11 மணிக்கு வந்த மகாத்மா காந்தி – கீதாஞ்சலி
காந்தியை பற்றி ஒரு தகவல்: காந்தியை பார்க்க ஒரு பேராசிரியர் வந்திருந்தார். அங்கு ஒரு முதியவர் வாசலை பெருக்கிக்கொண்டு இருந்தார். அவரிடம் பேராசிரியர் நான் “மகாத்மாவை” பார்க்க வேண்டும் உடனடியாக வரச்சொல் என்றார். அந்த முதியவர் காந்தி உங்களை பதினோரு மணிக்கு சந்திப்பார் என்றார். பேராசிரியர் கோவத்தோடு நான் இப்பொழுதே “மகாத்மாவை” பார்த்தாக வேண்டும் என்றார். ஐயா காந்தி நேரப்படி நடப்பவர் உங்களை சரியாக பதினோரு மணிக்கு பார்பார் என்று கூறினார் அந்த முதியவர். பேராசிரியருக்கு கோவம் வந்தது நாமே “மகாத்மா” என்று மரியாதையோடு அழைக்கிறோம் இந்த கிழவன் “காந்தி” என்கிறானே என்று. அதற்குள் மணி பதினொன்றை தொட்டது. அந்த முதியவர் துடைப்பத்தை போட்டு விட்டு சொல்லுங்கள் என்றார். நான் காந்தியை பார்க்க வேண்டும் என்று கூறினார். நான் தான் காந்தி என்றார் அந்த முதியவர். அதிர்ந்து போனார் பேராசிரியர்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments














