2ஜி,3ஜி,4ஜி என்பதில் வேகம் எவ்வாறு வேறுபடுகின்றது?
நமது காதுகளில் ஒலியும் தேவையற்ற இடைவெளியும் சேர்ந்து வருவதையே நம்மால், பேச்சு என்று உணர முடியும். தொலைபேசி இணைப்பில் இந்தப் பேச்சு கடத்தப்படும்போது, சப்தங்களும், நிசப்தங்களும் இணைந்துதான், கடத்தப்படுகின்றன. இதைச் செய்வதே 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி போன்ற அலைபேசி தொழில்நுட்பங்கள். இதில் ‘ஜி’ என்பது தலைமுறை (generation).
ஆண்டு 1980:1ஜி:
கம்பி இல்லாமல் அனலாக் சிக்னல்கள் மூலம்பேசும் மொபைல் தொழில் நுட்பத்தின் முதல் படி. 2.4 முதல் 14.4 kbps சிக்னல் மட்டுமே செலுத்த முடிந்ததால், பேச்சை மட்டுமே அனுப்ப முடிந்தது.
ஆண்டு 1991: 2ஜி:
தகவல்கள் இடையே உள்ள இடைவெளியைச் சுருக்கி அனுப்பக்கூடிய டிஜிட்டல் தொழில் நுட்பம், குறுஞ்செய்தி MMS காணொளி போன்றவற்றை அனுப்ப முடிந்தது.
ஆண்டு 2001: 3ஜி:
சுமார் 3 Mbps தகவல்களை அனுப்பும் திறன் இருந்ததால், வீடியோ தொடர்பு ஜி.பி.எஸ்.இணையதளப் பயன்பாடு போன்றவை சாத்தியமானது.
ஆண்டு 2009:4ஜி:
4-6 Mbps திறனுடன் இருந்ததால், அதிவேக இணையதளம் துல்லியமான வீடியோத் தொலைத்தொடர்புகள், மொபைல் டிவி, இ-மெயில் என ஒரு கணினி செய்யும் எல்லா வேலைகளையும் செய்ய முடிந்தது.
^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments