/* ]]> */
Jan 072011
 

பத்தாவது இடம் இளங்கோவன் ஆன்டி ஹீரோவாகத் தோன்றிய இந்தக் காமெடி படம் சஸ்பென்ஸ் படமும் கூட… ஏனென்றால் இன்டர்வல் வரை ரசிகர்களுக்கு இளங்கோவனின் சீரியஸ் அறிக்கைகளைப் பார்த்து இது டெரர் படமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்து கொண்டேயிருந்தது.. கூட்டாட்சி காங்கிரஸ் தனித்து ஆட்சி என்று தன் இறுகிய முகத்தோடு இளங்கோவன் பல காமெடி டையலாக்குகளை சரளமாக வீச…”அட இது நல்ல காமெடியா இருக்கே!” என்று இன்டர்வல்லுக்கு பிறகுதான் ரசிகர்கள் தெளிவானார்கள். தங்கபாலு கதாபாத்திரம் கட்சி எக்கேடே கெட்டாலும் தன் காலேஜ் போனியாகணும் என்று சொல்லும் இடத்தில் வில்லனாக இடம் பிடிக்கிறார். ராகுல் காந்தி கெஸ்ட் ரோல் செய்திருக்கும் இந்த தமிழ்நாடு காங்கிரஸ் தயாரிப்பில் கடைசி வரை அவர்களுக்கு மந்திரி சபையில் இடம் கிடைக்காதது தனி சோகம் தான். நீங்க உள்ள வாங்க என்று இளங்கோவன் சொல்ல இல்ல இல்ல நீங்க ஃப்ர்ஸ்ட் உள்ள வாங்க என்று கேப்டன் பதில் சொல்ல இருவருமே கடைசியில் உள்ளே நுழையாமல் போகும் காட்சி டைரக்டர் டச். கலைஞரை காய்ச்சி எடுக்கும் இளங்கோவன் ஆக்ஷன் ஹீரோவாக இருந்தாலும் கடைசி வரை கலைஞர் சண்டைக்கே வராமல் வெறும் முரசொலி கடிதங்கள் மட்டுமே எழுதுவதால் கிளைமேக்சுக்கு முன்பே ரசிகர்கள் ஓட்டமெடுக்கிறார்கள்.. பத்தாவது இடத்தில் “தீராத விளையாட்டுப் பிள்ளை” ஒன்பதாவது இடம் : Julian Assange

சென்ற வருடம் அதிகமாய் பப்ளிசிடி கிடைத்தது இந்த படத்திற்குத்தான். ஜூலியன் அசாஞ்சே பலே பாண்டியா ஸடிலில் அமெரிக்காவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டி ரகசியங்களை அமபலமாக்க ஒரு நல்ல த்ரில்லராகப் போய்க் கொண்டிருந்த கதை அந்த ரேப் சீனோடு ஒரு நல்ல காமெடி படமானது. அமெரிக்கா வில்லன் ப்ளஸ் காமெடி வேடத்தை நன்றாக செய்திருந்தது.. குறிப்பாக “அது எங்கள் அம்பாஸடர்களின் தனிப்பட்ட கருத்து” ” அவர் கைதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லும் இடங்களில் கைத்தட்டலில் தியேட்டரே அதிர்கிறது! ஒவ்வொரு ரகசியமாய் ஜூலியன் எடுத்து விட நாம் அதிர்ச்சியாக ஆனால் ஜூலியன் ஜெயிலில் இருக்கையில் நாம் பரிதாபப்பட இப்படி சென்டிமென்ட் விறுவிறுப்பு இரண்டையும் காமெடியோடு மிக்ஸ் செய்து தந்திருக்கும் இந்த விக்கிலீக்ஸ் தயாரிப்பு நிச்சயம் சூப்பர் ஹிட்! ஒம்பதாவது இடத்தில் “பலே பாண்டியா!”

எட்டாவது இடம் : ஒபாமா

பலே பாண்டியாவில் வில்லனாகக் கலக்கிய ஒபாமா காமெடி கதாநாயகனாக நடித்த படம் விருந்தாளி. ஒரு புன்னகையை வைத்துக் கொண்டு மனுஷன் என்னமாய் நடிக்கிறார். பாகிஸ்தான் பற்றி பேசும்போது உண்மையும் பொய்யுமாய் கலந்து பேசும் இடங்களில் தேர்ச்சியான நடிகராகத் தெரியும் ஒபாமா நடனக் காட்சிகளில் மட்டும் கதாநாயகி மிஷலின் முன் திணறுகிறார். ஒபாமாவின் காமெடி மிஷலின் நடனம் ஆகியவற்றுக்காக ஓடினாலும் சுருக்கமாக தியேட்டருக்கு வந்து விட்டு ஓடி விட்டது படம். மன்மோகன் சிங் சில காட்சிகளே வந்தாலும் “யார் அமெரிக்காவுக்கு அதிகம் ஆதரவு” என்று ஒபாமாவுக்கும் மன்மோகனுக்கும் நல்ல போட்டி!

எட்டாம் இடத்தில் “விருந்தாளி” !

ஏழாவது இடம்

சுரேஷ் கல்மாடி

விளையாட்டுலயே விளையாண்டவன் நான் என்ற பன்ச் டயலாக்குடன் அறிமுகமாகும் கல்மாடி கடைசி வரை காம்ன்வெல்த் கேம் நடக்குமா நடக்காதா , ஸ்டேடியம் கவிழுமா க்விழாதா என்று யூகிக்க முடியாதபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த வெற்றி எனது வெற்றி என்று காமன் வெல்த் இறுதி விழாவில் அவர் பேசும் காட்சி ஹைலைட் காமெடி.. திடீரென்று ப்ளாக்மெயில் அது இது என்று திகிலூட்டினாலும் எல்லா தேசத்தவரையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் “களவாணி” . ஆறாம் இடம் லலித் மோடி ஷில்பா செட்டி ப்ரீத்தி சிந்தா என்று படத்தில் கவர்ச்சி அதிகம் இருந்தாலும் எல்லாருக்கும் தண்ணி காட்டிய பி.சி.சி.ஐ யை தனியொருவனாக சமாளிக்கும் மோடியை சுற்றியே நகர்கிறது கதை. ஆயிரம் கோடி பற்றி அசால்டாக பேசும் மெகா பட்ஜெட் படமென்பதால் படத்தில் ரிச்னஸ் தெரிகிறது. நடு நடுவே தீபிகா படுகோனே மல்லையா மகனுடன் ஆடும் காதல் டூயட் கவனத்தை சிதற விட்டாலும் கூட மோடி தான் ஒரு தில்லாலங்கடி கேடி என்று நிரூபிக்க்கிறார். ஷரத் பவார் ஆரம்பத்தில் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டு பின் பிசிசியை பக்கம் தாவுவது கதையில் எதிர்பாரா திருப்பம். ஆறாவது இடத்தில் தில்லாலங்கடி!

ஐந்தாவது இடம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி நடித்த இந்த காமெடி படத்தில் தான் சிரிக்காமலே எல்லாரையும் சிரிக்க வைக்க முடியும் என்று ராகுல் காந்தி நிரூபித்தார். அவருக்கு பக்க பலமாக மன்மோகன் சிங் “அவர் எப்ப கேட்டாலும் இந்த நாற்காலி அவருக்குத்தான் .. நானே ஒரு ஒட்டுல தான் உக்காந்திருக்கேன்!” என்று அருமையாக நடிக்கிறார். அவ்வளவு பில்டப் கொடுத்து “மொதல்ல பிளான் பண்ணனும்” என்று டயலாக் பேசி ஆனால் கடைசியில் பீகாரில் மண்ணைக் கவ்வி .. அப்படியும் மீசையில் மண் ஒட்டாதது போல் மீசையில்லாமலே நடித்து அடுத்த வடிவேல் தான் தான் என ராகுல் நிரூபிக்கிறார். ஆனால் கலகலப்பான இந்த காமெடி படத்தில் ஏன் ராகுலுக்கு இன்னும் ஜோடியே இல்லை என்பது புதிராகவே இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் “பையா”

நாலாவ்து இடம்

மன்மோகன் சிங்

இந்த வருடம் பல படங்களில் குணச்சித்திர வேஷத்தில் நடித்தாலும் மன்மோகன் சிங் நானும் கதாநாயகன் தான் என்று நிரூபித்த படம் “இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்”. பெயரைக் கேட்டு ஏதோ கௌபாய் டெரர் படம் என உள்ளே நுழைந்தால் கௌவை விட சாஃப்டாக மன்மோகன் சிங் பேசுவது நல்ல காமெடி. கடைசி வரை கோட்டையில் நாற்காலியை விட்டு நகராமலேயே அவர் எல்லா சோதனைகளையும் தாங்கி தாய்குலத்திடம் கண்ணீர் வரவைக்கவும் தவறவில்லை. சோனியா வில்லியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் கடைசி வரை வில்லி பேச்சை தட்டாமல் கேட்டு அவருடன் மோதாமலேயே இலக்கை அடைகிறார் மன்மோகன் சிங். மீசை தாடியெல்லாம் பார்த்து முரட்டு லுக் கிடைத்தாலும் டப்பிங்கில் காலை வாரி விடுகிறது மன்மோகனுக்கு… வாய்ஸ் இல்லாத சிங்கம் காட்டுக்கு கூஜா.

நாலாவது இடத்தில் “இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்”

மூன்றாவது இடம்

நீரா ராடியா

நீரா ராடியா

ரொம்ப நாள் கழித்து பெண் கலக்கும் ஒரு படம். படத்தின் ஹைலைட்டே வசனங்கள் தான். அதுவும் அவர் ரத்தன் டாடாவிடமும் கனிமொழியிடமும் பேசும் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கிறது. ராசா செக்கை சீக்கிரம் கொடுங்க என்று கேட்பதாகட்டும் கனிமொழி ” அந்த மினிஸ்ட்ரி வர்த்தா?” என்பதாகட்டும் கலைஞர் வசனம் கேட்பது மாதிரி ரொம்ப நாள் கழித்து ஒரு ஃபீலிங். ராடியா எல்லா பத்திரிக்கைகளாலும் பாராட்டப்பட்ட கதாநாயகி என்பதால் படத்துக்கு நல்ல ரிப்போர்ட் ஏராளம். கனிமொழிக்கும் ராசாவுக்கும் என்ன உறவு என்று ராடியா விளக்கும் காட்சியில் எல்லாரது கவனத்தையும் ஈர்க்கிறார் டைரக்டர்.

மூன்றாவது இடத்தில் “பெண் சிங்கம்”

இரண்டாவது இடம்

ராசா

காதலாகட்டும் கரன்சியாகட்டும் இரண்டிலுமே தான் ராஜா என்று ராசா நிரூபித்த இளைஞன் படம் இந்திய திரையுல்கே பார்த்திராத மெகா பட்ஜெட் படம்… பட்ஜெட் 1,70,000 கோடி… கனிமொழிக்கும் ராசாவுக்கும் உள்ள உறவை டைரக்டர் வெகு மென்மையாக அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். போஸ்டரில் கலைஞரின் இளைஞன் என்று போட்டாலும் இது கனிமொழியின் இளைஞன் தான் என்பதில் காட்சிக்கு காட்சி தெரிகிறது. க்ளைமேக்சில் சிபிஐ ரெய்டில் ராசா சிரித்தபடியே வருவது நல்ல காமெடி. சிபிஐ தமிழ் சினிமா போலிஸை விட லேட்டாக வந்து தன் பங்கிற்கு மெகா காமெடி செய்கிறார்கள்.

இரண்டாவது இடத்தில்

“கலைஞரின் இளைஞன்”

முதலிடம்

பல சூப்பர் ஹிட் படங்கள் வந்திருந்தாலும் கூட 2010ன் டாப் படம் நித்தியானந்தா நடித்த நான் மகான் அல்ல தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆன்மிகம் , ஜல்சா, துரோகம், வீடியோ என பல தினுசுகளில் அசத்திய படம் அது. சன் டிவி இந்த படத்துக்கு தந்த ஃப்ரீ பப்ளிசிடி இந்தப் படம் ஓட இன்னொரு காரணம். அதோடு ரஞ்சிதாவின் இளமை கொஞ்சும் நடிப்பும் படத்துக்கு வலு சேர்த்தது. என்றாலும் ரஞ்சிதா கடைசியில் நான் அவள் இல்லை என்னும்போது ரசிகர்கள் சிரிக்கிறார்கள். ஆனால் கடைசி வரை கிங் தான் தான் என நித்யானந்தா மீண்டும் பிரசங்கம் செய்யப் போகும் இடம் சூப்பர் காமெடி. படத்தில் லெனின் வில்லன் பாத்திரம் ஏற்றாலும் அந்த வீடியோவை கோடானு கோடி மக்கள் பார்க்கும் படி செய்ததால் பல இளைஞர்களுக்கு அவர் தான் ஹீரோ!

முதலிடம் ” நான் மகான் அல்ல’!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>