Mar 172012
+2 மாணவி தற்கொலை முயற்ச்சி - தீர்வு என்ன?
+2 தேர்வுகள் நடந்துக்கொண்டு இருக்கும் இச்சமயத்தில், நேற்று இயற்பியல்(Physics) தேர்வு முடிந்தது. நேற்றைய தேர்வு கடினமாக இருந்ததாகவும் அதில் மாணவி ஒருவர் தேர்வு அறையில் இருந்து மாடிக்குச் சென்று தற்கொலைக்கு முயன்றதாக செய்தி கேட்டு மிகவும் வருந்ததக்க விஷயமாகவும், வேதனைக்குரிய விஷயமாகவும் உள்ளது
இன்றைய கால கட்டத்தில், மாணவர்களிடம் தனனம்பிககையும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியமும் இல்லை எனபதே வேதனைக்குரிய செய்தி. முதல் மதிப்பெண் எடுத்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும், என்ற தவறான கருத்துக்கள் மாணவர்களிடமும், சில பெற்றோற்களிடமும் வேரூன்றி இருப்பதே இம்மாதிரியான தற்கொலைகளின் முயற்சிகள்.
சிலஆண்டுகளுக்கு முன் தொழிற்கல்வி, மற்றும் மருத்துவம் படித்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும் என்று பரவலாக பெற்றோர்களின் மனதிலும், மாணவர்களின் மனதிலும் கருத்து இருந்தது. ஆனால் இன்றய நடைமுறை வாழ்வில் எது படித்தாலும், கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் முன்னேறிவிடலாம் என்ற நிலை உள்ளது என்பதை மாணவர்கள் உணர்வதில்லை.
படிப்பு ஒன்று தான் வாழ்க்கை என்று மிகவும் குறுகிய எண்ணங்களோடு தான் இன்றய மாணவ சமுதாயமும் உள்ளது. அவர்களுக்கு தூபம் போடும் வகையில் தான் பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்விநிர்வாகமும் இருக்கிறது.தேர்வுகள் முடிந்து, மே மாதம் முடிவுகள் வெளியாகும் சமயத்தில் தொலைகாட்சிகளும், செய்திதாள்கழும் செய்யும் அழிசாட்டியம் சொல்லிமாளாது. முதல் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு பேட்டியும், பரிசும் என்று அல்லோலப்படும். இதை காணும் ஜூனியர் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்வி நிர்வாகத்திற்க்கும் ஆசை தொத்திக்கொள்ளும், அதன் பலனாக மாணவர்களை ஊககபடுத்துவது என்ற பெயரில், மனரீதியாக துன்புறுத்தபடுகிறார்கள்.எழுதாத சட்டமாக அவர்கள் 100 மதிப்பெண் எடுக்கவேண்டும் என்ற நிற்பந்ததிற்க்கு தள்ளப்டுகிறார்கள்.இந்த கருத்தை வலியுரித்தி சமீபத்தில் தோனி என்ற திரைப்படம் வெளிவந்தது. அதை ஏட்டுச்சுறைக்காயாகவோ, கூடடாகவோ மாற்றுவது மாணவர்களிடம் தான் உள்ள்து.படிப்பு என்பது வியாபாரம் அல்ல, தான் திறமைசாலி என்று பிரகடனப்படுத்திக்கொள்ளும் கருவியும் அலல என்பதை புரிந்துக்கொண்டால் இம்மாதிரியான சூழ்நிலையில் இருந்து மாணவர்கள் வெளிவரலாம்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments