2011 க்கான சாகித்ய அகாதமி விருது வென்ற சு. வெங்கடேசன் மதுரையில் வசித்து வருகிறார் . காவல்கோட்டம் என்னும் இவரது முதல் நாவலே சாகித்ய அகாதெமி விருது வென்றிருக்கிறது . வசந்தபாலன் இயக்கத்தில் ” அரவான் ” என்ற பெயரில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது இந்த நாவலுக்கு, கனடா தமிழ்ச் சங்க இயல் விருது உட்பட ஆறு விருதுகள் கிடைத்து உள்ளது.
மார்க்சீயக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர உறுப்பினராக இருக்கும் இவர் ஓட்டையில்லாத புல்லாங்குழல், திசையெல்லாம் சூரியன், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். மிகுந்த சர்ச்சைகளுக்கு ஆளாகி உள்ளது காவல் கோட்டம் என்பது தமிழின் முக்கிய எழுத்தாளர்களின் தளங்களில் படிக்கும் போது தெரிகிறது . எஸ் . ரா காவல் கோட்டத்தை அத்தனை சிலாகித்து விடவில்லை என்பதும் ஜெயமோகன் ரொம்பவும் வரவேற்றிருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது .
எப்படியானாலும் அரவான் வரும்போது தெரிந்து போகும் எத்தனை வரவேற்பு இருக்கிறது என்று . சாகித்ய ஆகாதமி விருது வென்றமைக்கு மூன்றாம்கோணம் சார்பில் வாழ்த்துக்கள் . (புத்தகம் கிடைத்ததும் படித்து வாசிக்கலாம் வாங்க வில் அறிமுகம் செய்ய வேண்டும் அவசியம் )
நாவல் கிடைக்குமிடம் மற்றும் விபரங்கள் :
காவல் கோட்டம் (நாவல்)
ஆசிரியர்: சு. வெங்கடேசன்
பக். : 1048 விலை: ரூ. 590
முதற்பதிப்பு: டிசம்பர் 2008
வெளியீடு: தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை
சென்னை-14
தகவல்கள் : நன்றி விக்கிபீடியா
tags ,
S. Venakatesan , sahitya akademi awards, sahitya akademi award winner , sahitya akademi award winner S. Venakatesan , aravan, Aravaan, vasantha balan, Vasantha Balan , Madurai , Kaval Kottam, Thamizini
சு . வெங்கடேசன், சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமி விருது , அரவான், வசந்த பாலன், மதுரை , காவல் கோட்டம்
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments