/* ]]> */
Jan 142012
 

               - NANBAN FILM REVIEW 

n

முதல்வன் படத்திற்காக பத்து வருடங்களுக்கு முன்பாகவே சேர்ந்திருக்க வேண்டிய விஜய் - ஷங்கர் இருவரும் இப்போது நண்பனில் கை கோர்த்திருக்கிறார்கள் … “ 3 இடியட்ஸ் ” ரீமேக் வாயிலாக அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகவே நண்பன் ஜெயித்திருக்கிறான் … அமீர்கான்நடிப்பில் சேத்தன் பகத்தின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட அருமையான படத்தை விஜய்யின்  இமேஜிற்காக கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் அப்படியே எடுத்ததே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் …

வெங்கட் ( ஸ்ரீகாந்த் ) , சேவற்கொடி செந்தில் ( ஜீவா ) இருவரும் குசும்பனின் ( சத்யன் ) உதவியுடன் தங்களின் வாழ்க்கையையே நல்ல படியாக மாற்றியமைத்து விட்டு திடீரென காணாமல் போய் விட்ட நண்பன் பாரிவேந்தனை ( விஜய் ) தேடி போகிறார்கள் … தேடலுக்கிடையில் நண்பன் யார் ? என்ன செய்தான் ? என்பதை பிளாஷ்பேக் மூலம் அழகாக விளக்குகிறார்கள் … தேடிய  நண்பன் இவர்களுக்கு கிடைத்தானா ? என்பதே மீதி கதை …

கல்வியை உணர்ந்து படிக்க வைக்காமல் இயந்திரத்தனமாக மனப்பாடம் செய்ய வைக்கும் பயிற்றுவித்தல் முறையும் , அதை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களும் , தங்களின் ஆசையை பிள்ளைகளின் மேல் திணிக்கும் பெற்றோர்களும் ,  பள்ளி – கல்லூரிகளில் இருக்கும் ரேங்கிங் சிஸ்டமும் மாணவர்களை தேர்வில் வெற்றி பெற செய்தாலும் வாழ்க்கையில் தோற்கடித்து விடுகின்றன என்பதை செவிட்டில் அறைவது போல சொல்கிறது படம் …

V

போக்கிரிக்கு பிறகு பெரிய வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த விஜய்க்கு கடந்த வருடம் காவலன் நல்ல பெயரையும் , வேலாயுதம் கொஞ்சம் வசூலையும் வாங்கிக்கொடுத்தன … ஆனால் இவையிரண்டையும் பெரிய அளவில் வாங்கிக்கொடுத்திருக்கிறான் நண்பன் … வழக்கம் போல கெட் -அப்பை மாற்றாவிட்டாலும் , பஞ்ச் டயலாக் , சண்டை இவைகளில்லாத வித்தியாசமான கேரக்டரில் தன்னை முழுமையாக புகுத்தி படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் விஜய் … கீப் இட் அப் விஜய் … உங்ககிட்ட இருந்து இன்னும் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்  !

N

மற்ற இருவரை விட ஜீவா கல்லூரி மாணவனாக வெகு இயல்பாக பொருந்துகிறார். ஏழை மாணவன் என்பதை தன் நடிப்பாலும் , உடல்மொழியாலும் நன்றாக வெளிப்படுத்துகிறார்… தண்ணியடித்து விட்டு வகுப்பறையில் இவர் செய்யும் கலாட்டா கல கல … மாதவன் இடத்தில் ஸ்ரீகாந்தை நினைத்து பார்ப்பது கஷ்டம் என்றாலும் தன் லிமிடேசனை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார் … குறிப்பாக அப்பாவிடம் தன் எதிர்காலத்திற்காக மன்றாடும் காட்சி அற்புதம் …

ஒல்லியான இலியானா தன் இடுப்பாலும் , நடிப்பாலும் நம்மை கவர்கிறார் ! இராணியின் இயல்பான நடிப்பை தன் ஓவர் ஆக்டிங்கால் கெடுத்து விடுவாரோ என்ற பயத்தை ஆங்காங்கே ஏற்படுத்தினாலும் , அனுபவம் வாய்ந்த நடிப்பால் சத்யராஜ் சபாஷ் போட வைக்கிறார் …

தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி பெரிய காமெடி பண்ணியவர்சத்யன் , ஆனால் நண்பனை பார்த்த பிறகு “ 4 இடியட்ஸ் ” என்று கூட பெயர் வைக்கலாமென சொல்லுமளவிற்கு காமெடியனாக மட்டுமல்ல  நல்ல நடிகனாவும் தன்னை நிரூபித்திருக்கிறார் … எஸ்.ஜே.சூர்யா வந்தவுடன் தியேட்டரில் பயங்கரமாக கை தட்டுகிறார்கள் ! ஹீரோ ஆசையையெல்லாம்  ஒதுக்கி வைத்துவிட்டு  கேரக்டர் ஆர்டிஸ்டாக மாறினால் அவருக்கு நல்ல எதிர்காலம் என்று நினைக்கிறேன் …

ஹாரிஸ் ஜெயராஜ் ” சைய்ய சைய்யா ” வில் இருந்து “ அஸ்க் அஸ்க் ” , “ சலே சலோ ” வில் இருந்து “ என் நண்பன் போல ” இப்படி ஏ.ஆர்.ஆரின் மெட்டுக்களை உருவியிருந்தாலும் வழக்கம் போல பாடல்களை ஹிட் செய்து விட்டார் …மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு   ஊட்டியின்  ஹேர்பின் வளைவுகளை டாப் ஆங்கிளில் காட்டி மிரள வைக்கிறது …

B

ரீமேக் படங்களாக இருந்தாலும் ஈயடிச்சான் காப்பி செய்வதை பொதுவாக யாரும்  விரும்புவதில்லை , இருப்பினும் இந்த படம் பார்த்த பிறகு நல்ல வேலை எதையும் மாற்றவில்லையே என “  3  இடியட்ஸ் ” பார்த்தவர்களையும் , கதை நன்றாக இருந்தால் எந்த ஹீரோவும் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என “  3 இடியட்ஸ் ” பார்க்காதவர்களையும் சொல்ல வைத்ததே படத்தின் பெரிய பலம்…

பதினான்கு ஆண்டுகளுக்கு முந்தைய கல்லூரி வாழ்க்கையை காட்டும் போது சரளமாக செல்போனை பயன்படுத்துவது , இலியானாவின் திருமண காட்சியை ஹிந்தி படத்தை போல வட இந்திய ஸ்டைலில் வைத்திருப்பது , என்ன தான் ஆள் மாறாட்டம் செய்திருந்தாலும் நண்பர்களை மட்டுமின்றி காதலியையும் பத்து ஆண்டுகளாய் வேறெந்த விதமான அழுத்தமான காரணமும் இல்லாமல் விஜய் பிரிந்திருப்பது , நகைச்சுவையாகவே நகர்த்திக்கொண்டு போவதால்
” 3  இடியட்ஸ் ” ஏற்படுத்தியதை போன்ற சீரியஸ் பாதிப்பை ஏற்படுத்த தவறியது போன்ற சிலவற்றையும் குறைகளாக சொல்லலாம்  …

ரீமேக் படமாக இருந்தாலும் ஷங்கரின் முந்தைய வெற்றிப்படங்களின் வசூலுக்கு எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதை நிரூபிப்பதால் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவரின் பார்வைக்கும் நண்பன் – வெற்றியாளன் …
ஸ்கோர் கார்ட் : 45 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>