/* ]]> */
Nov 252016
 

ஹீமோபிலியா- நோயின் காரணங்களும் சிகிச்சையும்:

hemophilia

  • ஹீமோபிலியா என்றால் என்ன?

அடிபட்ட இடத்தில், 5 முதல் 10 நிமிடத்திற்குள் ரத்தம் உறைவது என்பது இயற்கை. ஹீமோபிலியா இருந்தால், ரத்தம் உறையாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

  •  ரத்தம் உறையாஅம்ல் போவதற்கு என்ன காரணம்?
  •  ரத்தம் உறைவதற்குத் தேவையான காரணிகள் 8,9 இல்லாமல் இருப்பதே.
  •  இந்தக் குறைபாட்டிற்கு என்ன காரணம்?

மரபியல் காரணங்களால் ஏற்படும் இந்தக் குறைபாட்டினால், அதிக அளவில் பாதிக்கப்படுவது ஆண்கள். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரத்தின்படி, 10,000 பேரில் ஒருவருக்கு இந்தக் குறைபாடு உள்ளது.

  • குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

பல், ஈறுகளில் இருந்து தானாகவே ரத்தக் கசிவு ஏற்படும். மூட்டுகள், தசைகள் இவற்றில் ரத்தம் கசிந்து, வலி, வீக்கம் ஏற்பட்டு படிப்படியாஅக் செயலிழக்கும். மூளை, வயிறு இவற்றில் ரத்தம் கசிந்தால், உயிருக்கே ஆபத்தாக முடியும்.

  • குறைபாட்டை எப்படி கண்டறிவது?

குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டும்போது தொடர்ந்து ரத்தம் கசியலாம். லேசாக அடிபடும்போது, பல் விழும் நேரத்தில் அறுவை சிகிச்சையின்போது ரத்தம் கசிந்துகொண்டே இருக்கலாம்.

  • சிகிச்சை என்ன?

பாதிப்பு மிதமாக உள்ளதா, தீவிரமாக உள்ளதா என்பதைக் கண்டறியவேண்டும்.மரபியல் காரணிகளால் ஏற்படும் பாதிப்பை ஊசி மூலம் சரி செய்யலாம். அப்படி இல்லாத பட்சத்தில், 11 p plasma என்ற வெள்ளை ரத்தம், ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்த, ‘க்ரையோ’ என்ற மருந்தைப் பயன்படுத்துவர். ஈறு, பல்லில் வரும் ரத்தக் கசிவிற்கு tranexamic acid என்ற மாத்திரை உள்ளது. பிரச்சினை உள்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் தசை மூட்டுகளிய வலுவாக வைத்திருப்பது அவசியம்.

  • செய்யக்கூடாதவை என்ன?

வீக்கம் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கக்கூடாது. பாதித்த குழந்தையின் தலையில் குட்டுவது, அடிப்பது ஆபத்து

  • குறைபாட்டைத் தடுக்க முடியுமா?

மரபணு பரிசோதனையில் கருவில் இருக்கும்போதே இந்தக் குறையை அறிய முடியும்.

குறைபாடு உள்ளவர்களுக்கு அரசிடமிருந்து உதவி கிடைக்கிறதா?

இவரக்ளுக்கான மருந்துகள், அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகக் கிடைக்கின்றன.

  • ஹீமோபிலியா சங்கத்தின் செயல்பாடு என்ன?

பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வு,உடற்பயிற்சி, தேவையான சிகிச்சைகள் மற்றும் வழிகாட்டுதகளை, வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் மருத்துவமனைகளில்(vhs) வழங்கி வருகிறோம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>