/* ]]> */
Jul 182018
 

ஸ்வீட்கார்ன் சீஸ் நக்கட்ஸ்- செய்வது எப்படி?

SWEETCORN CHEESE NUCKETS

தேவை: வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள்-1 தம்ளர்; கார்ன் ஃப்ளோர் மாவு- 4 தேக்கரண்டி; உருளைக் கிழங்கு-1; ப்ரெட் ஓரங்கள் (க்ரம்ஸ்), சீஸ் துருவல், சலித்த மைதா மாவு- தலா ¼ டம்ளர் ; மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி, எண்ணெய், உப்பு.

செய்முறை:

ஸ்வீட் கார்ன் முத்துக்களை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும். அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக் கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள் , கார்ன் ஃப்ளவர் மாவு , உப்பு சேர்த்துப் பிசையவும்.

பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டவும். அகலமான தட்டில் மைதா மாவுடன் ப்ரெட் க்ரம்ஸ் சேர்த்துக் கலக்கவும். உருட்டிய நக்கட்ஸ் களை மைதா கலவையில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அவற்றைப் போட்டுப் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சாஸ் சகிதம் பறிமாறவும்.

^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>