கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் என்று குதூகலமாகவும் சந்தோஷமாகவும் பாடிய வண்ணம் ஸ்ரீ கிருஷ்ண உத்சவம் 2012 பூஜ்ய ஸ்ரீ சத்குரு ஞானானந்த சரஸ்வதி ஸ்வாமிஅவர்களின் அருளாசியுடன் ஸ்ரீ ஞான அத்வைத பீடமும், ஸ்ரீ விஷ்ணுமோஹன் ஃபௌண்டேஷனும் இணைந்து விழாவினை இன்று துவக்கினார்கள்
விழாவின் துவக்கத்தில் ஸ்ரீ சத்குரு சுவாமி அவர்கள் ஆசிர்வதித்து பவன்ஸ் குழுவின் இயக்குனரான N.சபாரத்தினம் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடக்கிவைத்தார்.
பிறகு சங்கீதகலா பாரதி ஸ்ரீராம் பரசுராம் மற்றும் கலைமாமணி அனுராதா ஸ்ரீராமின் ஆன்மீக கச்சேரி இனிதே துவங்கியது. சுவாதி திருநாளின் தொகுப்பில் கச்சேரி களை கட்டியது. பூபாலம் ராகத்தில் இனிதே ஆரம்பித்த தம்பதியினர்,பாக்யஸ்ரீ ராகத்திலும் பல்வேறு இசையமைப்பாளர்களான அம்புஜம் கிருஷ்ணா பாடல்களும், புரந்தரதாசர் படல்களும், சந்த் துக்காரம் அபங்க் பாடி அரங்கத்தினரை பக்திப்பரவசத்தில் ஆழ்த்தினார்கள்.
முத்துகாரே யஸ்ஸோதா என்ற தெலுங்கு கீர்தனையை பாடி பரவசப்படுத்தினார்கள்



