/* ]]> */
Dec 032011
 

போராளி – திரைவிமர்சனம்

p

    கடந்த சில வருடங்களில் நம்மை கவனிக்க வைத்த காம்பினேஷன்களுள் முக்கியமானது சசிகுமார்சமுத்திரகனி இருவரின் கூட்டணி … இந்த கூட்டணியின் நான்காவது படம் “போராளி“. அழுத்தமான கதையம்சம் இல்லாததால் “ நாடோடிகள் ” போலவோ , காமெடியுடன் கூடிய வேகமான திரைக்கதையால் போரடிக்காமல் போவதால் ” ஈசன் ” போலவோ அல்லாமல் புது மாதிரி நிற்கிறான் போராளி …

ஒரு வீட்டிலிருந்து சசியும் , அல்லரி நரேஷும் தப்பிக்கும் முதல் காட்சியில் தொடங்கும் படம் , கஞ்சா கருப்பின் வீட்டில் இருவரும் தஞ்சம் அடைந்ததும் தங்கு தடையின்றி இடைவேளை வரை வேகமாக செல்கிறது … பத்திரிக்கையில் இருவரின் படத்தையும் பார்த்து விட்டு ஒரு கும்பல் துரத்த , இவர்கள் ஓட சஸ்பென்சுடன் வருகிறது இடைவேளை

காலனியில் வந்து தங்கியிருந்த கொஞ்ச நாட்களிலேயே எல்லோர் மனதிலும் ( குறிப்பாக ஒனர் மற்றும் அவர் பெண் ) நல்ல பெயர் எடுத்த சசியையும் , நரேஷையும் வந்த கும்பல் பைத்தியம் என்று சொல்ல ஏன் ? எதற்கு ? எப்படி ? என இப்படி சுருக்கமாக சொல்லாமல் இடைவேளைக்கு பின் கொஞ்சம் விர்ர்ரிவாக விளக்குகிறார்கள் …

f

சிரிக்கும் போது வெகுளித்தனத்தையும் , முறைக்கும் போது ஆக்ரோஷத்தையும் நன்றாக காட்டும் சசிகுமாரிடம் மற்ற முக பாவங்கள் மிஸ்ஸிங் … படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்கு பேசாமலேயே இருந்து வாய் பேச முடியாதவரோ என சந்தேகிக்க வைப்பவர் பின் அப்துல் கலாமில் ஆரம்பித்து அடுக்கடுக்காக பேசி சிரிக்கவும் , சலிக்கவும் வைக்கிறார் … “ சிலோன் ” புரோட்டா கேட்கும் சுவாதியிடம் ” எனக்கு சிலோனே பிடிக்காது இதுல  புரோட்டா வேற ” என்று சசி சொல்லும் போது தியேட்டரில் விசில் …

s

சுப்ரமணியபுரம்  படத்திற்கு பிறகு சுவாதியை ஏன் தமிழில் யாரும் யூஸ் செய்யவில்லை என்று ஆச்சர்யமாக இருக்கிறது … கண்களாலேயே பேசுகிறார் , குறிப்பாக சசி காதலை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் வெட்கம் , அழுகை , சந்தோசம் என எல்லா உணர்ச்சிகளையும் கண்களாலேயே காட்டும் காட்சியில் சுவாதியின் நடிப்பு சூப்பர் …

அல்லரி நரேஷ் தன் குறும்பு நடிப்பால் கவர்கிறார் … ” நாடோடிகள் ” பரணியை நியாபகப்படுத்துவதும் , பேச்சில் தெலுகு வாடை அடிப்பதும் மைனஸ் …  நிவேதாவின் அமுல் பேபி முகத்திற்கு சென்னை பாஷை பேசும் ” தமிழ் செல்வி ” கேரக்டரை புகுத்தியது , அவர் அக்காவின் பிரச்சனையை போலவே செயற்கையாகவே ஒட்டாமல் இருக்கிறது …

இவர்களை தவிர கரடி வேஷம் போட்டு பிழைப்பு நடத்தும் கஞ்சா கருப்பு ( அமீரை போலவே இவரை சரியாக உபயோகப்படுத்தும் சமுத்திரகனியை பாராட்டலாம் ) , ” சாந்தி , சாந்தி ” என்று கத்தி சாந்தியை இழக்கும் படவா கோபி , ” முடிவ நான் தான் எடுப்பேன் ” என மனைவியிடம் சொல்லும் ஹவுஸ் ஒனர் கு.ஞானசம்பந்தம் , காலனியில் குடியிருக்கும் குடிகாரன் , சுவாதியின் தங்கை , ” நாங்க அப்பவே இப்படி , இப்ப சொல்லவா வேணும் ” என்று சவடால் பேசும் சூரி , சசியின் சித்தியாக வருபவர் இப்படி பலர் ஸ்கோர் செய்கிறார்கள்  … குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் வசுந்தராவும் , அவர் அப்பாவாக வரும் கிழவரும் மனதில் பதிகிறார்கள் …

a

டாக்டராக வரும் ஜெயப்ரகாஷிற்கும் , நிவேதாவின் மாமாவாக வரும் நமோ நாராயனாவிற்கும் பெரிய ஸ்கோப் இல்லை …. சுந்தர்.சி.பாபுவின் பின்னணி இசை படத்திற்கு படம் மெருகேறி வருகிறது … குறிப்பாக சேசிங் சீன்களில் இவரின் ஆர்.ஆர் அருமை … சென்னையையும் , கிராமத்தையும் பிரித்து காட்டும் கதிரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை …

முதல் பாதியில் கதை எதை நோக்கி போகிறது என்ற குழப்பம் ஏற்பட்டாலும் , அதை அடக்கும் வேகமான திரைக்கதை , முதல் பாதியில் கஞ்சா கருப்பையும் , இரண்டாவது பாதியில் சூரியையும் சரியாக பயன்படுத்தியது , தன்னம்பிக்கை , மனித நேயம் இரண்டையும் கலந்து படைக்கப்பட்ட சசிகுமாரின் கேரக்டர் ,

” ஏதாவது ஒண்ணுன்னா வேடிக்கை மட்டும் பாப்பீங்க , உதவின்னு கூப்புட்டா ஓடிடுவீங்க ” , ” மூளை தான் அண்ணாச்சி மூலதனம் ” , ” சொந்தமா ஏதாவது பண்ணலாம்னு பாத்தா எண்டா இப்படிகெடுக்குறீங்க ” , சுவாதி சசியிடம் சொல்லும் ” அண்டா மாதிரி நினச்சு வேணா தூங்குங்க ” போன்ற  நச் வசனங்கள் , சசி – சுவாதி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் , சில நேரமே வந்தாலும் மனநிலை சரியில்லாதவர்கள் பற்றிய மிரட்டும் மருத்துவமனை காட்சிகள் , பாடல்களே இல்லாமல் பின்னணி இசை உதவியுடன் பின்பாதியை நகர்த்திய தைரியம் இவற்றிற்காக இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம் ….

d

முதல் காட்சியிலேயே தப்பியோடுவதை காட்டி விட்டு பிறகு எந்த க்ளூவும் இல்லாமல் வெறும் காமெடியாகவே முதல் பாதியை நகர்த்தியிருப்பது ,  நிவேதா அக்காவின் பிரச்னை , அது சம்பந்தப்பட்ட ஒட்டாத காட்சிகள் , போராளி என்று பெயர் வைத்ததால் சமூக அவலங்களை பற்றிய ஒரு அக்கறையான படமோ என நினைத்தால் , சொத்து தகராறு , சித்தி கொடுமை என வழக்கமான ட்ராக்கில் கதை பயணிப்பது ,

சஸ்பென்ஸ் வைக்கிறேன் பேர்வழியென்று என்று கொஞ்சம் சுத்த விட்டிருப்பது , ‘” நாடோடிகள் ” பாணியில் பஸ் பேக் ட்ராப்பில் தேவையில்லாமல் வரும் குத்து பாடலில் ஆரம்பித்து , புத்திசாலித்தனமாக யோசிக்கும் சசிகுமார் வித்தியாசமாக எதையும் செய்யாமல் ஒத்த ஆளாக ஒரு ஊரையே அடிக்கும் வழக்கமான கிளைமேக்ஸ் பைட்டுடன் படத்தை முடித்திருப்பது இவையெல்லாம் போராளியை போர்களத்தில்  வாகை சூட விடாமல் பின்னுக்கு இழுக்கின்றன …

ஸ்கோர் கார்ட் : 41 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>