோதரர்களினால் ஒரு முடிவுக்கு வரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துக்களினால் நல்ல லாபம் கிடைக்கும். கடன்களைக் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். தக்க சமயத்தில் பிள்ளைகளின் வருமானம் உதவியாக இருக்கும். பிள்ளைகள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக  இருப்பார்கள். மனைவியும் , மனைவி வழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். பொதுப் பிரச்சினைகளிலிருந்து சற்று தூர விலகி இருப்பது நலல்து. திடீர் வெளியூர்ப் பயணங்களும், அதன் மூலம் வருமானமும் கிடைக்கப் பெறுவீர்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டையும் அன்பையும் பெறுவார்கள். உங்களுடைய உழைப்பினால், நீங்கள் வேலை செய்யும் ஸ்தாபனத்தின் நிலை உயரும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகமாகும். அனைவரையும் அனுசரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்
பெண்களுக்கு மனதில் வீண்பயங்களும் தேவையற்ற குழப்பங்களும் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமையும் பொறுப்புகளும் கூடும்.
மாணவர்களுக்கு முயற்சிக்குண்டான பலன் கிடைக்கும். கல்வி நிறுவனத்தின் வெகுமதியும், ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.

மீனம் :
இந்த மாதம் தந்தையுடன் மன வருத்தம் ஏற்பட்டு அகலும். மனக் குழப்பங்களும் ஏற்பட்டு  வாட்டும். திரும்பி வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய வண்டி வாகனச் சேர்க்கை  உண்டாகும். புதிதாக வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.பிள்ளைகளின் போக்கில் மாறுதல் தென்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக எடுக்கும் முடிவுகளும், அவர்களின் சுபகாரியங்களுக்காக எடுக்கும் முடிவுகளிலும் தொய்வு நிலை ஏற்படும். கடன்களின் மூலம் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும். தந்தை வழிச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர சற்றுப் பொறுத்திருக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் பாதிப்புகள் தாகக்லாம். சிலருக்கு ஆபரேஷன் செய்ய நேரும். சிலர் தொழில் விஷயமாக வெளியூரில் தங்க வேண்டியிருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பில்லை.  குடும்பத்தில் குழப்பநிலை நீடிக்கும். நீங்கள்  ஒவ்வொருவர் மனநிலைக்கும் ஏற்ப செயல்பட்டு அனுசரித்துப் போக நேரும்.
பெண்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த்வேண்டியது அவசியம். மனக் குழபப்ங்களையும் பயத்தையும் தவிர்ப்பது நலம்.
மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.
                     —————————–

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>