ஹோரை – கிரக ஓரைகள் பற்றிய நேர அட்டவணை – வார நாட்கள் ஏழிலும் எந்த ஓரை எப்போது வரும் ?
கிரக ஓரை - ஹோரை நேர அட்ட்வணை - subha horai
ஹோரை அல்லது ஓரை என்பது என்ன?
ஹோரை என்பதஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம்.
ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.
சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.
அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.
இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் – இந்த ஹோரைகளில் துவங்கலாம்.
ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.
இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.
இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.
பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.
6 – 1- 8 – 3
சூரிய ஓரை :
சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.
இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.
சுக்கிர ஓரை :
சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.
புதன் ஓரை :
கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.
சந்திர ஓரை :
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.
சனி ஓரை :
இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.
குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.
செவ்வாய் ஓரை
செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.
===================================================
மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.
குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு – நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை…
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments
Job aspirants.who are trying for job..please use guru,chandran,shukran,budhan horai for mail applications
u will see positive response
Regards
saravanan