/* ]]> */
Dec 302011
 

2012 ராசி பலன் – அனைத்து ராசிக்கும் ஆண்டு பலன் -

2012 எப்படி?

2012 ஆண்டு பலன்  andu rasi palan

2012 ஆண்டு பலன்

எப்படி இருக்கும், 2012? உங்கள் ராசி பலன் எப்படி இருக்கும்?

இந்தப் புத்தாண்டு, வருகிற டிஸம்பர் 31-ம் தேதி நள்ளிரவு பிறக்கிறது. நமக்கு நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? தற்போதைய நிலவரம் என்ன? எதிர்காலம் எப்படி இருக்கும்?; என்னென்ன தடைகள் வரும்? என்று இந்த ராசிபலனைப் பார்த்து முடிவு பண்ண ரெடியாகலாம். . இந்தப் புத்தாண்டில் எண்ணியபடி எல்லாம் நடக்குமா என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அது மட்டுமின்றி தடையும் தடங்கல்களும் ஏற்படுமானால் அவற்றை எதிர்த்துப் போராட என்னென்ன எச்சரிக்கைகள் தேவை என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்வண்ணம் இந்தப் புத்தாண்டுப் பலன்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

இந்தப் புத்தாண்டில் குருபகவான் ஆண்டின் நடுவில் அதாவது மே மாதம் 17-ம் தேதி யன்று மேஷத்திலிருந்து ரிஷபத்துக்கு பெயற்சியாகிறார். எனவே குருபலன்களை மாத முற்பகுதியில் ஒருவிதமாகவும் மாத பிற்பகுதியில் வேறு விதமாகவும் இருக்கும்.

சனிபகவான் டிஸம்பர் 21-ம் தேதி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயற்சியாகிறார். அதுபோல ராகு –கேதுக்களின் சஞ்சார விபரங்களும் தரப்பட்டிருக்கின்றன. இதன்பிரகாரம், ஒரு கிரகம் அனுகூல பலன்களைத் தந்தாலும், இன்னொரு கிரகம் அனுகூலமற்று காணப்படுவது இயற்கையே. .

பொதுவாக குரு மற்ற கிரகங்களை எப்போதுமே முன்னடத்திச் செல்லும் ஒரு கிரகமாகும். குரு உங்களுக்கு சாதகமாக இருக்கும்போது மற்ற கிரகங்கள் அனுகூலமற்ற நிலையில் இருந்தாலும், கெடுபலன்கள் உங்களை அணுகாது. ஏனென்றால் குரு அரணாக நின்ற உங்களைக் காப்பாற்றிவிடும். ஆனால், குருவின் சாதகமற்ற நிலையில்தான், மற்ற கிரகங்களின் பலன்கள் உங்களைப் பாதிக்கும். எனவே குருவின் சஞ்சாரத்தை வைத்து கிட்டத்தட்ட நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம். மேலும், இரண்டரை வருடம் சனியின் பாதிப்புக்கு ஆளாக வேண்டுமே என்ற அச்சம் தேவையில்லை. இடையிடையே ஒரு வருடம் குரு வந்துபோவது ஒரு ஆறுதலாக அமையும். இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த சனி உச்சம் பெற்று துலாத்தில் சஞ்சரிப்பதால், இந்த சஞ்சாரம் துலா ராசிக்காரர்களுக்கு மட்டுமின்றி மரற்றவர்களுக்கும்கூட அதிகமான பாதிப்புகளைக் கொடுக்காது.

மேலும், சனி வருகிற 26.3.2012 முதல் 10.9.2012 வரை வக்கிரம் பெற்று துலாத்திலிருந்து கன்னி ராசிக்குப் போகிறார். இந்த வக்கிர காலத்தில் எல்லா ராசிக்காரர்களுக்கும், முன்பு கன்னி ராசியில் சனி இருந்தபோது என்ன பலன்களை தந்தாரோ அந்த பலன்களே இப்போது நிகழும்.

கிரகங்கள் தங்கள் பாதையில் சுழல்கின்றன. நமக்கு கெடுதல் செய்யவேண்டும் என்பது அவைகளின் நோக்கமல்ல. நாம் சரியான வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்துவந்தால், எந்த கெடுபலனும் நம்மை அண்டாது. தினந்தோறும், கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களைச் சொல்லி வந்தால், எல்லா கஷ்டங்களும் பறந்தோடும். :

அனைத்து கிரக பீடைகளையும் நீக்க குரு மந்திரம்:

ப்ரகஸ்பதே அதிய தர்மோஅர்ஹாத்யும் த்விடாதிக்ரது

மஞ்சனேஷு யர்தீதய ச்சவஸர்த ப்ரஜாத்

ததஸ்மாஸு த்ரவிணம் தேஹிசித்ரம் ஸ்வாஹா.

சனி பகவான் மந்திரம்:

சாயாத் மஜாய வித்மஹே நீல வர்ணாய தீமஹி

தன்னோ ஸௌரி ப்ரஜோதயத்.

ராகு காயத்ரி:

நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ ராஹூ: ப்ரசோதயாத்

கேது காயத்ரி:

அஸ்வ த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ: கேது:ப்ரசோதயாத்

மேலே கூறப்பட்ட மந்திரங்களை உங்கள் தினப்படி அலுவல்களுக்கிடையே நேரத்தை ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினப்படி பாராயணம் செய்து வந்தால் கஷ்டங்கள் விலகி நிம்மதி கிடைக்கும்.

ஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன்கள் பொதுவாகக் கூறப்படிருக்கின்றன. இன்னும் விரிவாகதெரிந்துகொள்ள அவரவர் சுய ஜாதகத்தை தங்கள் ஜோதிடரிடம் காட்டி, அதற்கேற்றவாறு கணித்துக்கொள்ளலாம். நீங்கள் முன்னேற்பாட்டுடன் செய்யக்கூடியது எது; செய்யக்கூடாதது எது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பலன்கள் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. . எதிலுமே எச்சரிக்கை உணர்வோடு இருந்தோமானால், எவ்வித சோதனைகளையும் வென்று வாகை சூடலாம் அல்லவா? என்வே எடுத்துக்கொள்ள வேண்டிய விதத்தில் எடுத்துக்கொண்டு பயன்பெற வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

கீழ்க்கணட திருத் தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது நன்மை பயக்கும்:

1. ஆலங்குடி, கும்பகோணம்…….குரு;

2. திட்டை, தஞ்சாவூர்……………….குரு;

3. திருநள்ளாறு, காரைக்கால்……சனி;

4. குச்சனூர், தேனி………………….சனி;

5. ஏரிக்குப்பம், ஆரணி……………சனி;

6. பொழிச்சலூர், பல்லாவரம், சென்னை..சனி;

7. மொரட்டாண்டி,புதுச்சேரி………..சனி;

8. கோலியனூர், வில்லுபுரம்………..சனி;

9. திருப்போரூர் முருகன் கோவில், சென்னை…..சனி;

10. திருநாகேஸ்வரம், கும்பகோணம்……ராகு;

11. கீழ்ப்பெரும்பள்ளம்…..கும்பகோண்த்துக்கும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ளது…கேதுஅனைத்து பரிகார வழிகளையும் மேற்கொண்டு, வழிபாடுகளைச் செய்து வந்தால், இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நலம் தரும் ஆண்டாக இருக்கும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மூன்றாம் கோணம் ஆண்டு பலன் – அனைத்து ராசிகளும்

2012 மேஷ ராசி

2012 மேஷ ராசி

2012 ரிஷப ராசி

2012 ரிஷப ராசி

2012 மிதுன ராசி

2012 மிதுன ராசி

2012 கடக ராசி

2012 கடக ராசி

2012 சிம்ம ராசி

2012 சிம்ம ராசி

2012 கன்னி ராசி

2012 கன்னி ராசி

2012 துலா ராசி

2012 துலா ராசி

2012  விருச்சிக ராசி

2012 விருச்சிக ராசி

2012  தனுசு ராசி

2012 தனுசு ராசி

2012 மகர ராசி

2012 மகர ராசி

2012 கும்ப ராசி

2012 கும்ப ராசி

2012 மீன ராசி

2012 மீன ராசி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>