/* ]]> */
Aug 222011
 

1. சமீபத்தில் நடிகர் விஜயைச் சந்தித்த ஏ. ஆர். முருகதாஸ், தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவரை போகக்கூடிய ஒரு அதிரடி ஆக்ஷன் கதையைக் கூறி  விஜயை அசத்திவிட்டார். ‘ந்ண்பன் ‘, ‘ வேலாயுதம் ‘ படங்களைத் தொடர்ந்து, சீமான் அல்லது பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முருகதாஸின் சந்திப்புக்குப்பின் ,’ சீமான், பேரரசு கதைகளை ஓரங்கட்டிவிட்டு , ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடித்து விடலாமா’ என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார், விஜய்.

lakshmi rai

2.ஸ்பெக்ட்ரம்  ஊழல் திரைப்படமாகிறது என்று ஏற்கனவே கூறியிருந்தோம். நடிகர் நடிகைகள் தேர்வு என்பது அவ்வளவு சுலபமா, என்ன? எல்லோரும் ‘ நமக்கு ஏன் வம்பு? ‘ என்று பயந்தோடும்போது, ஓரளவுக்கு நடிகைகள் தேர்வு  தற்சமயம் முடிவாகியுள்ளது. திகாரில் இருக்கும் கனிமொழி வேடத்தில், அம்மா நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். ‘ இது மாதிரியான ஒரு வேடத்தில் நடிக்க பயமாக இல்லையா? ‘ என்று அவரைக் கேட்டால், ” நான் ஒரு நடிகை. டைரக்டர் ஒரு கதையைச் சொன்னால், அதில் என் கேரக்டருக்கு பெர்ஃபாமன்ஸ் செய்ய, எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை மட்டுமே எண்ணிப் பார்ப்பேன். மற்றபடி இதில் நடிப்பதால் எனக்கு எந்தவித பயமும் இல்லை. …”  என்கிறார். இதே படத்தில், நீரா ராடியா வேடத்தில், லட்சுமிராய் நடிக்கிறார்.

3. தமிழில் மிகப் பெரிய யூத் வில்லனாக நரேன் வரப் போகிறார். தம்பிக்கோட்டை படம் தன்னை பரபரப்பான ஆக்ஷன் ஹீரோவாக்கும் என்று எதிர்பார்த்த நரேன், அப்படம் தோல்வியடைந்ததால்,, வில்லனாக மாறிவிட்டார். மிஷ்கின் இயக்கும், முகமூடி படத்தில் நரேன்தான் வில்லன். இவருக்கும் ஜீவாவுக்கும் படத்தில் நேரடியாக மோதிக்கொள்ளும் அதிரடி சண்டைக் காட்சிகளும் இருப்பதாகவும், நரேன் யூத் வில்லனாகிவிட்டார் என்றும்  சொல்கிறார் மிஷ்கின்.

namitha நமிதா

4. தன் கவர்ச்சி நடிப்பால், இளவட்ட ரசிகர்களை துவம்சம் செய்து வந்த நமீதா தற்போது கவர்ச்சிக்கு முழுக்கு போடப்போவதாக சினிமா உலகுக்கு அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார். கன்னடத்தில் உருவாகும், ஹிக்கப்பட்டே இஷ்டப்பட்டே என்ற படத்தில், போலீஸ் கெட்டப்பில் நடித்துவரும் நமீதா, தன் திறமையை சரியாகப் பயன்படுத்தும் கதைகளாக இருக்கும் பட்சத்தில், சம்பளத் தொகையிலும்  20-25 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யவிருப்பதாகவும், அறிவித்துள்ளார்.

5.  நான்கு வேடங்களில் கமல் நடித்த , மைக்கேல் மதன காமராஜன் என்ற படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகப் போகிறது. பிரியதர்ஷன் இயக்கவுள்ள இப்படத்தில் நடிக்க , அக்ஷய்குமார் ,சல்மான்கான் இருவருமே போட்டிபோடுவதால், யாரை ஓ. கே செய்வது என்ற குழப்பத்தில் உள்ளார், டைரக்டர்.

6. திருமணத்துக்குப் பிறகு அம்பிகா சில படங்களில் நடித்திருந்தாலும் , தொடர்ந்து நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்தார். பாலாவின்  அவன்- இவன் படம் அம்பிகாவைத் தூக்கிவிட்டுள்ளது. அதனால், முழுநேர அம்மா நடிகையாகக் களமிறங்கி பிஸியாகிவிட்டார். இதனால், இன்னொரு அம்மா நடிகையான சரண்யாவுக்கும் அம்பிகாவுக்குமிடையே போட்டி வலுத்துள்ளது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>