Dec 272011
தேர்தல்
ஐந்தாண்டுக்கு
ஒரு முறை ஆடும்
மங்காத்தா …!
ஏழையின் கைகளில்
காந்தியை
காணும் நாள் …!
ஐந்து வருட
அடிமை சாசனத்தில்
கைநாட்டு இடும் நாள் …!
கள்ள காதல்
அவளை பிடித்தது
அவளுக்கும் தான்
கணவனுக்கு மட்டும் ஏனோ …!
துரோகம் செய்தேன்
மன்னித்து விடு
கணவனின் வற்புறுத்தல் …!
வழி மேல்
விழி வைத்தேன் அவர்
வந்து விடுவாரோ என்று …!
மரணம்
நினைத்தாலும்
நிறுத்த முடியாத
நிகழ்வு …!
நம் மேல்
வைத்த அன்பை
அடையாளம் காட்டும் உலகிற்கு …!
துன்பத்திலிருந்து
விடுதலை பெற
தானாய் வந்த துருப்புசீட்டு …!
குழந்தை
நாம் காண முடியாத
நம் குழந்தை பருவத்தை
கண் முன் காட்டும் காணொளி …!
முத்தம்
காமமோ காதலோ
கடமையை செய்யும்
பரிமாற்றம் …!
தற்கொலை
கோழைகள்
எடுக்கும்
துணிவான முடிவு …!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments