/* ]]> */
Dec 242011
 

 

2012 ராசி பலன் – வருட பலன்கள் – மேஷ ராசி பலன்

மேஷம் ராசி
மேஷம் ராசி

 

 

மேஷம்:

அஸ்வினி; பரணி; கிருத்திகை(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:

இந்த 2012-ம் ஆண்டு உங்களுக்கு ‘அ ப்பாடா’ என்று பெருமூச்சு விட வைக்கும். ஏனென்றால், கடந்த இரண்டாண்டுகள் குரு 12-ம் இடமான விரயஸ்தானத்திலும், தற்போது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால்.  நிம்மதி என்பதே உங்களுக்கு மறந்துபோன் விஷயமாகிவிட்டது. இது மட்டுமின்றி, குரு சாதகமான 11-ம் இடத்தில் சஞ்சரித்தபோதுகூட உங்களால் நிம்மதியாக இருக்க முடிந்ததா, என்ன?குரு வக்கிரகதி என்ற பெயரில், இங்கும் அங்கும் ஒளிந்து பிடித்து விளையாடியதில், உங்களால், அந்த மகிழ்ச்சியையும், அனுபவிக்க முடியவில்லை. இப்போது வருகிற 2012- மே மாதம் 17-ம் தேதி வரப்போகும் குருப்பெயர்ச்சி உங்களது ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு பெயர்வதால், அது உங்களுக்கு யோகமாக இருக்கும். ஆனால்  வருடத்தின் முற்பகுதியான ஜனவரி மாதம் முதல் மே 17-ம் தேதிவரையிலான காலக் கட்டத்தில், ஜென்ம சனியின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அது மட்டுமில்லாமல், சனியின் ஏழாமிடத்து சஞ்சாரமும் அனுகூலமானதல்ல். இது மட்டுமின்றி, எட்டாம் இட ராகுவும், இரன்டாமிட கேதுவும் நன்மை தராது. ராகு கேது சஞ்சாரமும், சனியின் சஞ்சாரமும், ஆண்டு முழுவதும் மாறாமல் இருக்கும். ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் சனியை குருபார்ப்பதால், பெரிய பாதிப்புகளில் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள் என்றாலும், சனியின் பார்வை உங்கள் ஜென்ம ராசியில் பதிவதால், உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சனியின் பார்வை நான்காமிடத்தைப் பார்ப்பதால், குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சனியின் பார்வை ஒன்பதாமிடத்தில் பதிவதால், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். கணவன்-மனைவி உறவு சிறக்கும்.

இது தவிர எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, எதிர்பாராத நிகழ்வுகளை நடத்திக் காட்டும். எதிர்பாராத என்றால் தீய பலன்கள் மட்டுமல்ல. எதிர்பாராத சில நல்ல பலன்கள் நடப்பதற்கும் வாய்ப்புண்டு. ராகு பகவான் தனது மூன்றாம் பார்வையால் 10-ம் இடத்தைப் பார்ப்பதால்,உத்தியோக சம்பந்தமாகவோ தொழில் சம்பந்தமாகவோ, வெளியூர் செல்ல நேரும். சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுகள்ஏற்படும். பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்துபோக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரும். கணக்கு வழக்குககளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்தால் தொல்லைகள் வரும். அரசு ஊழியர்களும் உத்தியோகத்தில் இருப்பவர்களும் மேலதிகாரிகளால், பிரச்சினைகளை சந்திப்பார்கள். யாரிடமும் கையூட்டுப் பெறுவதை தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறையிடம் சிக்கி அவமானப்பட நேரும். வெளிநாட்டுப் பயணம் ,வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாரிடமும் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வராது. எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.

இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது பொருளாதார ரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழில் மந்த கதிக்குப் போகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற தடுமாறுவார்கள். குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும். தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்தாலும்கூட, ஏதாவது கிண்டலாகப் பேசினால்கூட சண்டை வந்துவிடும். பூர்வீக சொத்தில் வில்லங்கம்  ஏற்படும்.

இதுவும் தவிர, உங்களுக்கு இப்போது ஜென்ம குரு நடந்துகொண்டிருப்பதால், உங்களுடைய சீர் கெடும். சிரமங்கள் உண்டாகும். பொன் பொருள்கள் கைவிட்டுப் போகும். அரசாங்க சம்பந்தமாகவும் குற்றங்குறைகள், சங்கடங்கள் உண்டாகும் என்பதெல்லாம் பொதுவான விதி. உங்களுடைய நடை உடை பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். இனம் புரியாத ஒரு விரக்தி உணர்வு தலை தூக்கும். கவலை, சஞ்சலம், சந்தேகம், குழப்பம், வீண்பயம், அவனம்பிக்கைஆகியவை புகைமூட்டம் போல அடிக்கடி உங்களை சூழ்ந்து கொள்ளும்.

ஆரோக்கியம் திருப்தியாக இருக்காது. சின்னச் சின்ன நோய் ஏதாவது வருவதும் போவதும் சகஜமாக இருக்கும். பித்த மயக்கம், தலை சுற்றல், ஈரல் கோளாறுகள் செரிமானக் குறைவு, கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் சர்க்கரை வியாதி இவையெல்லாம் பொதுவாக ஜென்ம குருவால் வரக்கூடிய பிரச்சினைகள். ஆனால், குருபகவான், மேஷராசிக்கு பாக்கிய ஸ்தானத்தின் அதிபதி என்பதால், ஜென்ம குருவின்பொதுவான கெடுபலன்களை  குறைத்துவிடும் என்பதாலும் ஆரோக்கியம் அவ்வளவாக பாதிக்காது. சின்னச் சின்ன அசௌகரியங்கள் வந்து அவ்வப்போது குணமாகிவிடும்.

பொருளாதார நிலைப் பார்க்கும்போது விரயஸ்தானத்த்ல் குரு வாசம் செய்தபோது கையில் காசு தங்காமல் ஓடியது, இல்லையா?  இபோதும் அதில் பெரிய மாற்றம் இருக்காது. வரவேண்டிய பணம் கைக்கு வராது. வந்தாலும் அரையும் குறையுமாக வரும். கொடுக்கல்- வாங்கல்களை சரிவர நடத்திக்கொள்ள முடியாமல் குளறுபடியாகிக்கொண்டிருக்கும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டிப்பணம், கடன் தவணை என்று செலுத்துகிற வகையில், வருமானத்தின் பெரும்பகுதியை இழக்க வேண்டி வரும். இதுதவிர வழக்கமான செலவுகளும் சேர்ந்துகொள்ளும்.  எனவே கடன், கைமாற்று, இவற்றை  சமாளித்து சரிக்கட்டுவதே பெரிய சிக்கலாகவும் வேதனை தருவதாகவும் இருக்கும். இதுமட்டுமில்லாமல், பணத் தட்டுப்பாடு குறித்த கருத்து வேறுபாடுகளும்.,மனஸ்தாபங்களும், அவமானங்களும் ஏற்படும். வீடு, மனை மாடு-கன்றுகள் இவற்றைப் பராமரிப்பதும் கஷ்டமாகிவிடும். மென்மேலும் செலவுகளில் இழுத்துவிடும்.

சுபகாரியங்கள் அனைத்தும் தடைப்படும். திருமணமான தம்பதியரிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றும். மேலும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், தம்பதியரிடையே இணக்கத்தைக் குறைக்கும். பிள்ளைகளாலும் கவலை  ஏற்படும். அவர்களைப்பற்றி ஏக்கமும் வருத்தமும் மிகும். ஆனால், இத்தனை விதமான கஷ்டங்களும் மே 16 வரைதான்.

மே 17-2012-ல் ஏற்படப்போகும் குருப் பெயர்ச்சி தனஸ்தானமான 2-ல் சஞ்சரித்து, 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்யவுள்ளார். இதனால் குடும்பத்தில்மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கெண்ட சனியின் களத்திர ஸ்தான வாசமும் ராகு, கேதுவினால் நேர்ந்த இழப்புகளும் காணாமல் போய்விடும். ஏனென்றால் குரு என்னும் கிரகமே அனத்து கிரகங்களையும் கோலோச்சும் சக்தி பெற்றது. எனவே உங்கள் ராசிக்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போகுமளவுக்கு அடக்கி வாசிக்கப்படும்.

பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பிரிந்த உறவினர்களும் ஓடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாகும் அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் அளவுக்கு யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும்,. தொழிலாளர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன்  மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும்.

இப்படியாக ஆண்டின் முற்பகுதி சற்று வாட்டம் காணப்பட்டாலும் மே மாத நடுவில்  வரும் குருப் பெயர்ச்சி பலவிதமான யோகங்களை உங்களுக்கு வாரி வழங்கி, உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். எனவே இந்த புத்தாண்டு இனிய குரு பெயர்ச்சியினால், இனிமை தரும் நல்லாண்டாகும்.

பரிகாரம்:

உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தில்  ஒரு நாள் ‘மிருத்யஞ்ஜ்ய ஹோமமு’ மோ அல்லது ‘ஆயுஷ் ஹோமமோ’ செய்யுங்கள்.’ ஆதித்ய ஹிருத்யம்’ தினமும் பாராயணம் செய்யவும். கோதுமை தானம் செய்யவும். செவ்வாய்க் கிழமைககளில் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் செனறு, அவருக்கு செந்நிற மலர்களால் உங்கள் கைப்பட தொடுத்த மாலையை அணிவிக்கவும். துவரம்பருப்பை தானம் செய்யவும். ராகு எட்டில் இருப்பதால், துர்க்கயம்மனை வணங்கவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மகாலக்ஷ்மிதேவியை வணங்கவும். சனி பகவானின் ஏழாமிடத்து சஞ்சாரம் நல்லதல்ல. சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று, எள்ளு தீபம் ஏற்றவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். வயோதிகர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். கறுப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். ‘ ஹனுமான் சலீஸா’ தினமும் படிக்கவும். மே மாத முற்பாதிவரை, ஜென்ம குருவின் சஞ்சாரம் நல்லதல்ல. எனவே, தட்சிணாமூர்த்தியை செவ்வரளி மாலையிட்டு, கொண்டக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வணங்கவும். உங்கள் முன்னோர்களுக்கான நியமங்களையும் காரியங்களையும் தடைப்படாமல் நிறைவேற்றவும்.

வாழ்க பல்லாண்டு !சிறக்கட்டும் புத்தாண்டு !

tags : mesha rasi palan, mesha rasi, mesham, rasi palan, rasi palangal, ஆண்டு பலன், ராசி பலன், ராசி பலன்கள், மேஷ ராசி, மேஷ ராசி பலன்கள், வருட பலன், வருட பலன்கள், மேஷம், மேஷம் ராசி, 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 2012  rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 மேஷ ராசி பலன், 2012 mesha rasi palan, mesha rasi palan 2012,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.